Showing posts with label கவிதை/சமூகம்/ உண்மை. Show all posts
Showing posts with label கவிதை/சமூகம்/ உண்மை. Show all posts

Monday, 11 November 2013

ஆறடி நிலமும் உறுதியில்லை.....

ஆறடி நிலமும் உறுதியில்லை
அப்படி இருந்தும் சாதியாடா
அப்பனும் பாட்டனும் அறியாமல்
அன்றே வளர்த்தத் தீயடா

நித்தமும் உழைத்தே வாழ்கிறாய்
நேர்மையைப் பெரிதாய் மதிக்கிறாய்
புத்தமும் சொல்லும் போதனையை
புரிந்தே அறிந்தே வாழ்ந்திடுவாய்

கற்பனை வாழ்க்கை அறுதியில்லை
கண்டதும் கேட்பதும் உண்மையில்லை
அற்பனாய் வாழ்ந்திட முயலாதே
அடிமை கொண்டே  வருந்தாதே

உயர்வு தாழ்வு பார்க்காமல்
உன்னில் வேற்றுமை காணாமல்
உயர்ந்த நெறியில் வளர்ந்தேநீ
உயர்வாய் மகிழ்வாய் பிறப்பாலே

ஒற்றுமை என்பதே உயிர்மூச்சாய்
ஒழுக்கம் நன்றே முதலீடாய்
கற்பதை நன்றே புரிந்துகொண்டு
காப்பாய் நீயும் அமைதிகொண்டு

இனத்தில் நாமும் தமிழனாக
இந்தியத் தேசத்தின் புதல்வனாக
உணர்வாய் மனதில் முதல்வனாக
ஒற்றுமை கொள்வோம் மனிதனாகThursday, 10 October 2013

நானும்இறைவனே

படைப்பில் நானும் இறைவனே
பண்பாய் நானும் தினமுமே
பாட்டாய் எழுதித் தருவேனே
பதிலும் தினமும் கொடுப்பனே

உருகி உருகி எழுதியும்
உணர்ச்சி மிகுந்தே சொல்லியும்
உண்மைத் தன்மை மாறாது
உள்ளதை நன்றே சொல்வேனே

எதுகை மோனை எழுத்திலே
என்றும் தொடர்ந்தே காப்பேனே
எல்லா நேரமும் நல்லதாய்
எதையும் எழுதி விடுவேனே

காதல் காமம் எழுதுவேன்
கண்ணீர் வந்திட சொல்லுவேன்
ஊர்கள் சென்றதை சொல்லுவேன்
உணர்ச்சிப் பொங்கிட எழுதுவேன்

மனதில் தோன்றும்  எல்லாமே
மகிழ்ச்சிக் கொண்டே  எழுதியே
மக்கள் என்னை ஒதுக்கும்வரை
மகிழ்வாய் கவிதை படைப்பேனே


அழகாய் கவிதை படைப்பதால்
அன்பாய் நாளும் இருப்பதால்
அனைவரும் என்னை விரும்புவதால்
அதனால் நானும் இறைவனேFriday, 9 August 2013

கண்தானம் செய்வீர்.........


               

கண்ணே விழியே கயல்விழியே
காண்பது அனைத்தும் உன்எழிலே
என்னே சிறப்பு நான் பார்க்க
எப்படி இறக்கும் நீ நோக்க

எங்கினும் கண்டிடும் எழிலழகை
எல்லா நிறத்தின் கலையழகை
அறிந்தவர் தெரிந்தவர் அனைவரையும்
அறியத்தானே கண் படைத்தான்

இப்படி சிறந்த அவயத்தை
எப்படி வீணாய் அழித்திடலாம்
 இறந்தும் தானம் கொடுத்திட்டால்
எழிலை மீண்டும் பார்த்திடலாம்

ஆணோ பெண்ணோ அனைவருமே 
அவயம் உதவும் மனமிருந்தால்
கண்ணின் மணியைத் தந்திடலாம்
கடவுள் படைப்பாய் வாழ்ந்திடலாம்

இறந்ததும் உலகம் இருண்டதாய்
இப்படி நாமேன் யோசிக்கணும்
இரண்டு விழிகளும் தானம்செய்வீர்
இருவர் வாழ்வில் ஒளிகொடுப்பீர்

இதயங்கள் போற்ற வாழுங்கள்
இறைவனின்செயலைச் செய்யுங்கள்
விழியே இன்றி வாழ்வோருக்கு
விடியல் கிடைத்திட உதவுங்கள்

Friday, 26 July 2013

வாழ்க்கை எனக்கும் கொடுக்கிறார்....


அயல்நாட்டு முதலீடும்
ஆலைகள் பல முடுவதும்

நாறிக் கிடக்குது விதியென்று
நான் சொல்ல நா கூசுது......
 

பொருளாதார வீழ்ச்சியாய் சொல்கிறார்
பொறுமையும் வேண்டு மென்கிறார்
வறுமையை ஒழிப்பதாய் துடிக்கிறார்
வாழ்வதற்கு முடியுமென்றும் உரைக்கிறார்

எத்தனையோ தொழில்கள் முடங்கியதை
ஏதுமே அறியாதவராய் இருக்கிறார்
ஏற்றத் தாழ்வும் இருந்தாலும் 
ஏழையே இல்லையென்றும் சிரிக்கிறார்

பண்ணாட்டு வணிகத்தால் பணமும்
பலருக்குமே  வேலை இழப்பும்
உள்நாட்டு மக்களின் தவிப்பும்
உள்ளபடி நல்லதாய் படிக்கிறார்

அரசியலுக்கு லாபமாய் நினைக்கிறார்
அனைவருக்கும் உள்ளதாக  சொல்கிறார்
வரிகளையே உயர்த்திக் கூட்டி
வருடந் தோறும் சேர்க்கிறார்

வாங்குகின்ற ஊதியத்தைச் சரியாய்
வஞ்சனை யின்றிப் பிடிக்கிறார்
வாழ்வதற்கு  மட்டும் கஷ்டமான
வாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார்Friday, 5 July 2013

மனிதம் போற்றி வாழ்ந்திடவே

மதமும் மொழியும் மக்களையே
மனிதம் போற்றி வாழ்ந்திடவே
தினமும் அதையேச் சொன்னாலும்
தீமைச் செயலைச் செய்வதுமேன்

பகைமை மனதில் வேண்டாமே
பார்க்கும் இடங்கள் எங்கெங்கும்
தகைமை இல்லா நிகழ்ச்சியால்-பகையே
தொடர்ந்து வளர்ந்து  வருகிறதே

உறவைக் கெடுத்து வருகிறதே
உள்ளம் சிதறி விடுகிறதே
பொறுமை இல்லா மனத்தையே-அது
பெரிதும் தாக்கி அழிக்கிறதே

இளையோர் முதியோர் எல்லோர்க்கும்
இப்படி நிலைமை ஆவது ஏன்
இயந்திர உலகில் இப்போதும்-தீர்க்க
இதனைப் போக்க மருந்தில்லையோ

தந்திரம் செய்து தவறிழைக்கும்
தரித்திரக் காரன் திருந்தினாலே
வந்திடும் வினைகள் தீருமே-மக்கள்
வாழ்கைவும் சிறப்பாய்  இருக்குமே

சிந்தனை இதனை செய்யுங்கள்
சிறந்ததை முறையே சொல்லுங்கள்
சிந்தும் ரத்தம் வேண்டாமே-வாழ்வே
சிறக்க  முனைந்தே வாழ்ந்திடுங்கள்

துயரம் கொள்ள வேண்டாமே
துணையாய் உறவை கண்டாலே
மனிதநேயம் போற்றினால்-பகைமை
மறந்துப் பாசம் வளர்க்கும்

Wednesday, 26 June 2013

புனிதக் கல்விப் பணிசெய்விரே....

மனதை ஒன்றாய் நிலைப்படுத்தி
மக்களின் செயலை முறைப்படுத்தி
மானுடம் போற்றி வளப்படுத்தி
மனதைக் காப்போம் திடப்படுத்தி

நல்லோர்  பலரின் சொல்லையுமே
நலிந்தோர் சிலரின் வாழ்கையுமே
கல்வியில் சிறந்த மாண்பையுமே
கற்றதில் நல்லதை போற்றுவோமே

இல்லா நிலையில் உள்ளவர்க்கும்
இனிதே கல்வியை தொடர்பவருக்கும்
பொல்லா பணத்தை கொடுக்காமல்

ஒழுக்கம் சிறக்கச் சொல்லுங்கள்
உயரும் வழியைக் காட்டுங்கள்
உழைத்தே சிறக்கும் நல்வழியை
உயர்வாய் சொல்லித் தாருங்கள்

இளையோர் இன்றும் நேர்மையதை
இனிதாய் போற்றி வாழ்கின்றனர்
துணையாய் படித்த கல்வியது
தூய்மைப் படுத்தியது உண்மையன்றோ

Saturday, 22 June 2013

விட்டுப் போன உறவு

விட்டுப்போன உறவும்
வேதனைகள் சிலதும்
பட்டுபோயும் நாளாச்சு
பார்த்துத் தூரப்போயாச்சு

கட்டுகடங்கா அன்பில்
கடைசிவரை இருக்க
காத்திருந்த நட்பும்
காலங்கடந்துப் போயாச்சு

தொட்டுப் பேசி மகிழ்ந்து
துன்பம் மறந்து சிரித்தோம்
கட்டுக்கதைப் பலதால்
கவலையிப்போ வந்தாச்சு

கெட்டுப் போன மனதை
திட்டிப்பேசிக் கேட்க
தைரியம் தூரப் போயாச்சு
தவிப்பு கொண்டே நின்னாச்சு

தட்டுப் பட்டு மீண்டும்
 தலை
குனிந்தே வேண்டி
புட்டுப் பார்க்கச் சொல்லி
புரியாம மின்று தவிச்சாச்சு

Monday, 10 June 2013

தினமும் பார்த்தேச் சிரித்திடுமாம்

ஒவ்வொரு உயிருக்கும் உணர்ச்சியுண்டு
உண்மையில் அதற்குமே வருத்தமுண்டு
பூவும் பிஞ்சும் உதிர்வதனால் பெற்றவள்
மரத்துக்கும் செடிக்கும் பிரிவுண்டு

பொல்லா நோயும் வரும்போதும்
பொழுதும் தலையைச் சாய்த்திடுமே
எல்லா உயிரும் மரணத்திலே
ஏக்கம் கொண்டே மடிந்திடுமே

இடியும் மழையும் வரும்வேளை
மனதில்  மகிழ்ந்தே இருந்திடுமே
இயற்கை சீற்றம் வரும்போது
எளிதில் பயந்தே சரிந்திடுமாம்

நீரைச் சுவைத்தே வாழ்த்திடுமாம்
நிம்மதி கொண்டேப்  பாடிடுமாம்
தேரைப் பாம்பு பூச்சிகளை
தினமும் பார்த்தே சிரித்திடுமாம்

இயற்கைப் பொய்த்துப் போனாலே
எல்லா உயிரும் கலங்கிடுமாம்
எப்படி மனித வாழ்க்கையோ
 அதற்கும் அப்படி உயிருண்டாம்
Friday, 31 May 2013

மனதிலே அன்பிருந்தால்...


இப்போது வணங்கும் இறைவனே
முற்போது வாழ்ந்த மனிதனே
வெவ்வேறு வுருவில் வணங்குவர்
வேதமும் சொல்லுமெனக் கூறுவர்

கல்லாக வீசுகின்ற காற்றாக
இல்லாத உருவாய் கூறுவர்
நில்லாத நிலையிலும் ஆடுவர்-சாமி
நேரில் வந்ததாய் கூறுவர்

கல்லாமை இல்லாதோர் வணங்கிடும்
இல்லாத உருவமே கடவுளே
பொல்லாத வைத்தியம் சொல்லுவர்
பேரதிர்ச்சி நடக்குமென கூறுவர்

இயற்கையே கடவுள் என்றிருந்தால்
எதற்குக் கோயிலும் குருக்களும்
அதற்குப் அன்றாடம் பூசையும்
ஆடும் கோழியும் வேண்டாமே

இல்லற வாழ்வை துறந்துதான்
இறைவனைக் காண முடியுமானால்
இறைவனின் தூதனாய் இருப்பவரும்
இல்லறம் தவிர்த்து இருக்கலாமே

மனதிலே அன்பைக் கொண்டிருந்தால்
மனிதனை நண்பனே என்றிருந்தால்
துணிவையே மனதினில் வளர்த்திருந்தால்
துணைக்கு சாமியும் வேண்டுமா

Tuesday, 14 May 2013

கத்திரி வெய்யிலை வெல்லுவோம்

ஆண்டில் சிலநாள் இதுபோல
ஆருடம் பலநாள் சொல்லிவரும்
தாண்டவ மாடும் வெய்யிலில்-சூரியன்
தகதக வெனவே எரிந்திடுமாம்

மரமும் செடியும் காய்வதற்கும்
மாடுகள் ஆடுகள் மடிவதற்கும்
தினமும் சிலபேர் மடிவதற்கும்-கதிரவன்
தீக் கதிரை வீசுவதேன்

மக்கள் துயரில் வாழ்வதற்கும்
மலையை நோக்கிச் செல்வதற்கும்
அக்கம் பக்கம் எல்லோரும்-சூடாய்
அலைந்தே திரிய வைப்பதுமேன்

சின்னஞ் சிறுவர் பெரியோரை
சீண்டும் கொடுமைக் காரணத்தால்
எண்ணம் யாவும் சுட்டெரிக்கும்-உடலில்
எல்லா நோயும் சேர்ந்திடுமே

வெய்யிலில் நாளும் அலைவதற்கு
வேறுவழியை தெரிந்தெடுத்து நாம்
வீணாய் சுற்றி வருவதையே-கொஞ்சம்
வேதனையோடு நிறுத்தி வைப்போம்

குளுர்சியான உணவுகளும் நன்றே
குளிர்மைப் பானைத் தண்ணீரும்
மகிழ்ச்சியான காய்கனிகள்-பச்சை
மனதில் தருமே உற்சாகம்

இந்த வேதனை எனக்குமே
இன்றும் இங்கே உள்ளதால்
நொந்த நிலையும் இதுவாகும்-உங்கள்
நோயை நீவிர்த் தடுப்பீரே
Wednesday, 24 April 2013

நான் புலமை அறிந்தப் புலவனில்லை


இலக்கணம் முழுதாய் கற்றவ னில்லை
இலக்கியம் நாளும் படிப்பது மில்லை
வழக்கிலே வருகின்ற மொழியாலே-தமிழ்
வார்த்தைக் கொண்டே எழுதிடும் நானே

புலமை அறிந்த புலவனு மில்லை
பொழுதும் எழுதும் கவிங்ஞனு மில்லை
அனைத்தும் தெரிந்த அறிங்ஞனு மில்லை-வழக்கில்
அறிந்ததை கொண்டேஎழுதுவதென் நெல்லை

முனைவராய் நானே படித்தது மில்லை
முறையே தமிழைக் கற்றது மில்லை
பிழையாய்க் கருத்தைச் சொல்வதுமில்லை-இதையே
பிழைப்பாய்க் கொண்டு வாழ்வது மில்லை

பணியால் முடங்கி போகும் போதும்
பார்பவர்க் கலங்கி வருந்தும் போதும்
துணையாய் நின்று ருகும் போதும்-எனக்கு
துன்பம் மறக்கக் கவிதை எழுதுகிறேனே

அறிந்தோர் என்னை அறியச் செய்வீர்
அதையும் நன்கு திருந்தச் சொல்வீர்
புரிந்தோர் நிலையை புரிந்து கொண்டு-கவிதை
புனையத் தொடர்ந்து புகழைத் தாரீர்Thursday, 18 April 2013

காரணம் நிச்சயம் பணமாமே

பாட்டிச் சமையலை புசித்தீரா
பாட்டன் கதையை கேட்டீரா
பணமும் அதிகம் செலவில்லை-உறவு
பண்பே குறைந்தும் போவதில்லை

அங்கும் இங்கும் அலைவதனால்
அறமே மறந்து வாழ்வதினால்
பண்பும் கெட்டு வாழ்கிறார்-இதையே
படித்தவர் தானே செய்கின்றார்

கற்பனையான வாழ்க்கைதனை
காணத்தானே  தவறு செய்யும்
சிற்சில மக்களின் தவறுகளால்-மகிழ்ச்சி
சிதறிடும் வாழ்க்கை நியாயமா

தேடி எங்கும் செல்லாமல்
தெய்வம் வந்து சொல்லாமல்
கூட்டம் கூடி வாழ்ந்தாலே -நன்மை
கோடிப் புண்ணியம் கூடுமே

பெற்றோர் துணையும் இல்லாமல்
பிறிதொரு வாழ்க்கைத் தனியாக
கற்பனை கொண்டவாழ்க்கைக்கு-உண்மைக்
காரணம் நிச்சயம் பணமாமே