அய்யா.ஆ.சிவலிங்கனார்.மறைவு-வாழ்த்துப்பா!
அய்யா.ஆ.சிவலிங்கனார் அவர்களுக்கு அஞ்சலி
10.07.2014 அன்று அய்யாவுடன் புலவர் குட்டியாண்டி (எ)திருநாவளவன்,
. புலவர்.இராமனுசம்,புலவர்.கி,த.பச்சியப்பன் மற்றும் அவரின் இரு மகன்களுடன் நானும்.
தங்கமான எங்களாசான்
**************
தங்கமான எங்களாசான் தமிழை மட்டும்
ஊட்டவில்லை, இளமையில் நாங்கள் செய்த
கொங்குதமிழ்க் குறும்புகளோ கொஞ்சமல்ல;
கோதில்லாப் படிப்புக்கும் பங்க மின்றி
மங்கையர் உடன்பயிலும் வகுப்பில் நீங்கள்
மாத்தமிழைக் கற்றலோன்றே குறியாய் நிற்பீர்
சங்கடங்கள் வந்துவிடும் சார்ந்த கல்வி
நின்றுவிடும் எண்ணியதைப் பாரீர் என்பார்;
பொங்குதமிழ் உணர்ச்சிக்குப் பொறுப்பு மாவார்
புரியவைக்கும் ஆற்றலிலும் பொறுமை காப்பார்
தங்குதடை இல்லாமல் தமிழில் பாட்டுத்
தந்திடுவார் மேற்கோள்கள் பலவும் காட்டி;
சங்கநூல்கள் சதுராடும் இவரின் வாயில்
சாந்துணையும் தமிழ்படிக்கத் தூண்டும் சொற்கள்
நுங்கினைப்போல் உண்டுண்டு மகிழ்ந்த நாளை
நும்மிடத்தில் எடுத்துரைக்கக் காலம் போதா!
இப்படியே நான்காண்டும் இவரிடத்தில்
கற்றகாலம் இன்றுவை என்றன் நெஞ்சில்
அப்படியே நிற்கிறதே என்ன சொல்வேன் !
அன்றொருநாள் நாவுக்க(ரசர்) நாடகத்தில்
அப்பூதி வேடத்தில் நடிக்கச் சொன்னார்;
அழகுத்தமிழ் உரையாடல்; சொக்கி நானும்
தப்பேதும் இல்லாமல் தனியே சென்று
தந்தபாடம் மா.நெல்லித் தோப்புக்குள்ளே
ஒத்திகைகள் பலபார்தேன் உடனி ருந்த
உயிர்த்தோழர் நற்றமிழும் நடிப்புங் கண்டார்
இத்திரையில் உனக்கீடு சிவாசி என்றார்;
இதற்குமேலே என்ன வேண்டும் ஏற?
புத்துணர்ச்சி தந்தார் என் நண்ப ரெல்லாம்
பொதுவுடமைக் கி.த.ப. சிரிப்பி லார்த்தார்
எத்தனையோ இடர்ப்பாடி தற்குப் பின்னே
என்னடிப்பில் குறைக்கானாப் புலவர் .வேதா
இரட்டணைரா மாநுசன்,கண்ணப்பன் போன்றோர்
எண்ணியதம் திராவிடத்தின் கொள்கை தன்னைத்
தரமுயன்றார் நாடகத்தில் என்றன் வாயால்;
தமிழ்பயிற்றும் மயிலமிதைத் தாங்கா தென்றேன்,
உரமுடன்நான் நாவலர்போல் உரைக்க வில்லை
ஒண்டமிழில் நாவுக்க ரசரே ! என்றேன்
நரிகளெனைக் கழட்டிவிடப் பார்த்த போது
நயமாக இவரிடத்தில் உண்மை சொன்னேன்.
நல்லதப்பா! நமக்கீது தீமை சேர்க்கும்
நாடகத்தில் அந்தவாடை நடவா வண்ணம்
சொல்லுதலே நன்றென்று நயமாய்ச் சொல்லி
நாவுக்கரசர் என்றழைக்கச் சான்று தந்தார்
நல்லதமிழ் விளையாட்டு நடந்த தன்று;
நாடகத்தில் நற்சான்றும் பரிசும் பெற்றேன்.
வல்லதமிழ் நாடகக் கண்ணார்.அ.கு.முக
வேலன்போன் றோரென்னை வாழ்த்துச் செய்தார்
ஆசி,பெற்றேன் அன்பு பெற்றேன்அன்று மின்றும்
ஆழ்ந்தபல நூலிலும் கற்றேன் பல்லோர் போற்ற;
நா.சிவலிங்கமென்னுமோர் சொல்லை நாளும்
நவிலுதற்கு நம்முருகன் அருள் பொழிந்தான்
பாசிறக்கும் நற்றமிழில் பாட வைத்த
பண்புநிறை இறைவிழியே! நன்றி ! நன்றி!
மாசிலுயர் தமிழை யென் மனத்தில் ஏற்றி
மாவலனின் தாள்போற்றி வணங்கு கின்றேன்.
நன்றி;"தேன்தமிழ்ப் பாமலர்கள் என்ற நூலிலிருந்து
(பாடலை எழுதியவர்; புதுவை எழில்நிலவன் (எ) புலவர்.சீனு.ராமச்சந்திரன்)
(கவியாழி கண்ணதாசன்)
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
ReplyDeleteதம2
ReplyDeleteநன்றி
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதொல்காப் பியக்கடலைத் தொடர்கின் றோர்க்குத்
ReplyDeleteதோன்றாத் துணையாகு முரைவி ளக்கம்!
பல்காப்பியம் படைத்தும் பெயரே இல்லாப்
பண்டிதர்கள் பலரிருக்கப் பண்டைச் சங்கச்
சொல்லாய்வில் இலக்கணத்தில் சோர்வை மாற்றும்
செந்தமிழை நந்தமிழாய்ச் செதுக்கித் தந்த
வல்லசவ லிங்கனார் வரலா றானார்!
வாழுதமி ழாகவெமில் வாழ்கின் றாரே!
இப்பெருமகனாரைப் பார்த்தில்லை.
ஆனால் தொல்காப்பிய உரைவளத்தின் இவர்பணியைப் படிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன்.
ஒருவரின் வாழ்நாளில் எவ்வளவு செய்ய முடியுமோ அதற்கு இரு மடங்காக இவர் செய்திருக்கிறார் என்று படிப்போர் அனைவருக்கும தோன்றச் செய்யும் பணி அவர் பணி.
இனியெல்லாம் இது போன்ற அறிஞர்களைத் தமிழில் காண்பது அரிது.
நன்றி அய்யா!
த ம 3
தங்களின் கூற்று சரியானது.நன்றி
Deleteபேராசிரியர். ஐயா ஆ சிவலிங்கனார் மறைவை அறிந்து பெரும் அதிர்ச்சி யுற்றேன்! கல்லூரியில் அவர் நடத்திய தொல்காப்பிய இலக்கண வகுப்பு இன்றும் நினைவில் நிற்கிறது! அவர் ஆன்மா சாந்தி பெற வேண்டுகிறேன்!
ReplyDeleteஅடிக்கடி அய்யா சிவலிங்கனார் பற்றி நீங்கள் சொல்லும்போதெல்லாம் ,நீங்கள் அவர் மீதுள்ள பற்றும் மரியாதையும் உணர்ந்துள்ளேன்.
Deleteஐயா ஆ.சிவலிங்கனார் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் ஐயா....
ReplyDeleteஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் ஐயா
இரங்கலுக்கு நனப்நன்றி
Deleteஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன் சகோதரரே!..
ReplyDeleteநன்றிங்க சகோ
Deleteஐயாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம். எங்க்ள் ஆழ்ந்த அனுதாபங்கள்!
ReplyDeleteஆசிரியருக்கு அஞ்சலி செலுத்திய கவிதை சிறப்பு! ஆழ்ந்த அஞ்சலிகள்!
ReplyDeleteநன்றி சுரேஷ்
Deleteபேராசிரியர் ஐயா ஆ.சிவலிங்கனார் மறைவிற்கு
ReplyDeleteநானும் துயர் பகிருகின்றேன்.
நன்றிங்க அய்யா
Deleteஆழ்ந்த இரங்கல்கள்
ReplyDeleteநன்றிங்க அய்யா
Deleteவணக்கம். தங்களது பதிவுகளைப் படித்துவருகிறேன். எனது வலைப்பூவில் கனவில் வந்த காந்தி என்ற பதிவில் தங்கள் பெயரை இணைத்துள்ளேன். பார்க்கவும் இணைப்பைத் தொடரவும் அழைக்கிறேன். நன்றி.
ReplyDeleteநானும் தங்களின் பதிவுகளைப் படிக்கிறேன்
Deleteஎங்கள் ஆழ்ந்த இரங்கல்கள்! பிரார்த்தனைகளுடன்!
ReplyDelete