தெய்வங்கள்

தெய்வங்கள்

கண்தானம் செய்வீர்.........


               





கண்ணே விழியே கயல்விழியே
காண்பது அனைத்தும் உன்எழிலே
என்னே சிறப்பு நான் பார்க்க
எப்படி இறக்கும் நீ நோக்க

எங்கினும் கண்டிடும் எழிலழகை
எல்லா நிறத்தின் கலையழகை
அறிந்தவர் தெரிந்தவர் அனைவரையும்
அறியத்தானே கண் படைத்தான்

இப்படி சிறந்த அவயத்தை
எப்படி வீணாய் அழித்திடலாம்
 இறந்தும் தானம் கொடுத்திட்டால்
எழிலை மீண்டும் பார்த்திடலாம்

ஆணோ பெண்ணோ அனைவருமே 
அவயம் உதவும் மனமிருந்தால்
கண்ணின் மணியைத் தந்திடலாம்
கடவுள் படைப்பாய் வாழ்ந்திடலாம்

இறந்ததும் உலகம் இருண்டதாய்
இப்படி நாமேன் யோசிக்கணும்
இரண்டு விழிகளும் தானம்செய்வீர்
இருவர் வாழ்வில் ஒளிகொடுப்பீர்

இதயங்கள் போற்ற வாழுங்கள்
இறைவனின்செயலைச் செய்யுங்கள்
விழியே இன்றி வாழ்வோருக்கு
விடியல் கிடைத்திட உதவுங்கள்





Comments

  1. அருமையானதோர் கருத்தினை கூறும் அழகான கவிதை !!!

    ReplyDelete
    Replies
    1. நல்ல விஷயங்களை எல்லோருக்கும் சொல்லுவோம் நாமும் முடிந்ததை செய்வோம்

      Delete
  2. கருத்துடன் கூடிய கவிதை
    மிக மிக அருமை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சார்

      Delete
  3. இறைவனின்செயலைச் செய்யுங்கள்
    விழியே இன்றி வாழ்வோருக்கு
    விடியல் கிடைத்திட உதவுங்கள்
    கருத்துக்களும் வரிகளும் அருமை ஐயா.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் கருத்துக்கு நன்றிங்கயா

      Delete
  4. இதயங்கள் போற்ற வாழுங்கள்
    இறைவனின்செயலைச் செய்யுங்கள்
    விழியே இன்றி வாழ்வோருக்கு
    விடியல் கிடைத்திட உதவுங்கள்

    கருத்துகள் பொதிந்து ஒளி வீசும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!

    ReplyDelete
    Replies
    1. கண்ணொளி கிடைக்க நம்மால் ஆன உதவி

      Delete
  5. கண்தானம் பற்றிய சிந்தனையையும் விழிப்புணர்வையும் வாசிப்போர் மனத்தில் ஏற்றும் வகையில் அருமையானக் கவிபடைத்தீர். நன்றி ஐயா.

    ReplyDelete
  6. சிறந்ததானம்;சிறப்பாகச் சொன்னீர்கள்

    ReplyDelete
  7. விழிதானம் குறித்து விழிப்புணர்வு கவிதை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கு நன்றிங்க தம்பி

      Delete
  8. இதயங்கள் போற்ற வாழுங்கள்
    இறைவனின்செயலைச் செய்யுங்கள்
    விழியே இன்றி வாழ்வோருக்கு
    விடியல் கிடைத்திட உதவுங்கள்//

    அவசியமான பதிவு கவிதை.
    வாழ்த்துக்கள்.
    மண்ணுக்குள் போவதை மனிதருக்கு கொடுத்தால் மனிதம் வாழும்.
    நானும், என் கண்வரும் கண் தானத்திற்கு பதிவு செய்து கொடுத்து இருக்கிறோம்.

    ReplyDelete
  9. தங்களுக்கும் தங்களின் கணவருக்கும் எனது மனம்கனிந்த பாராட்டுக்கள்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more