தெய்வங்கள்

தெய்வங்கள்

ஊரே கும்பிடும் உத்தமி .........

தனியாக யாரும் சென்றால்
துணிவாக எதிர்த்து நிற்கும்
தர்பாரும் விலகிச் செல்ல
தரையிலே ஊர்ந்து செல்லும்

துணிவுள்ள மிருகம் அல்ல
துண்டு கயிறு போலவுள்ள
பணிவான உயிர் அதுவாம்
பயந்து சென்று ஓடுவதாம்

ஊரையே காலி செய்யும்
உருண்டு நீண்ட மேனியாய்
ஒருவருமே பார்க்காத தனியிடமாய்
ஒளிந்தே பயந்தே வாழ்ந்திடுமாம்

போருக்குப் போவோரை எதிர்த்திடுமாம்
பொல்லாத திரவியத்தால் கடித்திடுமாம்
பேருக்குச் சத்தமாய் இருந்தாலும்
பயமாக ஒதுங்கிச் சென்றிடுமாம்

வீறிட்டுக் கத்தி பயந்தால்
விரைவாகத் தானும் பயந்தே
வேர்விட்டு விஷத்தைக் கக்கிடும்
விரைவாக உயிரைப் போக்கிடும்

ஊருக்கு வெளியில் வாழ்ந்திடும்
உண்மையில் பயந்து ஓடிடும்
நீர்வயல் ஓரங்களில் வாழ்ந்திடும்
நல்லவளாய் ஊரே கும்பிடும்


Comments

  1. உங்களிடமிருந்து வித்தியாசமான வரிகள்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  2. பாம்பை பற்றிய வரிகள் அழகு! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க சுரேஷ்

      Delete
  3. பாம்பு பற்றி நல்ல கவிதை.

    பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  4. பாம்புக்காக ஒரு கவிதை...
    ஐயா பாணியிலிருந்து கொஞ்சம் வித்தியாசமாய்...
    அருமை ஐயா...

    ReplyDelete
  5. சகோதரருக்கு வணக்கம்
    அரவம் பற்றிய கற்பனை வித்தியாசமாகவும் ரசிக்கும் படியாகவும் இருந்தது. நல்லதொரு கற்பனை. வரிகளும் மிக அழகாக வந்துள்ளது. தொடருங்கள் சகோதரரே. பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  6. பாம்புக்காக ஒரு நல்ல கவிதை
    நன்றி ஐயா
    த.ம.7

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி

      Delete
  7. பாம்பைக் கண்டால் படையே நடுங்கும் என்பார்கள் அந்தப் பாம்பைப் பற்றி இப்படி ஒரு நல்ல கவைதையா!! அற்புதம்!!! அரவத்திற்கு நல்லதொரு உருவம்!!!!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றிங்க

      Delete
  8. பாம்புக்கும் கவிதை படையலா!

    ReplyDelete
    Replies
    1. தங்களின் வருகைக்கு நன்றிங்க அய்யா

      Delete
  9. நாகதேவதையைப் போற்றி ஒரு நல்ல கவிதை .பாராட்டுக்களும்
    வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more