நான் புலமை அறிந்தப் புலவனில்லை
இலக்கணம் முழுதாய் கற்றவ னில்லை
இலக்கியம் நாளும் படிப்பது மில்லை
வழக்கிலே வருகின்ற மொழியாலே-தமிழ்
வார்த்தைக் கொண்டே எழுதிடும் நானே
புலமை அறிந்த புலவனு மில்லை
பொழுதும் எழுதும் கவிங்ஞனு மில்லை
அனைத்தும் தெரிந்த அறிங்ஞனு மில்லை-வழக்கில்
அறிந்ததை கொண்டேஎழுதுவதென் நெல்லை
முனைவராய் நானே படித்தது மில்லை
முறையே தமிழைக் கற்றது மில்லை
பிழையாய்க் கருத்தைச் சொல்வதுமில்லை-இதையே
பிழைப்பாய்க் கொண்டு வாழ்வது மில்லை
பணியால் முடங்கி போகும் போதும்
பார்பவர்க் கலங்கி வருந்தும் போதும்
துணையாய் நின்று ருகும் போதும்-எனக்கு
துன்பம் மறக்கக் கவிதை எழுதுகிறேனே
அறிந்தோர் என்னை அறியச் செய்வீர்
அதையும் நன்கு திருந்தச் சொல்வீர்
புரிந்தோர் நிலையை புரிந்து கொண்டு-கவிதை
புனையத் தொடர்ந்து புகழைத் தாரீர்
கற்றது கைளயவு தானே....
ReplyDeleteஅழகான தன்னடக்க கவிதை
உண்மைதான்.நான் கற்றது விரல் அளவு
Deleteகவிதைகள் பல எழுதி எல்லாத்துன்பங்களையும் மறையச் செய்க... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி நண்பரே கஷ்டமும் நஷ்டமும் வாழ்கையில் தவிர்க்க முடியாதது
Deleteசகோதரரே!...
ReplyDeleteநானும் உங்கள் மனநிலை, செயல் ஒத்தவளே...
மொழிப்பற்றும் ஆர்வத்தின் காரணமாகவும் எழுதுவதை பகிர்வதுண்டு.
இலக்கண இலக்கிய திருத்தங்களை அதில் தேர்ந்தவர்கள் உரைப்பார்கள்.
இங்கு உங்கள் கருத்தில் தவறெதுவும் என் அறிவிற்கு புலப்படவில்லை. எழுத்துபிழைகள்தான் அதுவும் கணனிதட்டச்சுவதில் ஏற்படுவது சிலசயம் தவிக்க முடியாமல் போகிறது. எனக்கு இப்பிரச்சனை உள்ளது.
மனஞ்சோராமல் தொடர்ந்திடுங்கள் உங்கள் பணியை. போகப்போக திருத்தம் வரும்.
வாழ்த்துக்கள் சகோ!
உண்மைதான் சகோ. ஆர்வமே நம்மை தொடர்ந்து எழுதத் தூண்டுகிறது.அதனால் எப்படியும்தொடரத்தானே வேண்டும்.தொடருவேன் உங்களைப்போன்றோரின் ஆதரவும் துணையும் இருந்தால் எனக்குத் துணிவும் கிடைக்கும்.உங்களின் இமெயில் முகவரியை தரமுடியுமா?
Deleteஉங்களுக்கு மட்டுமல்ல இங்கே கவிதை எழுதும் பலருக்கும் இக்கவிதை பொருந்தும்.நல்ல கவிதை
ReplyDeleteசிலரின் விருப்பத்திற்காக இதை எழுதிப் பகிர்தேன்
Deleteபணியால் முடங்கி போகும் போதும்
ReplyDeleteபார்பவர்க் கலங்கி வருந்தும் போதும்
துணையாய் நின்று ருகும் போதும்-எனக்கு
துன்பம் மறக்கக் கவிதை எழுதுகிறேனே//
கவிதை அருமை.
உண்மைதான் மன கஷ்டத்தை மறைக்கவே என்னால் இப்படி தொடர்ந்து எழுத முடிகிறது
Deleteஅருமையான கவிதை ஐயா !!! உலகில் உள்ள அழகினை இரசிக்கத் தெரிந்தவர்கள் மற்றும் சிறுமை கண்டு பொங்குபவர்கள் கவிஞர்களாவதில் அதிசயமேதுமில்லை. வாழ்த்துகள் !!!
ReplyDeleteஎல்லோருக்குமே ஒரு செயலுக்கான தூண்டுதல் வேண்டும் .இல்லையெனில் எதுவும் சாதனை நிகழ்த்த முடியாது
Deleteபுலமை மிக்க கவிதை.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteபுலைமை உள்ளதாக சொல்லியமைக்கு நன்றி
Deleteஅருமையான கவிதை
ReplyDeleteஇலக்கணம் தெரிந்தவர்கள் எல்லாம்
கவிதை இயற்றிட முடியாது
ஆயினும் கவிதை இயற்றிட ஆர்வம்
கொண்டவர்கள் இலக்கணம் கற்றுக் கொண்டு
கவிதை வடித்தால் சிறப்பாக இருக்கும்
அதுவும் இலக்கணம் அறிந்து பின்
இலக்கணம் மீறி கவிதைப் படைத்தால்
இன்னும் சிறப்பாக இருக்கும்
முதலில் சைக்கிள் பழகுபவன்
ஹேண்ட் பார் பாலேன்ஸ் பண்ணத் தடுமாறி
பின் ஹேண்ட்பாரைத் தொடாதே சைக்கிள்
ஓட்டுதலைப்போல
இது என்னுடைய கருத்து
உண்மைதான் சார் நான் மிதிவண்டி போலத்தான் ஓட்டக் கற்றுவருகிறேன்.சரியாக விளக்கம் சொல்லி உதாரணம் சொல்லியமைக்கு நன்றி
Deletetha.ma 5
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteதுணையாய் நின்று ருகும் போதும்-எனக்கு
ReplyDeleteதுன்பம் மறக்கக் கவிதை எழுதுகிறேனே//
அருமை கவிஞ்சரே
என்னை கவிங்கரென்று சொல்லியமைக்கு நன்றி
DeleteArumai !
ReplyDeleteநன்றி
Deleteகவியாழியே இப்படியென்றால் கற்றுக்குட்டிகள் என்ன சொல்வது!
ReplyDeleteநான் புலவனில்லை ஆனால் கவிங்கான என்பதுவே இங்கு கேள்வி
Deleteஎழுதும் வாய்ப்பே ஒரு வரம்.அது கிடைக்கபெற்றதே பெருமை ஐயா.எத்தனை விஷயங்களைத் தொட்டு சொந்த அனுபவம்,உலக அனுபவமென்று எழுதுகிறீர்கள்.அவையடக்கம் சிறப்பு.வாழ்த்துகள்.எமக்கு உங்கள் ஆசீர்வாதங்களும் !
ReplyDelete“முனைவராய் நானே படித்தது மில்லை, முறையே தமிழைக் கற்றது மில்லை” என்கிறீர்களே, நண்பரே! இந்த இரண்டும் இல்லாத காரணத்தால் தான் உங்களுக்கு இந்த அளவாவது எழுத வருகிறது என்பேன். பாரதிக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள வித்தியாசம் இது தானே! கண்ணதாசனுக்கும் பாரதிதாசனுக்கும் உள்ள வித்தியாசமும் இது தானே! பட்டப் படிப்பும், முறையான இலக்கணப் படிப்பும் படைப்பாற்றலைத் திசை மாற்றிவிடும் தன்மை கொண்டவை என்பதற்கு இன்னும் எவ்வளவோ எடுத்துக்காட்டுகள் கூற முடியும். எனவே தொடர்ந்து எழுதுங்கள். நிறைய கவிதைகள் படித்துக்கொண்டே இருங்கள். தன்னிரக்கமும், அழுகுரலும் தவிருங்கள். ‘பாஸிட்டிவ்’ கவிதைகளையே எழுதுங்கள். இன்று நாட்டுக்குத் தேவையானது அதுவே!
ReplyDeleteநன்றிங்க நண்பரே.பாரதி .பாரதிதாசன்,மற்றும் கண்ணதாசன் கவிதைகளை இன்னும் முழுதும் படிக்கவில்லை அப்போதைக்கப்போது காதால் கேட்டதுண்டு .பெரும்பாலான சொற்கள் நடைமுறையில் உள்ளதை நான் எழுதுவதர்க்குக் காரணமே யாருடைய தாக்கமும் இல்லாததுதான்.
Deleteஉங்களின் அறிவுரைக்கும் ஆதரவுக்கும் நன்றி.மகிழ்ச்சியான தருணங்களைவிட குழப்பமான சோகமான நிகழ்வுகளே அதிக கவிதையாகுவதாக என்னது எண்ணம்.இருந்தாலும் நாட்டுக்குத் தேவையானைதையே நான் இன்னும் எழுத வேண்டும் எண்டு சொல்லி ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி தொடர்ந்து வாருங்கள் ஆதரவு தாருங்கள்
//இலக்கணம் முழுதாய் கற்றவ னில்லை
ReplyDeleteஇலக்கியம் நாளும் படிப்பது மில்லை
வழக்கிலே வருகின்ற மொழியாலே-தமிழ்
வார்த்தைக் கொண்டே எழுதிடும் நானே// அது தானே நம் நாட்டுப்புறப் பாடல் ஐயா..இலக்கணம் இலக்கியம் எல்லாம் பார்த்தா பாடினார்கள்..நம்மில் கலந்திருக்கும் நம் மொழி எழுதவைத்திடும் அல்லவா? கவி அருமை.
உண்மைதானம்மா. நானும் பாடல் எழுத நாளும் தொடர்ந்துவரும் நம்மொழியே எனக்கு ஊக்கத்தை கொடுக்கிறது
Deleteஆர்வமுடன் கவிதை எழுதும் அனைவருக்கும் பொருத்தமான அறிவுரை!
ReplyDeleteஅப்படியும் அறிவுரை சொல்ல நான் இன்னும் தகுதியாகவில்லை என நினைக்கிறேன் அய்யா.வந்தமைக்கு நன்றிங்க
Deleteமகிழ்வினில் எழுதும் கவிதையைக் காட்டிலும் வலியில் எழுதும்போது தான் கவிதை வரிகள் அழகாய் வந்து விழும். அதில் சத்தியமும் அழகும் சேர்ந்து வரும். அது போன்ற கவிதைகள் தொடர்ந்து எழுதுங்கள்!!
ReplyDeleteநன்றிங்கம்மா.உங்களின் அறிவுரைப்படி தொடர்ந்து எழுதுகிறேன்.உங்கள் வருகைக்கு நன்றி
Delete
ReplyDeleteவணக்கம்!
தமிழ்மணம் 10
எல்லாம் அறிந்தோர் எவரும் இலையென்பேன்!
வல்லோன் அடிகளை வாழ்த்து!
கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
உண்மைதான்கற்றது கைமண் அளவே.வாழ்த்துக்கு நன்றிங்க அய்யா
Deleteஅருமையான கவிதை கரு.
ReplyDeleteகவிதைக்குக் கருத்துதானே முக்கியம்.
தொடருங்கள் கவியாழி ஐயா.
நானும் தொடருகிறேன்.
இலக்கணம் இல்லை என்றாலும் நீகள் சொல்வதுபோல் கரு உள்ளதை
Deleteசெப்பியமைக்கு நன்றிங்க
ஐயா! அசை, சீர் பார்த்து
ReplyDeleteஎதுகை, மோனை ஆடையுடுத்து
அடி, தொடை பிசகாமல்
அழகாய்ச் சொல்கிறீர்
"நான்
புலமை அறிந்தப் புலவனில்லை" என்று!
தங்கள்
அவையடக்கம்
பாராட்டத்தக்கது!
ஐயா!
எழுத்தை உழைப்பாக்க வேண்டாம்
உலகெங்கும் தூயதமிழ் பேண
எழுத்தை ஒரு பணியாகக் கொள்ளும்!
தவறின்றித் தமிழ் பரப்ப
உன் நண்பர்கள்
தோள்கொடுப்பர் பாரும்!
நான் மகிழ்ந்தேன் உங்களின் தமிழார்வமும் புலமையும் தெரிந்த நீங்களும் என்னை பாராட்டியமை என்னை நெகிழச்செய்கிறது.உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteஅவையடக்கம் ஐயா நிறையவே உங்களுக்கு.எத்தனை விஷயங்களைத் தொட்டுப் புனைகிறீர்கள் கவிதைகளை.வாழ்வின் சுவாரஸ்யம்,அனுபவம் காதல் எல்லாமே சிறப்புத்தான்.வாழ்த்துகள் உங்களுக்கு.உங்களிடம் ஆசீர்வாதம் கேட்டபடி தொடர்கிறோம் !
ReplyDeleteஉங்கள் வரவு நல்வரவாகுக ஹேமா.தொடர்ந்து வாங்க ஆதரவு தாங்க
Deleteபணியால் முடங்கி போகும் போதும்
ReplyDeleteபார்பவர்க் கலங்கி வருந்தும் போதும்
துணையாய் நின்று ருகும் போதும்-எனக்கு
துன்பம் மறக்கக் கவிதை எழுதுகிறேனே
---அருமை கவிதை உண்மையில் மாபெரும் அருமருந்து.. அதை அனுபவிப்பவர்க்கே அது புரியும்
உண்மைதான் ப்ரியா எழுதும் உள்ளங்களுக்கே எழுதியதின் அக்கறையும் பொருளும் தெரியும்.நீண்ட நாட்களுக்குப் பிறகு வந்தாலும் உங்களுக்கும் என் நன்றி
Delete