சித்தனே போற்றினான்!
சித்தனே போற்றினான்
சிந்தையில் எற்றித்தான்
அத்தனை அரிதான
வித்தையை செய்திட்டான்
கற்றதை மற்றோருக்கு
கற்பித்து மாற்றினான்
கண்டத்தில் தமிழனை
கருத்தாக்கி மெருகூற்றினான்
பக்தனாயும் இருந்தான்
படைக்கவும் செய்தான்
புத்திமாறாது தவம்
பொழுதும் செய்தான்
சத்தமும் அவனே
சந்திர சூரியனும்
சரீரமான நீரும்
காற்றும் சிவனே
எத்தனை கடலும்
ஏழுலகமும் நீயே
அப்பனே சிவனே
அனைவரையும் [போற்றி
நித்தமும் சிவமே
நினைவெல்லாம் சிவனே
பித்தனே உன்னை
பொழுதும் நினைவேனே
ஓம் நமசிவய
ஓம் சிவ சிவ
Comments
Post a Comment
தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...