Friday, 5 July 2013

மனிதம் போற்றி வாழ்ந்திடவே

மதமும் மொழியும் மக்களையே
மனிதம் போற்றி வாழ்ந்திடவே
தினமும் அதையேச் சொன்னாலும்
தீமைச் செயலைச் செய்வதுமேன்

பகைமை மனதில் வேண்டாமே
பார்க்கும் இடங்கள் எங்கெங்கும்
தகைமை இல்லா நிகழ்ச்சியால்-பகையே
தொடர்ந்து வளர்ந்து  வருகிறதே

உறவைக் கெடுத்து வருகிறதே
உள்ளம் சிதறி விடுகிறதே
பொறுமை இல்லா மனத்தையே-அது
பெரிதும் தாக்கி அழிக்கிறதே

இளையோர் முதியோர் எல்லோர்க்கும்
இப்படி நிலைமை ஆவது ஏன்
இயந்திர உலகில் இப்போதும்-தீர்க்க
இதனைப் போக்க மருந்தில்லையோ

தந்திரம் செய்து தவறிழைக்கும்
தரித்திரக் காரன் திருந்தினாலே
வந்திடும் வினைகள் தீருமே-மக்கள்
வாழ்கைவும் சிறப்பாய்  இருக்குமே

சிந்தனை இதனை செய்யுங்கள்
சிறந்ததை முறையே சொல்லுங்கள்
சிந்தும் ரத்தம் வேண்டாமே-வாழ்வே
சிறக்க  முனைந்தே வாழ்ந்திடுங்கள்

துயரம் கொள்ள வேண்டாமே
துணையாய் உறவை கண்டாலே
மனிதநேயம் போற்றினால்-பகைமை
மறந்துப் பாசம் வளர்க்கும்

30 comments:

 1. ஒவ்வொருவரும் உணர வேண்டியது வரிகள்... வாழ்த்துகள் ஐயா...

  ReplyDelete
  Replies
  1. இன்று முழுதும் இன்பம் தரும் உங்கள் வரவு நல்வரவாகுக

   Delete
 2. ரசித்து உணர வேண்டிய வரிகள்..

  ReplyDelete
 3. மனிதநேயம் போற்றினால்-பகைமை
  மறந்துப் பாசம் வளர்க்கும்

  >>
  இன்றைய காலகட்டத்துக்கு நினைவில் கொள்ள வேண்டிய வரிகள்

  ReplyDelete
  Replies
  1. அடுத்தவங்களுக்கும் அறிவுரைச் சொல்லலாமே .நன்றி

   Delete
 4. .. சிந்தனை இதனை செய்யுங்கள்
  சிறந்ததை முறையே சொல்லுங்கள்
  சிந்தும் ரத்தம் வேண்டாமே-வாழ்வே
  சிறக்க முனைந்தே வாழ்ந்திடுங்கள் ...

  மிக ரசித்தேன் தங்கள் வரிகளை...

  ReplyDelete
  Replies
  1. வாருங்க தொடந்து ஆதரவு தாங்க

   Delete
 5. இன்றைய நிலைக்கு அவசியம்
  தேவையான கருத்து
  அருமையான படைப்புக்கு வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கு நன்றி

   Delete
 6. மனிதநேயம் போற்றினால்-பகைமை
  மறந்துப் பாசம் வளர்க்கும்//

  மனித நேயம் வளர்ப்போம்.
  நல்ல கவிதை .
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்கம்மா

   Delete
 7. அன்புள்ள

  வணக்கமுடன் ஹரணி.

  திரு ஜெயக்குமார் வலைப்பூவில் தங்களைக் கண்டு தஙகள் பதிவிற்கு வரவேண்டும் என்றெண்ணி இன்றுதான் வாய்ப்பமைந்தது.

  மனிதநேயம், அன்பு, பரிவு. சாதிபேதமின்மை இவற்றுக்குத்தானே காலங்காலமாய் படைப்பாளிகள் போராடிக்கொண்டிருக்கிறோம்.

  சமுதாயமும் மாற்றங்களை அவவ்ப்போது சந்தித்துக்கொண்டுதான் வந்திருக்கிறது.

  நிச்சயம் நன்மை விளைந்தே தீரும்.

  வாழ்த்துக்கள்.

  எளிமையான கவிதை வரிகள். யதார்த்த அழகு.

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி,தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

   Delete
 8. மனிதம் போற்றுமே மானிடர் யாவரும்
  புனிதம் வேறிலை புரிந்திடும் என்றுமே
  இனிதாய் உணர்ந்திட இயம்பினீர் பாவிலே
  கனிவாய் நானுமே கூறினேன் நன்றியே!

  சிறந்த கருத்து! அருமை!
  வாழ்த்துக்கள் சகோ!

  த ம.5

  ReplyDelete
  Replies
  1. மனிதமே போற்றினால் வராது மதச்சண்டை சாதிசன்டையே ....

   Delete
 9. அருமையான படைப்பு! //மனிதநேயம் போற்றினால்-பகைமை
  மறந்துப் பாசம் வளர்க்கும்// உண்மை! கடைபிடிப்போம்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆமாங்க சுரேஷ் இப்போ சொல்ல வேண்டிய கருத்து இதுதானே.வருகைக்கு நன்றி

   Delete
 10. காலத்திற்கேற்ற வரிகள்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ,கிரேஸ்.ஒருசிலருக்காவது புரிந்தால் சரிதான்

   Delete
 11. //இதனைப் போக்க மருந்தில்லையோ// மனம் கனக்கிறது..
  //சிந்தனை இதனை செய்யுங்கள்
  சிறந்ததை முறையே சொல்லுங்கள்//
  ஒவ்வொரு வரியும் அருமை ஐயா!

  ReplyDelete
  Replies
  1. உழைக்கும் வர்க்கம் மட்டுமே இம்மாதிரி சண்டையிட்டு வருகிறார்கள்.உயர்ந்த மனிதர்கள் இதைப் பற்றிக் கவலைபடுவதில்லை

   Delete
 12. உணர வேண்டிய வரிகள் அய்யா
  மனிதம் போற்றுவோம்

  ReplyDelete
  Replies
  1. எல்லோரும் எப்போதும் மனிதம் போற்ற வேண்டும்

   Delete
 13. ஒவ்வொருவரும் உணர்ந்து பின்பற்ற வேண்டிய கருத்துகள்.

  ReplyDelete
  Replies
  1. எல்லோருக்குமே எப்போதுமே மனிதநேயம் போற்றினால் சண்டை வராது

   Delete
 14. மனிதன் வாழ வேண்டிய முறைகளைச் சொல்லும் இன்னொரு ஆசாரக்கோவை.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஆதிரை.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க

   Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்