ஆறடி நிலமும் உறுதியில்லை.....
ஆறடி நிலமும் உறுதியில்லை
அப்படி இருந்தும் சாதியாடா
அப்பனும் பாட்டனும் அறியாமல்
அன்றே வளர்த்தத் தீயடா
நித்தமும் உழைத்தே வாழ்கிறாய்
நேர்மையைப் பெரிதாய் மதிக்கிறாய்
புத்தமும் சொல்லும் போதனையை
புரிந்தே அறிந்தே வாழ்ந்திடுவாய்
கற்பனை வாழ்க்கை அறுதியில்லை
கண்டதும் கேட்பதும் உண்மையில்லை
அற்பனாய் வாழ்ந்திட முயலாதே
அடிமை கொண்டே வருந்தாதே
உயர்வு தாழ்வு பார்க்காமல்
உன்னில் வேற்றுமை காணாமல்
உயர்ந்த நெறியில் வளர்ந்தேநீ
உயர்வாய் மகிழ்வாய் பிறப்பாலே
ஒற்றுமை என்பதே உயிர்மூச்சாய்
ஒழுக்கம் நன்றே முதலீடாய்
கற்பதை நன்றே புரிந்துகொண்டு
காப்பாய் நீயும் அமைதிகொண்டு
இனத்தில் நாமும் தமிழனாக
இந்தியத் தேசத்தின் புதல்வனாக
உணர்வாய் மனதில் முதல்வனாக
ஒற்றுமை கொள்வோம் மனிதனாக
அப்படி இருந்தும் சாதியாடா
அப்பனும் பாட்டனும் அறியாமல்
அன்றே வளர்த்தத் தீயடா
நித்தமும் உழைத்தே வாழ்கிறாய்
நேர்மையைப் பெரிதாய் மதிக்கிறாய்
புத்தமும் சொல்லும் போதனையை
புரிந்தே அறிந்தே வாழ்ந்திடுவாய்
கற்பனை வாழ்க்கை அறுதியில்லை
கண்டதும் கேட்பதும் உண்மையில்லை
அற்பனாய் வாழ்ந்திட முயலாதே
அடிமை கொண்டே வருந்தாதே
உயர்வு தாழ்வு பார்க்காமல்
உன்னில் வேற்றுமை காணாமல்
உயர்ந்த நெறியில் வளர்ந்தேநீ
உயர்வாய் மகிழ்வாய் பிறப்பாலே
ஒற்றுமை என்பதே உயிர்மூச்சாய்
ஒழுக்கம் நன்றே முதலீடாய்
கற்பதை நன்றே புரிந்துகொண்டு
காப்பாய் நீயும் அமைதிகொண்டு
இனத்தில் நாமும் தமிழனாக
இந்தியத் தேசத்தின் புதல்வனாக
உணர்வாய் மனதில் முதல்வனாக
ஒற்றுமை கொள்வோம் மனிதனாக
// கற்பதை நன்றே புரிந்துகொண்டு...
ReplyDeleteகாப்பாய் நீயும் அமைதிகொண்டு... //
அருமையாச் சொன்னீர்கள்... வாழ்த்துக்கள்...
நன்றிங்க தனபாலன்.ரமணி அய்யா தளத்தில்தான் உலா வருகிறார்
Deleteஆறடி நிலமும் உறுதியில்லை
ReplyDeleteஅப்படி இருந்தும் சாதியாடா
அப்பனும் பாட்டனும் அறியாமல்
அன்றே வளர்த்தத் தீயடா
உண்மைதான்!
உங்கள் வருகைக்கு நன்றிங்கயா
Deleteஇப்பூவுலகில் எதுவுமே நிலையில்லை. ஆனாலும் போட்டி, வஞ்சம் , பொறாமைக்கு குறைவில்லை. கருத்தாழம் மிக்க கவிதை ஐயா. மிகவும் இரசித்தேன்.
ReplyDeleteசாதியே நம் கலாச்சாரமாயிடுச்சு என்பதே பிரச்சினை. இளவரசன் திவ்யா காதலால் இப்போ இழப்பு யாருக்கு? அவளுக்கு அப்பா இல்லை. இளவரசனை பெற்றவர்களுக்கு மகன் இல்லை! நம்ம எல்லாரும் திட்டிப்புட்டு, வருந்திவிட்டு நம்ம பொழைப்பைப் பார்க்கிறோம். அதேபோல் திவ்யாவும், இளவர்சன் பெற்றோர்களும் செய்யமுடியாது. ஒரு சில உயிர்களை காப்பதற்காகவாவது, சாதியை மறந்து பிறசாதியினரை விருந்தினராக வரவேற்கலாம். அதேபோல் வன்னியர்கள் செய்து இருக்கலாம்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி
Deleteஆறடி நிலமும் உறுதியில்லை
ReplyDeleteஅப்படி இருந்தும் சாதியாடா
அப்பனும் பாட்டனும் அறியாமல்
அன்றே வளர்த்தத் தீயடா/
அழுத்தமாகச் சொன்னவிதம்
மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்/
உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
Delete// இனத்தில் நாமும் தமிழனாக
ReplyDeleteஇந்திய தேசத்தின் புதல்வனாக
உணர்வாய் மனதில் முதல்வனாக
ஒற்றுமைக் கொள்வோம் மனிதனாக //
நிச்சயம் ஒற்றுமையாக இருக்கவேண்டும்...
உங்கள் வருகைக்கு நன்றி
Deleteஅருமை.. வாழ்த்துக்கள்..
ReplyDeleteஉங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி
Deleteநல்ல கவிதை கவியாழி அவர்களே
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி
Deleteஎதுவுமே நமக்கு நிலையில்லை என்பதை உணர்ந்தால் ஏன் தொல்லை.... மனிதனாக உணர இன்னும் எத்தனை காலங்கள் காத்திருக்க வேண்டுமோ தெரியவில்லை... கவிதை அருமை சார்...
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி
Delete//கற்பனை வாழ்க்கை அறுதியில்லை
ReplyDeleteகண்டதும் கேட்பதும் உண்மையில்லை//
அருமையான வரிகள்; உண்மையான வரிகளும் கூட!
உங்கள் வருகைக்கு நன்றி
Deletev. v. nice
ReplyDeleteவாழ்க்கை தத்துவம் அருமை! சிறப்பான கவிதை! நன்றி!
ReplyDeleteகருத்துள்ள கவிதை
ReplyDeleteஉங்கள் வருகைக்கு நன்றி
Deleteநல்ல [க ]விதை போட்டுள்ளீர்கள் ...அனைவரின் நெஞ்சிலும் இந்த விருட்சம் படர்ந்தால் சா'தீய'ப் பிரச்சினைகள் தீய்ந்துவிடும் !
ReplyDeleteஉங்கள் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி
Deleteஉங்களக்கு நன்றி
ReplyDeleteஅருமையான கவிதை.
ReplyDeleteபாராட்டுகள்.
பாராட்டுக்கு நன்றி
Delete///உயர்வு தாழ்வுப் பார்க்காமல்
ReplyDeleteஉன்னில் வேற்றுமைக் காணாமல்
உயர்ந்த நெறியில் வளர்ந்தேநீ
உயர்வாய் மகிழ்வாய் பிறப்பாலே//
சமூகத்தை கேள்வி கேட்கும் கவிதை. ரசித்தேன்
வருகைக்கும் புரிவுக்கும் நன்றி
Delete// ஒற்றுமைக் கொள்வோம் மனிதனாக //
ReplyDeleteஎல்லோரும் எதிர்பார்ப்பது இதுவேதான்.
ஆம்,எல்லோரும் ஒற்றுமையாய் இருக்க வேண்டும்
Deleteகவிதை அருமை...
ReplyDelete//ஒற்றுமை என்பதே உயிர்மூச்சாய்
ReplyDeleteஒழுக்கம் நன்றே முதலீடாய்// ஒன்றுபட்டு வாழ்ந்து வாழ்வில் உயர்ந்திடுவோம். தங்கள் உயரிய சிந்தனைக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள் சகோதரரே..
கருத்துள்ள கவிதை. பாராட்டுகள் கண்ணதாசன்.
ReplyDeleteபுரிந்து கொண்டால் நல்லது! ஆனாலும் புரிந்து கொள்ள மறுப்பவர்களை நினைத்து வருத்தம் மட்டுமே!