தெய்வங்கள்

தெய்வங்கள்

தாழ்வான பகுதிக்கு தடுமாறி வந்திட்டேன்

















வாழ்வோரை பார்க்க வரவேண்டு மென்று
ஆழ்வான காற்று என்னை துரத்தி
நோய்போல் என்னை நிறுத்தியதால்- ஏனோ
தாழ்வான பகுதிக்கு தடுமாறி வந்திட்டேன்

இதுவும் எனக்கு மகிழ்ச்சிதான்
இருந்தும் மனதில் வருத்தம்தான்
கடலில் மூழ்கி இறந்துவிட்ட அய்வரை-மரண
துயரில் மூழ்கிட செய்தது நானல்ல

எவ்வளவோ ஆழத்தையும் நான் நீந்தினேன்
எண்ணில்லா பகுதியை தாண்டி சென்றேன்
தப்பிதமாய் வாழ்ந்ததில்லை தறிகெட்டு-கரையில்
ஒப்பில்லாது வாழ்ந்து ஒய்வாகதான் உள்ளேன்

நிலப்புயல் எனக்கு நிம்மதி தர
கரைநோக்கி என்னை தள்ளியதால் நானே
கவனிப்போர் நிறைந்து காண்கின்றேன்-இன்றும்
அகிலத்தார் பார்க்க எனக்கும் மகிழ்ச்சிதான்




Comments

  1. மிக அருமையான சிந்தனை வரிகள் கண்ணதாசன்....

    கடலை நம்பி இருக்கும் மக்களின் நிலை....

    கடலின் சீற்றங்கள் புயலின் சீற்றங்கள் எப்படி நிலைகுலையவைத்தன என்பதையும்....

    அதற்கு தான் எவ்விதத்திலும் காரணம் அல்ல என்று சொல்லிச்சென்ற கவிதை வரிகள் சிறப்புப்பா...

    அன்புவாழ்த்துகள்.

    ReplyDelete
  2. தங்களோடு நட்புகொண்டமைக்கு பெருமைகொள்கிறேன்,பேசியமைக்கு மகிழ்ச்சியடைகிறேன்,கருத்து கூறியதற்கு நன்றி கூறுகிறேன்

    ReplyDelete
  3. தங்கள் அருமையான பதிவுகளை தமிழன் திரட்டியிலும் (www.tamiln.org) இணையுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. இணைத்துக்கொண்டேன் ! உங்களின் கருத்தை பதியவில்லையே?

      Delete
  4. தரை தட்டின கப்பலுக்கே ஒரு கவிதையா?! சூப்பர். தங்களுடன் பேசியது பெரு மகிழ்ச்சியளித்தது, உங்கள் மகள் பேர்தான் என்னை ஈர்த்தது. அழகான தமிழ் பெயர். மருமகளுக்கு இந்த அத்தையின் வாழ்த்துக்களும் ஆசிகளையும் சொல்லிடுங்க

    ReplyDelete
    Replies
    1. நன்றிம்மா சொல்லிடுறேன்,தங்களிடம் பேசியது மகிழ்ச்சியான நிகழ்வு ,உங்களின் ஆர்வமும் கலைமீது கொண்ட ஆவலும் என்னை நெகிழ்ச்சி அடைய செய்தது புலவரை பார்த்தபோதுகூட உங்களைபற்றி கூறினார்கள் மிக்க மகிழ்ச்சி



      Delete
  5. மனம் நிறைந்த இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

    ReplyDelete
    Replies
    1. தீபாவளி நல்வாழ்த்துக்கள்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more