தெய்வங்கள்

தெய்வங்கள்

அவசரப் பயணம் அவசியமா?

அவசரம் எல்லோர் மனதிலும் அவசரம்
ஆட்சியாளருக்கும் அரசியல்வாதிக்கும்
பேச்சு சுதந்திரம் பேணவேண்டி அவசரம்-மேடை
பேச்சு எல்லாம் தனி ரகம் அவசரம்

இருப்பவன் பணத்தை மறைத்துவைக்க
இடம்தேடி பதுக்கும் வேலையில் அவசரம்
ஏழைக்கு ஏழ்மை நீங்க அவசரம்-அன்றும்
வேலை செய்த கூலிவாங்க அவசரம்

எல்லாம் இருதும் வசதி இருந்தும்
எதிரியை  நினைத்து நிம்மதி இழந்து
பொல்லா  பகையால்  பொறுமைன்றி-உயிர்
கொல்லும் நிலை கொடுமைக்கும் அவசரம்

வாகனம் ஓட்டும் நேரம்கூட அவசரம்
வாழ்க்கை மறந்து மதியும் இழந்து
வேகமாக  ஒட்டி செல்லும் அவசரம் -சாலை
விபத்தில் உயிர்ப்போவதிலும் அவசரம்



Comments

  1. ஆடவனும் அவசரப்பட்டால்?

    ReplyDelete
  2. இன்று உலகமே அவசர உலகம்தான் இதில் எல்லாமே அவசரமாய் இருப்பதில் வியப்பில்லை தாசன்!

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் வழி எங்கும் வாகனம் வருவதில் தாமதம்.கருத்துக்கு நன்றி ஐயா

      Delete
  3. தேவையற்ற அவசரத்தில்
    நாம் பெறுவதை விட
    இழப்பதே அதிகம்
    பயனுள்ள அருமையான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நன்றி ஐயா,அவசரம் அவசியமானாலும் உயிர் அதைவிட முக்கியமானது

    ReplyDelete
  5. அவசரம் தவிர்க்க இயலாத சூழ்நிலையில் என்றால் பரவாயில்லை.

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் எல்லோருக்குமே அவசரம்தான்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more