தெய்வங்கள்

தெய்வங்கள்

கொசுவே நீ செய்வது சரியா

அறிவுள்ள ஆறு நாள் எதிரியே
அன்பாக   நீ முத்தமிட்டாலும்
அலறுகின்றனர் எல்லோரும்
அடிவாங்கி அமரனாகும் -உன்னை
அடிக்காமல் விடுவோர் உண்டோ

செடி கொடியில் வளர்ந்தாலும்
சாக்கடையில் பிறந்தாலும்
படைநடுங்கி ஓடுகிறது - பயந்து
தொடை நடுங்குது எல்லோருக்கும்

எதிரியை  வீழ்த்த  எனக்கு உதவ
எழுநாள்  தாண்டியும் வாழ்வாயா
ஏவியதும்  உடனே நீ  செய்வாயா-எமனாக
காத்திருந்து அவனை கொல்வாயா

அதிசய பிறவி நீ
அன்பில்லா பகைவன் நீ
கத்தியின்றி யுத்தம் செய்யும்-நீ
கலிகால புதிரும் நீ


உன்னை கொல்ல உலகமே முயலுது
உயர்ந்த மருந்து புதிதாய் கிடைக்குது
என்ன செய்தும் பயனில்லை  -உன்னால்
எனக்கும் கூட வருத்தம் உன்மேலே

முப்படையும் தோற்கும் உன் முன்னே
முடிவுரை எழுதும் துயரமாய் நின்னே
சத்திழந்தோரை \தானே நீ-சாகடிக்கிறாய்
சரியா   நீ செய்வது  சரியா

Comments

  1. புலியைக்கூட வலைகட்டிப் பிடிக்கும் மனித இனம் கொசுவுக்கு பயந்து தனக்குத் தானே வலை கட்டிக் கொள்ளும் நிலை வேடிக்கையா வேதனையா ?

    ReplyDelete
    Replies
    1. என்ன செய்தாலும் எப்படியும் வருது எல்லோரையும் கடிக்குது

      Delete
  2. வணக்கம்!
    தாமதத்திற்கு மன்னிக்கவும்! தங்களது இரு பதிவினை இன்று வலைச்சரத்தில் அறிமுகம் செய்துள்ளேன்! தங்களுக்கு நேரம் கிடைக்கையில் வலைச்சரம் வரும்படி அன்போடு அழைக்கிறேன்!
    http://blogintamil.blogspot.in/2012/11/5_23.html

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா நான் பார்க்கிறேன்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more