தெய்வங்கள்

தெய்வங்கள்

மறுபிறவி அறிந்தோர் யாரோ?

மறுபிறவி அறிந்தோர் உளரோ
மறுபடியும் மனிதனாய் பிறப்பீரோ
சிறுதவரிறின்றி சிந்தனை செய்வீரோ-சிந்தையில்
சீரான மனிதனாய் வாழ்வீரோ மகிழ்வீரோ

நேர்மையான அன்பும் நாளும் கொண்டு
நிகரில்லா நல் பண்புடன் நடந்து
ஊர் போற்றும் உன்னத மனிதனாய் -உலகில்
உள்ளம் மகிழும் நால்லோர் ஆவிரோ

மனிதநேயம் மக்கள் நல்வாழ்வு
மானுடம்செழிக்க மகத்தான சேவை
இயற்கை நெறியில் இன்முகத்தோடு-மனதில்
இன்பம்  பெருகி எளிமையாய் இருப்பீரோ

இயற்கை வளம் சிறக்க வைப்பீரோ
இல்லாத மரங்களை புதிதாய் படைபீரோ
செயற்கையாய் மனிதனை படைபீரோ-இதயம்

சொல்வதை கேட்டு நேர்மையாய் நடப்பீரோ

வானமும் பூமியும் வாழும் உயிர்களும்
நிலவும் சூரியனும் சுற்றும் கோள்களுக்கும்
சுதந்திரமாய்  நடப்பீரோ சொந்தமென -போரில்
சுட்டு கொன்று சுயமிழந்து சாவீரோ

இப்பொழுதே மாறி இன்றைய வாழ்வை
இன்முகமாய் ஏற்று கற்பனையில் வாழாமல்
கிடைத்ததை கொண்டு தப்பேதும் செய்யாமல்-வாழ்வில்
தடம்மாறி செல்லாமல் இப்பிறவியில்  வாழுங்கள்

Comments

  1. கருத்தைத் தாங்கி வந்த கவிதை..இப்பிறவி மட்டுமே நிரந்தரம்..நமக்கு சரி எதுவோ அதைச் செய்து வாழ்வோம்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே உண்மையைத்தான் நீங்களும் உணர்த்தியுள்ளீர்கள் இப்பிறவியில்

      Delete
  2. அருமையான கவிதை
    அரசனை நம்பி புருஷனைக் கைவிடாது
    மறு உலகினை எண்ணி இப்பிறப்பில் நொந்து வாழாது
    சிறப்புடன் வாழ்ந்து உயர்வோமாக
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. இனிமையான இந்த பழமொழி எல்லோருக்கும் சொல்லவேண்டியதுதான்,இன்றைய வாழ்வினை இனிமையாக்குவோம்

      Delete
  3. அருமை...

    ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி இன்றையா வாழ்வை ரசியுங்கள்

      Delete
  4. இனிமையான இந்த பழமொழி எல்லோருக்கும் சொள்ளவேண்டியதுதான்,இன்றைய வாழ்வினை இனிமையாக்குவோம்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more