இமை மூடி பாருங்கள்
இமை மூடி பாருங்கள் இளமையை
இனிதாக்கி மகிழுங்கள் முன்போல்
சுமையாக எண்ணாமல் சுகமாக-ஆற்றல்
சீர்நிறுத்தி சீர்தூக்கி பாருங்கள் ஆனந்தமே
அந்த நாட்கள் மீண்டும் வராது
ஆனாலும் இன்று போல் நாளை
தேனாக சொல்லமுடியாது- இருந்தும்
மான் ஆகா விட்டாலும் மயிலாகலாம்
சொந்த நாட்கள் சொல்லி வந்தநாட்கள்
அந்த கால அருமையான தருணங்கள்
பந்தமானது பாசமானது அன்பினால்-இன்று
கந்தலானது கனவானது சொந்தமே கூட
நட்பும் வேண்டும் நாளும் பகிர
நல்லன்பும் வேண்டும் பேரப்பிள்ளை
பேச்சை கேட்டு பாடவேண்டும் பின்-மகிழ்ச்சி
பரவசத்தால் பாட்டியோடும் ஆடவேண்டும்
ஆயிரம் கதை வேண்டும் அவர்களுக்கு
ஆனந்தமாய் சொல்ல வேண்டும் தினமும்
பாராத பிள்ளையிடம் பாசம்போல் -நடிக்கும்
பண்பும் வேண்டும் ஆறாத ஏக்கத்தால்
பேரன் பேத்திக்காக பிள்ளையிடம்
பேரன்பாய் இருப்பது போல் வேண்டும்
பிரியமுடன் மருமகளிடம் சிரித்து-பாசத்திற்கு
பிரிவின்றி கிடைத்திட பழக வேண்டும்
முதுமையின் அழகு குறித்துச் சொல்லிப் போகும்
ReplyDeleteபதிவு அருமையிலும் அருமை
அவர்களின் சந்தோஷச் சிரிப்பு மனம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கு நன்றி
Deletetha,ma 2
ReplyDelete
ReplyDeleteபேரன் பேத்திக்காக பிள்ளையிடம்
பேரன்பாய் இருப்பது போல் வேண்டும்
>>
முதுமையில் தனிமை அண்டாம பார்த்துக்க இத்த்னையும் செய்யனுமா?!
yes we have to be with grand childrens
Deleteமுதியவர்களுக்குத் தேவை அன்பான வார்த்தைகளும் அனுசரணையான நடவடிக்கைகளும் தான். முதுமையின் பக்கம் நின்று பேசிய கவிதை சிறப்பாக இருக்கிறது ஐயா.
ReplyDeleteஇன்றைய இளைஞர்கள் சம்பாதிப்பதில் தான் திறைமையானவர்களாய் உள்ளார்கள் சொந்தம் குறிப்பாக வயதான தத்தா பாட்டியிடம் அன்பை பகிர்வதில்லையே
Deleteஇளமையோ முதுமையோ உண்மையான அன்பிருந்தால் போதுமே.
ReplyDeleteஎங்கே உள்ளது இன்றைய தலைமுறையிடம் அப்பா அம்மாவுக்கே அரிதாக பேசுவோர் தான் உள்ளார்கள்
Delete