வாழ்க்கை எனக்கும் கொடுக்கிறார்....
அயல்நாட்டு முதலீடும்
ஆலைகள் பல முடுவதும்
நாறிக் கிடக்குது விதியென்று
நான் சொல்ல நா கூசுது......
பொருளாதார வீழ்ச்சியாய் சொல்கிறார்
பொறுமையும் வேண்டு மென்கிறார்
வறுமையை ஒழிப்பதாய் துடிக்கிறார்
வாழ்வதற்கு முடியுமென்றும் உரைக்கிறார்
எத்தனையோ தொழில்கள் முடங்கியதை
ஏதுமே அறியாதவராய் இருக்கிறார்
ஏற்றத் தாழ்வும் இருந்தாலும்
ஏழையே இல்லையென்றும் சிரிக்கிறார்
பண்ணாட்டு வணிகத்தால் பணமும்
பலருக்குமே வேலை இழப்பும்
உள்நாட்டு மக்களின் தவிப்பும்
உள்ளபடி நல்லதாய் படிக்கிறார்
அரசியலுக்கு லாபமாய் நினைக்கிறார்
அனைவருக்கும் உள்ளதாக சொல்கிறார்
வரிகளையே உயர்த்திக் கூட்டி
வருடந் தோறும் சேர்க்கிறார்
வாங்குகின்ற ஊதியத்தைச் சரியாய்
வஞ்சனை யின்றிப் பிடிக்கிறார்
வாழ்வதற்கு மட்டும் கஷ்டமான
வாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார்
கேட்பதோடு சரி... உண்மையை காண்பதில்லை... ஏன் ?நினைப்பதே இல்லை... அதனால்...........
ReplyDeleteஆம்.மக்களைப் பற்றிக் கவலையில்லை .மக்களவை மட்டுமே தொலைநோக்கு எல்லை
Deleteஇங்கு அரசியல் வாதிகள் பிழைத்தால் மட்டும் போதும்
ReplyDeleteமக்களைப் பற்றிக் கவலையில்லை மக்களவைப் பற்றித்தான் கவலை
Deleteகவிஞர் அப்துல் ரகுமானின் ...வெளியேறு என்றால் எருமையே வெளியேறாது ,வறுமையா வெளியேறும் ...என்கிற கவிதை வரிகளை நினைவுபடுத்துகிறது உங்கள் கவிதை !
ReplyDeleteநன்றிங்க பகவான்.எல்லோருமே இந்நாட்டின் மன்னர்கள்தான் அதாவது ஏழைகள்தான் அரசியல்வதிகலித் தவிர.ஆம்
Deleteவாழ்வதற்கு மட்டும் கஷ்டமான
ReplyDeleteவாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார்
வஞ்சகர் வலை வீச்சு ..!
என்ன செய்வது நானும் வாழ வேண்டுமே
Delete.. வாழ்வதற்கு மட்டும் கஷ்டமான
ReplyDeleteவாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார் ..
சரிதான்...
உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை
Deleteவாழ்வதற்கு மட்டும் கஷ்டமான
ReplyDeleteவாழ்க்கை எனக்குக் கொடுக்கிறார்
>>
உங்களுக்கு மட்டுமில்லை. எல்லோருக்கும்தான்
வாழ்க ஜனநாயகம் என்று மட்டும் சொல்லுங்கள்
Deleteகஷ்டமான வாழ்க்கையைத்தான் இஷ்டப்பட்டு வாழ் வேண்டியதாக உள்ளது.
ReplyDeleteகாலத்தின் கட்டாயம் என்ன செய்வது
Deleteவித்தியாசமான கவிதை
ReplyDeleteஉண்மைதான் .
Deleteம்..பட்டையக் கெளப்புங்க..
ReplyDeleteஆட்டத்தை போடுங்க
Deleteநல்ல சிந்தனை சகோ!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
தேவை இருந்தாற்தான் தேடும் முயற்சி வரும்...
வாழ்க்கையில் கஷ்டமும் இருந்தால்தான்
அதைப் போராடி வெற்றி கொள்ள ஆவலும் வரும்.!
நிறையபேருக்கு போராட்டமே வாழ்க்கையாகிவிட்டது
Deleteஅவர் எவர் கவிஞரே!
ReplyDeleteஎல்லோருக்கும் தெரிந்த நல்லவர்.
Deleteபணத்தை மட்டுமே நோக்கி ஓடும் வாழ்க்கையில் எந்தவித இன்பமுமேயில்லை.களைப்புமட்டும்தான் !
ReplyDeleteமனமில்லாதோர் சேர்ப்பது பணம் மட்டுமே என்பதுதான் உண்மை
Delete