Friday, 21 November 2014

மூத்தப் பதிவருடன் கவிஞர்.நா.முத்துநிலவன்


 நா,முத்துநிலவன் அவர்களின் சென்னை சந்திப்பு
18.11.2014அன்று கவிஞர் .நா.முத்துநிலவன் அவர்கள் சென்னை வருவதாகவும் .அவர் வரும்முன் நான் புலவர்.ராமானுசம் ,கவிஞர் .மதுமதி ஆகியோரைப் பார்க்க விரும்புவதாகவும் அவர்களுக்கு தகவல் சொல்லிவிடுங்கள் என்றும் சொல்லியிருந்தார்.நான் அவரை மாம்பலம் தொடர்வண்டி நிலையத்தில் இறங்கி விடுமாறும் அங்கிருந்து உங்களை அழைத்துச் செல்கிறேன் என்றேன்


மாலை ஆறு மணிக்கு சொன்னபடியே நான் காத்திருந்து  அவரை நான் மாம்பலம்  தொடர்வண்டி நிலையத்திலிருந்து புலவர் அய்யா வீட்டுக்கு அழைத்துச் சென்றேன்.பின் கவிஞர்.மதுமதியும் உடன் சேர்ந்து கொண்டார்.அப்போது எங்களது கடந்த கால பதிவர் சந்திப்புகள் பற்றியும் நடைமுறை சிக்கல்கள் என்ன ?  நீங்கள் ஏன் வரவில்லை ?உங்களை அங்கு சந்திக்காதது எங்களுக்கு ஏமாற்றமாய் இருந்தது என்று சொல்லி . வருத்தப்பட்டார்.

பதிவர் சந்திப்பில் பார்க்க முடியாததால் நேரில் வந்து விசாரித்ததுடன் மூத்தப் பதிவர்.புலவர் அய்யா அவர்களை நேரில் கண்டு நலம் விசாரித்ததுடன் அடுத்த பதிவர் சந்திப்புக்கு ஆலோசனைகளையும் கேட்டு இன்னும் வரும்காலத்தில் எப்படி சிறப்பாக நடத்தலாம் என்று ஆலோசனை கேட்டறிந்தார்.பின்னர் அவர் எழுதிய "புதிய மரபுகள்"என்ற புத்தகத்தை மூவருக்கும்பரிசளித்தார்.

இவ்வளவு எளிமையான இனிமையான கவிஞரை சந்தித்தது எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தது

(கவியாழி)


17 comments:

 1. கடந்த வாரம் ஐயா அவர்களைச்
  சந்தித்து மகிழ்ந்த நினைவுகள்
  வந்து வந்து போனது
  பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. மரியாதைக்குரிய கவிஞர் ஆசிரியர் நா.முத்துநிலவன் அவர்கள், புதுக்கோட்டையில் நடைபெறவிருக்கும், அடுத்த வலைப்பதிவர் சந்திப்பிறகான ஆயத்தங்களில் இப்போதே தன்னை ஈடுபடுத்திக் கொள்ள ஆரம்பித்து விட்டார் என்பது மகிழ்ச்சியான செய்தி. அவருக்கு பாராட்டும் வாழ்த்துக்களும். இந்த நல்ல செய்தியை பகிர்ந்து கொண்ட கவிஞர் கவியாழி கண்ணதாசனுக்கு நன்றி!
  த.ம.4

  ReplyDelete
 3. ஐயாவின் புதுக்கோட்டை வேலை இப்பொழுதே தொடக்கமானது கண்டு சந்தோஷம்.

  ReplyDelete
 4. கவியாழி அய்யாவுக்குக் கனிவான வணக்கம். கடந்த 19-01-2014 அன்று சென்னைப் பொதிகைத் தொலைக்காட்சியின் நேர்காணல் பதிவிற்காக வருவதாகச் சொல்லி, முதல்நாளே வந்து, அய்யாவைப் பார்க்க வேண்டும் என்றதும் வந்து அய்யாவீட்டிற்கு அழைத்துச் சென்று அளவளாவி மகிழ்ந்த தருணங்களை மறக்க முடியாது அய்யா. வாரந்தோறும் (மாலைநேரம் 5.35-6.00மணிவரை) சனிக்கிழமை களில் ஒளிபரப்பாகும் “இலக்கிய ஏடு” பகுதிஅது. திசம்பர் முதல்வாரத்திற்கு மேல் வரும் என்று நினைக்கிறேன். தேதி உறுதியானதும் தெரிவிக்கிறேன். தங்களின் அன்பையும், எங்கள் தமிழாசிரியர் கழக மேனாள் மாநிலத்தலைவரும் இப்போதும் வலைப்பக்கத்தின் மூத்த பதிவருமான புலவர் அய்யா இராமாநுசம் அவர்களையும், இனிய நண்பர் மதுமதி அவர்களையும் சந்தித்த நேரம் இனிமையாக நெஞ்சில் இனிக்கிறது. மூத்த பதிவர்களின் அனுபவங்களை ஏற்று, இளைய பதிவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுத்து நமது வலைப்பதிவர் திருவிழாவைச் சிறப்பாக நடத்துவோம் அய்யா. மீண்டும் சந்திப்போம். தங்களுக்கும் நண்பர் மதுமதிக்கும் என் கனிவான வணக்கம். நம் புலவர் அய்யா அவர்களுக்கு என் பணிவான வணக்கத்தைக் கூறுங்கள்.நன்றி.

  ReplyDelete
  Replies
  1. பொதிகைத் தொலைக்காட்சிக்கான எனது நேர்காணலின் போது , என்னை அறியாமலே -ஏதும் திட்டமிடாமலே- நமது தமிழ்வலைப் பதிவர்களைப் பற்றியும், வலைப்பதிவு இலக்கியங்களைப் பற்றியும் சொல்லியிருக்கிறேன். பார்க்கலாம்..என்னென்ன வருகிறதென்று...

   Delete
 5. கவிஞர்கள் சந்திப்பு இனிமை
  அடுத்த ஆண்டு பதிவர் சந்திப்பிற்கு இப்பொழுதே பணியினைத் தொடங்கிவிட்டமை அறிந்து மகிழ்கின்றேன்

  ReplyDelete
 6. வணக்கம்

  மகிழ்ச்சியான நினைவு.... இதைப்போன்ற சந்திப்புக்கள் இன்னும் தொடரட்டும்..
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 7. இனிய நண்பரின் வருகையை பகிர்ந்தமைக்கு நன்றி!

  ReplyDelete
 8. நல்ல சந்திப்பு.
  புதுக்கோட்டை பதிவர் சந்திப்புக்கு இப்போதே வேலை ஆரம்பித்து விட்டாரா ஐயா... சந்தோஷம்...

  ReplyDelete
 9. ஹலோ! நண்பரே !
  இன்று உலக ஹலோ தினம்.
  (21/11/2014)

  செய்தியை அறிய
  http://www.kuzhalinnisai.blogspot.com
  வருகை தந்து அறியவும்.
  நன்றி
  புதுவை வேலு

  ReplyDelete
 10. இனிய சந்திப்பிள் புலவருடன் . முத்துநிலவன் ஐயா சகிதம் கவிஞர் மதுமதியைப்பார்த்ததும் சந்தோஸம் காட்சிப்பகிர்வுக்கு நன்றி கவியாழி.

  ReplyDelete
 11. கவிஞர்கள் சந்திப்பினைப் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 12. அருமையான கவிஞர்களின் சந்திப்பினை எங்களுக்கு சமர்ப்பித் உங்களுக்கு நன்றி ஐயா.

  அடுத்த வருட வலைப்பதிவர் சந்திப்புக்கு பணிகள் இப்போதே...ஆரம்பமா..நன்று நன்று.

  ReplyDelete
 13. அடடா தகவல் தெரியாமல் போய்விட்டதே. முடிந்தால் நானும் இணைந்திருப்பேனே. முத்து நிலவன் அவரளின் வலை ஆர்வம் வியக்க வைக்கிறது அடுத்த பதிவர் சந்திப்பு அசத்தலா இருக்கும் என்பதில் ஐயமில்லை

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்