தெய்வங்கள்

தெய்வங்கள்

கருவைச் சுமந்தவள்

கருவைச் சுமக்கச் சொல்லி
கடனாய்த் தந்தவன் ஒருவன்
கருவே உருவாகி வளர்த்தும்
கடமை என்றே கொடுத்தால்

உடமைப் பொருளும் பிடுங்கி
உணவாய்த்  தின்பவள் ஒருத்தி
உரிமை  கொண்டாடி மகிழ
உடலைத்  தந்த அவனும்

உயிரைக் கொடுத்தும் மயங்கி
உற்றார் மறுத்த பிள்ளை
பெற்றோர் கடமை மறந்து
போதையில் வாழ்தல் முறையா

இதனை எல்லா மதங்களும்
இழித்தே கூறி வந்தாலும்
எப்படி மகிழ்ந்து வாழ்வாய்
ஏனோ மறந்தாய் இகழ்வாய்

மனிதன் மட்டும் இதனை
மறந்தே வாழச் சொல்லும்
கடமை துறக்கச் சொன்ன
கடவுள் உண்டா மகனே

...............கவியாழி..........








Comments

  1. வணக்கம்
    ஐயா

    கவிதை அருமை வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. யோசிக்க வேண்டிய விசயம்தான்

    ReplyDelete
  3. அருமையான கவிதை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. மனிதன் மட்டும் இதனை
    மறந்தே வாழச் சொல்லும்
    கடமை துறக்கச் சொன்ன
    கடவுள் உண்டா மகனே//

    நல்ல கேள்வி

    ReplyDelete
  5. யோசிக்க வைத்தது.....

    த.ம. 6

    ReplyDelete
  6. சிந்தனையை தூண்டிய கவிதை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. "கருவைச் சுமக்கச் சொல்லி//கடனாய் தந்தவன் ஒருவன்" என்கிறீர்களே,
    அவனது கடன் எப்போதாவது தீர்க்கப்படுமா? தெரிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறேன் நண்பரே!

    ReplyDelete
  8. வணக்கம் சகோதரரே
    சிந்திக்கத் தூண்டும் வரிகள். அழகாக கவியாய் தந்த விதம் நன்று. தொடர்ந்து தாருங்கள் கவியாய் தங்கள் கற்பனைகளையும் தாங்கள் கடந்து சென்றவைகளையும். நன்றி

    ReplyDelete
  9. கடவுள் கடமை துறக்கச்சொல்லவில்லை.மனிதன்தான் மறந்து போகிறான்.

    ReplyDelete
  10. கடந்தும் செல்வது நலமோ?
    இல்லை!
    "கற்க கசடறக் கற்க கற்றபின்
    நிற்க அதற்குத் தக" என
    வள்ளுவர் சொன்ன நினைவு!
    கற்றபடி நடை போடுவோம்!

    ReplyDelete
  11. "உயிரைக் கொடுத்தும் மயங்கி
    உற்றார் மறுத்த பிள்ளை
    பெற்றோர் கடமை மறந்து
    போதையில் வாழ்தல் முறையா" என
    நன்றாகக் கேட்டீர்...
    நம்மாளுகள்
    கற்றுக்கொள்ள எத்தனை இருக்கு!

    ReplyDelete
  12. சிந்திக்க வைத்த கவிதை.

    ReplyDelete
  13. சந்தி சிரிக்குமுன் சம்பந்தப்பட்டவர்கள் சிந்தித்து திருந்தினால் நல்லது !
    த.ம7 to 8

    ReplyDelete
  14. உங்கள் தேடல்களும் கவிதைக் கருவும் வியக்க வைக்கின்றன சகோ!

    அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  15. கவிதை அருமை..நல்ல கேள்வி..த.ம.10

    ReplyDelete
  16. எப்படிதான் கேட்டாலும் திருந்தனுமே.... ஹ்ம்ம்ம்

    ReplyDelete
  17. போதையில் பாதை மறந்துவிடும்
    சீக்கிரம் பயணமும் முடிந்திடும்
    பணமும் கரைந்திடும் ஈரலும் கரைந்திடும்
    தெரிந்து கொண்டு தொடர்பவர்களை
    யார் திருத்த முடியும். விதி விட்ட வழி தான். அருமை அருமை தொடர வாழ்த்துக்கள் ....!

    ReplyDelete
  18. அன்பின் கவியாழி கண்ணதாசன் - கருவைச் சுமந்தவள் கவிதை அருமை - சிந்தனை நன்று

    மனிதன் மட்டும் இதனை
    மறந்தே வாழச் சொல்லும்
    கடமை துறக்கச் சொன்ன
    கடவுள் உண்டா மகனே - அருமையான முடிவு - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more