தெய்வங்கள்

தெய்வங்கள்

நான் பார்த்த ஏற்காடு

எனது முதல் ஏற்காடு பயணம் 

        நான் ஏற்காடு முதலில் சென்றது )சைக்கிளில் (மிதிவண்டி)அதாவது ஒரு ரூபாய் கொடுத்து பேருந்திலோ அல்லது சுமையுந்திலோ மேலே வைத்துவிட்டு மலையில் உள்ள ஏரிக்கு அருகில் இறங்கி அங்கு ஊர் சுற்றிவிட்டு பின்னர் மிதிவண்டியி லேயே இறங்கி வரவேண்டும்  என எனது அண்ணன் சித்தப்பா மகன் சந்திரசேகர் கூறினார். ஏறக்குறைய இருபத்து மூன்று கிலோமீட்டர் மலைப்பாதையில் உன்னால் தைரியமாய் வர முடியுமா என்றார்

      அப்போது வயது பதினேழு இருக்கும்  எனக்கு மனதில் பயம் இருந்தாலும் உடனே சரி போகலாம் என்று சொல்லி சனிக்கிழமை விடுமுறை என்பதால் அன்றே செல்லத் தீர்மானித்தோம் .நான் படிக்கும்போதே எனது படிப்புச் செலவுக்காக எனது தாய் தந்தையரை துன்புறுத்தாமல் நானே சுயமாக சம்பாத்தித்து வந்தேன் அதனால் என்னிடம் எப்போதும் சேமிப்பு வைத்திருப்பேன் அதிலிருந்து இருபது ரூபாய் செலவு செய்வது என தீர்மானித்து விரும்பியபடியே சென்றேன்.

       பேருந்தில் இரண்டு ரூபாய் பயணக் கட்டணம் ஒருரூபாய் மிதிவண்டிக்கு  ஒரு ரூபாய் என(2+1=3) மூன்று ரூபாய் இருவருக்கும் ஆறு ரூபாய் செலவு செய்து காலை 8.00 மணிக்குப் புறப்பட்டு ஒருமணி நேரத்தில் மலை உச்சியை அடைந்து சில இடங்களை சுற்றிவிட்டு மதிய உணவு  ரூ.5  இருவருக்கும் பத்து ரூபாய் போக மீதியுள்ள பணத்தில் வழியில் கண்ட குரங்குகளுக்காக பொறி கடலை வாங்கி புறப்பட்டோம்.

        அன்று  ஏற்காடு ஏரியில் படகு சவாரி செய்தும் ஏரிக்குஅருகிலுள்ள பூங்காவில் விளையாடியும் மகிழ்ந்தோம்.மேலும் லேடிசீட் என்னும் பகுதியிலிருந்து பார்த்தால் சேலம் நகரும் மேட்டூர் அணையும் டால்மியா தொழிற்ச்சாலைகள் என்று காண முடியும் அடுத்து பக்கோடா பாயிண்ட் ,ரெட்ரிட் போன்ற பகுதிகளுக்கு மிதிவண்டியிலேயே  சென்று விட்டு மாலை நாலு மணிக்கு வீடு திரும்ப விரும்பினோம்.

         இருபது கொண்டைஊசி வளைவுகள் கொண்ட மலையில் எப்படி நிதானமாய் இறங்கவேண்டும் என்று பேசிக் கொண்டேபல பகுதிகளுக்கும் சைக்கிளிலேயே சென்று வந்த அனுபவம்  இருந்ததால் எனக்கும் தைரியம் வந்தது. நாங்கள் கையில் இரண்டு பழுதுபார்க்கும் கருவிகள் வைத்திருந்ததால் மிதியுந்தை சரிசெய்துகொண்டு  புறப்பட்டோம் .நான் முதலில் தடுமாறினேன் பின்னர் சுதாரித்துக்கொண்டு இறங்கினோம்.

      வரும் வழியில் பதிமூன்றாவது கொண்டைஊசி வளைவில் முனீஸ்வரன் கோயில் உள்ளது அங்கு சிறிது நேரம் இளைப்பாறி  விட்டு மீண்டும் மிதிவண்டியை சரி செய்து கொண்டு புறப்பட்டோம். அங்கு ஆங்கிலேயரால் கட்டப்பட்ட நாற்பது அடி ,அறுபது அடி ஆகிய இரண்டு பாலங்களை கடக்கும் முன் அங்கு சுற்றித்திரியும் குரங்குகளுக்கு பொறி கடலையை இருவரும்  சாலையோரத்தில் பாதுகாப்பாய் தூவி விட்டு மீண்டும் பயணத்தைத் தொடந்தோம்.

       வெற்றிகரமாக பயணத்தை முடித்து மாலை ஆறுமணிக்கு வீட்டுக்குச் சென்றால் அங்கு என்னைக் காணாமல் தவித்த அப்பாவிடம் உண்மையை மறைக்காமல் நடந்ததைச் சொன்னதும் வழக்கம்போலவே அர்ச்சனையும் பூசையும் கிடைத்தது, சில நாள் கழித்து நானும் உன்வயதில் சென்றிருக்கிறேன் நீ என்னிடம் சொல்லி இருந்தால் நானும் உடன் வந்திருப்பேனே என்று சொன்னது மறக்கமுடியாதது.

       அதன்பின் பலமுறை மிதிவண்டிப் பயணம் சென்றிருக்கிறேன்.சிலபல விபத்துக்களையும் சந்தித்திருக்கிறேன்,ஆனாலும் மிகவும் கடினமான அவசியமில்லாத பயணம் என்றே இன்று நான் சொல்ல விரும்புகிறேன்.



(கவியாழி)


Comments

  1. பசுமையான‌ நினைவுகளை மறக்கவே முடியாது தானே , வாழ்த்துகள், தொடருங்கள்...

    http://pudhukaiseelan.blogspot.in/

    ReplyDelete
  2. அர்ச்சனை பூசையுடன் இனிய நினைவுகள்...

    ReplyDelete
  3. இனிய நினைவுகளை பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  4. மிதிவண்டியில் ஏற்காடு பயணமா
    நிச்சயமாக வாழ்வில் மறக்க முடியாத பயணம்தான் ஐயா.
    கொடுத்து வைத்தவர் நீங்கள்

    ReplyDelete
  5. பசுமையான நினைவுகள்...

    ReplyDelete
  6. இளமையில் காணும் இடங்கள்
    இதயத்தில் என்றும் பசுமையைத்தான் இருக்கும்

    அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. சராசரி நாட்களை விட
    இதுபோன்ற சாகச நாட்கள் தானே
    கல்வெட்டுக்களாய் மனதில் பதிந்து கிடக்கிறது ?
    சுவையான அனுபவக் கட்டுரை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. இனிய மலரும் நினைவுகள்! மீண்டும் ஒருமுறை இப்போது கையில் கேமராவோடு சென்று வாருங்கள்!

    ReplyDelete
  9. தங்களுடன் மிதி வண்டியில் பயணம் செய்த உணர்வைத் தந்து இருக்கிறீர்கள்
    வாழ்க வளமுடன்
    கொச்சின் தெவதாஸ்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்