மனதிலே அன்பிருந்தால்...
இப்போது வணங்கும் இறைவனே
முற்போது வாழ்ந்த மனிதனே
வெவ்வேறு வுருவில் வணங்குவர்
வேதமும் சொல்லுமெனக் கூறுவர்
கல்லாக வீசுகின்ற காற்றாக
இல்லாத உருவாய் கூறுவர்
நில்லாத நிலையிலும் ஆடுவர்-சாமி
நேரில் வந்ததாய் கூறுவர்
கல்லாமை இல்லாதோர் வணங்கிடும்
இல்லாத உருவமே கடவுளே
பொல்லாத வைத்தியம் சொல்லுவர்
பேரதிர்ச்சி நடக்குமென கூறுவர்
இயற்கையே கடவுள் என்றிருந்தால்
எதற்குக் கோயிலும் குருக்களும்
அதற்குப் அன்றாடம் பூசையும்
ஆடும் கோழியும் வேண்டாமே
இல்லற வாழ்வை துறந்துதான்
இறைவனைக் காண முடியுமானால்
இறைவனின் தூதனாய் இருப்பவரும்
இல்லறம் தவிர்த்து இருக்கலாமே
மனதிலே அன்பைக் கொண்டிருந்தால்
மனிதனை நண்பனே என்றிருந்தால்
துணிவையே மனதினில் வளர்த்திருந்தால்
துணைக்கு சாமியும் வேண்டுமா
/// துணிவையே மனதினில் வளர்த்திருந்தால்...
ReplyDeleteதுணைக்கு சாமியும் வேண்டுமா...? ///
சிந்திக்க வேண்டிய கேள்விகள் பல... வாழ்த்துக்கள் ஐயா...
நன்றிங்க நண்பரே நல்ல வார்த்தைச் சொன்னீர்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க
Deleteநன்றாய்க் கேட்டீர் நாலுவார்த்தை
ReplyDeleteநானும் இதைத்தான் கேட்கின்றேன்
சொல்வார் தகையோர் ஒன்றேதான்
சூழ்ந்தது ஊழ்வினை வேறில்லை
வினைதான் எம்மை ஆளுதென்றால்
வேறேதும் சாமி செய்யாதாம்
பிறகேன் நமக்கு சாமியும் சார்ந்தே
சுறண்டும் கோயிலும் பூசைகளும்!...
த ம. 3
"சூழ்ந்தது ஊழ்வினை வேறில்லை"
Deleteஎன்று சொல்லித்தான் ஏமாற்ற முடியும்
அன்பே கடவுள்!
ReplyDeleteஅதுதான் உண்மை அய்யா
Deleteஅன்பே கடவுள்..
ReplyDeleteத.ம-5
உண்மைதாங்க உஷா அன்பரசு
Deleteஅழகிய கவிதை வரிகள்...
ReplyDeleteஅன்பிருந்தால் அனைவரும் ஆண்டவர்களே...
அன்பே தெய்வம் உண்மைதான்
Deleteஅன்பை போதிக்கும் அருமையான கவிதை. எப்படித்தான் இப்படி கவிதையாய் எழுதித் தள்ளுகிறீர்களோ?
ReplyDeleteஎல்லா நிலைகளிலும் எழுத முடிவதே உங்களைப் போன்றோரின் ஆதரவினால்தான் ,அதனால் தொடர்ந்து வாங்க
DeleteHi there, I enjoy reading all of your article. I wanted to write
ReplyDeletea little comment to support you.
My blog post - best shampoo for thinning hair and hair loss
த.ம. 7
ReplyDelete"கண்ணிலே அன்பிருந்தால்
ReplyDeleteகல்லிலே தெய்வம் வரும் "தானே
அற்புதமான சிந்தனை
தொடர வாழ்த்துக்கள்
உங்க பாணியிலே சிறப்பா சொல்லிட்டீங்க சார்
Deleteமனதில் இருப்பதை நம்பாதவர்கள்தான் தூணிலும் இருப்பான் ,துரும்பிலும் இருப்பான் என்பார்கள் !உங்களின் கருத்தை ஆதரிக்கிறேன் !
ReplyDeleteஅதரவுக்கு நன்றிங்க பகவானே.
Deleteஅன்புதான் கடவுள்
ReplyDeleteஅன்பேதெய்வம்.
அன்பேஅனைத்துமென்பார்கள்.
அதைஉணர்த்தும் அழகான கவிதை.
வாழ்த்துக்கள்.
அன்பினால் எல்லாமே சாதிக்க முடியுமே .வாழ்த்துக்கு நன்றிங்கம்மா
Deleteகடைசி பத்தி அருமையான முத்தாய்ப்பு
ReplyDeleteநன்றிங்க குட்டன் .தொடர்ந்து வாங்க
Deleteஇயற்கையே கடவுள் என்றிருந்தால்
ReplyDeleteஎதற்குக் கோயிலும் குருக்களும்
அதற்குப் அன்றாடம் பூசையும்
ஆடும் கோழியும் வேண்டாமே/// மிகச் சிறப்பாய் சொன்னீர்கள்...
நான் சொல்வதும் உண்மைதானே ,வந்தமைக்கு நன்றிங்கம்மா
Deleteநன்றிங்க சார்
ReplyDeleteஅன்பே சிவம்
ReplyDeleteமனமே கோயில்.வந்ததுக்கு நன்றிங்க
DeleteUndeniably consider that which you said. Your favorite reason
ReplyDeleteseemed to be on the internet the easiest factor to
take into account of. I say to you, I definitely get irked while other folks consider issues that they just
do not recognise about. You controlled to hit the nail upon the top and also
defined out the whole thing without having side effect , people
can take a signal. Will probably be back to get more.
Thank you
Look into my web site - home workout resistance bands