தெய்வங்கள்

தெய்வங்கள்

சிறைபிடிக்கும் மழலைகளே....

மெல்ல மெல்ல தாவிவந்து 
மேனியோடு  சேர்ந்த ணைத்து
எல்லையில்லாக் குறும்பு செய்யும்
எனதருமைக் குழந்தைகளே

வண்ண மயில் போலவும்
வயதையொத்துப் பாடவும்
சின்னதாகக் கதையைச்  சொல்லி
சிரித்து விளை யாடவும்

எண்ணமெல்லாம் ஓரிடத்தில்
எளிதில் நம்மை வசப்படுத்தி
சின்னக் சின்னக் குறும்புகளில்
சிறைபிடிக்கும் மழலைகளே

பள்ளி செல்லும்போது மட்டும்
பார்வையாலே சிறைபிடித்து
எல்லையினைத் தாண்டிச் சென்று
ஏன்அழுது செல்லுகிறாய்

கண்ணெதிரே வளர்ந்துநீ
கல்வியிலும் சிறந்திடவே
புன்னைகையைத் தந்துவிட்டு
புகழுடனே நன்கு படிப்பாய்

(கவியாழி)






Comments

  1. பெற்றது ஒன்றே! பாடலும் நன்றே! உள்ளுள் ஏக்கம் ! அதனால் உறக்கமது நீக்கம் பொறுமை தந்திடுமே ஆக்கம்! புரிந்தால் சரி!!!!

    ReplyDelete
    Replies
    1. புரிந்தது மகிழ்சியே

      Delete
  2. மழலைகள் மனதை அறிந்து உணர்ந்து படைத்த ஆக்கம் கண்டு மகிழ்ந்தேன்
    வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றி சகோ

      Delete
  3. மிக அருமையான கவி நண்பரெ! ரசித்தோம்!

    ReplyDelete
  4. அருமை! மழலைகள் குறும்புகள் அனைவரையும் ரசிக்க வைக்கும் பள்ளிசெல்கையில் அவர்களது அழுகை நம்மை கலங்க வைக்கும்! சிறப்பாகச் சொன்னீர்கள்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இப்போது நல்ல அனுபவமாக இருக்குமே

      Delete
  5. கனவில் வந்த காந்தி

    மிக்க நன்றி!
    திரு பி.ஜம்புலிங்கம்
    திரு துளசிதரன் வி.தில்லைஅகத்து

    புதுவைவேலு/யாதவன் நம்பி
    http://www.kuzhalinnisai.blogspot.fr

    ("உலகம் சம நிலை பெற வேண்டும் உயர்வு தாழ்வு இல்லா நிலை வேண்டும்".)

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா.

    அருமையான கவி வரி கண்டு மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. மழலை அழகை வார்த்தைகளால் சிறைபிடித்து விட்டீர்கள் கண்ணதாசன் சார்.

    ReplyDelete
  8. "கண்ணெதிரே வளர்ந்துநீ
    கல்வியிலும் சிறந்திடவே
    புன்னைகையைத் தந்துவிட்டு
    புகழுடனே நன்கு படிப்பாய்" என்ற
    வழிகாட்டலை வரவேற்கிறேன்.
    தொடருங்கள்

    ReplyDelete
  9. பள்ளி செல்லும்போது மட்டும்
    பார்வையாலே சிறைபிடித்து
    எல்லையினைத் தாண்டிச் சென்று
    ஏன்அழுது செல்லுகிறாய்//

    எல்லோரும் அன்றாடம் காணும்
    காட்சிதான் ஆயினும் தங்கள்
    பார்வையில் ஒரு அற்புதமான கவியானது அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  10. எல்லையினைத் தாண்டிச் சென்று
    ஏன்அழுது செல்லுகிறாய் என்று எளிதாகப் பதிந்துவிட்டீர்கள். நான் பள்ளி செல்லும்போது பல முறை அவ்வாறு சென்றுள்ளேன். தங்களின் கவிதை எனது பள்ளி நாள்களை நினைவுபடுத்தியது.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை