இராய.செல்லப்பா அவர்களை வாழ்த்துவோம்
எனது நெருங்கிய நண்பரும் நமது வலையுலகில் "செல்லப்பா தமிழ் டயரி "மற்றும் "இமயத்தலைவன்" ஆகிய இரண்டு வலைப்பூக்களை வைத்திருக்கும் அன்பிற்குரிய திருவாளர்.இராய.செல்லப்பா அவர்கள் Corporation Bank ல் துணை பொது மேலாளராகவும் (AGM) பணியாற்றி ஓய்வுபெற்று இப்போது கதைகள்,கட்டுரைகள்,கவிதைகள் எழுதி வருகிறார்.
இவர் டெல்லியில் பணியாற்றியபோது டெல்லி தமிழ் சங்கத்துடன் இணைந்து பல கவியரகங்கள் பட்டிமன்றங்கள் நடத்தியும் டெல்லித் தமிழர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்து அரியபணியாற்றியவர்.அப்போதே பல தமிழ் ஆர்வலர்களை டெல்லிக்கு அழைத்து அவர்களைக் கௌரவித்து மகிழ்ந்தவர்.
ஏற்கனவே இரண்டு கவிதை நூல்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.தற்போதும் ஒரு "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் " என்ற கதைத் தொகுப்பையும் வெளியிடவுள்ளார்.மேலும் அகிலஇந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் தனது படைப்புகளை ஒலி & ஒளி பதிவிட்டிருக்கிறார்.
""அமரர் பிரபாராஜன் அறக்கட்டளை சார்பாக 'கலைமகள்' நடத்திய சிறுகதைப்போட்டியில் 'சாந்தி நிலவ வேண்டும்' என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு (ரூ.5000) கிடைத்துள்ளது. இதற்கான விழா வரும் 29-12-2013 ஞாயிறு மாலை சென்னையில் TAG Centre இல் நடைபெற உள்ளது. கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் பரிசினை வழங்குகிறார்கள்""
இந்த மகிழ்வான நேரத்தில் நாமும் இணைந்து திரு.செல்லப்பா அவர்களை வாழ்த்துவோம்
அவரது கைபேசி எண்; 9600141229- தொலைபேசி எண்.044-67453273
..கவியாழி.
திரு .இராய.செல்லப்பா அவர்களின் கதைக்கு கலைமகள் பரிசு என்றால் சிறப்பான கதையாக இருக்கும் என்பதில் ஐயமில்லை !பாராட்டுக்கள் !
ReplyDelete+1
திரு இராய. செல்லப்பா அவர்களுக்கு பாராட்டுகள். மேலும் பல சிறப்புகள் வந்திட எனது வாழ்த்துகள்.
ReplyDelete"இமயத்தலைவன்" திரு.செல்லப்பா அவர்கள் கலைமகள்' நடத்திய சிறுகதைப்போட்டியில் 'சாந்தி நிலவ வேண்டும்' என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்க்ள்..!!
ReplyDeleteவணக்கம் கவியாழியாரே. அய்யா இராய.செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துகளையும், இந்த நல்ல செய்தியைப் பகிர்ந்துகொண்ட தங்களுக்கு நன்றியையும் தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். 28-12-2013 சென்னை வருகிறேன். இயலுமெனில் நமது விழாவுக்கும் வர முயற்சி செய்வேன். பின்வரும் எனது தனியஞ்சலுக்கு அழைப்பிதழ்ப் பிரதி ஒன்றை அனுப்ப வேண்டுகிறேன். வணக்கம். - நா.முத்துநிலவன்.
ReplyDeleteதிரு.செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவிழா சிறக்க வாழ்த்துக்கள்...
மூத்த வலைப்பதிவர் திரு.இராய.செல்லப்பா அவர்கள் எழுதிய சிறுகதைக்கு, கலைமகள் நடத்திய சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு கிடைத்துள்ள செய்தியைப் பகிர்ந்து கொண்ட கவிஞர் கவியாழி கண்ணதாசனுக்கு நன்றி! திரு.இராய.செல்லப்பா அவர்களுக்கு உளங் கனிந்த நல் வாழ்த்துக்கள்!
ReplyDeleteசிறந்த படைப்பாளரான செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள். பரிசளிப்பு விழா நிகழ்வு விவரத்தை பதிவாக வெளியிட்டு பெருமைப்படுத்திய கண்ணதாசன் சார் உங்களுக்குக் பாராட்டுக்கள்.மூத்தோரையும் திறன்படைத்தோரையும் தயங்காமல் பாராட்டும் உங்கள் பண்பு போற்றத் தக்கது நன்றி
ReplyDeleteதிரு ராய செல்லப்பா அவர்களுக்கு எங்கள் இதம் கனிந்த மனப்பூர்வமான பாராட்டுக்கள்!! அவர்களது எழுத்துக்கள் மேன்மேலும் வளர எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக!
ReplyDeleteகவியாழி அவர்களுக்கு பகிர்தலுக்கு மிக்க நன்றி! தங்கள் இந்த பாராட்டும் பண்பு போற்றுதற்குறியது!!
திரு இராய. செல்லப்பா அவர்களுக்கு பாராட்டுகள்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
உங்கள் பகிர்வுக்கு நன்றி.
திரு இராய. செல்லப்பா அவர்களுக்கு பாராட்டுகள். - எனது வாழ்த்துகள்
ReplyDeleteVetha.Elangathilakam.
ஐயா இராய செல்லப்பா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
ReplyDeleteநல்ல செய்தியை தக்க நேரத்தில் பகிர்ந்துகொண்ட உங்களும் நன்றியுடன் வாழ்த்துக்களும் சகோ!
ஐயா செல்லப்பன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்...
ReplyDeleteசந்தோஷத்தை பகிர்ந்து கொண்ட தங்களுக்கு நன்றி ஐயா...
வாழ்த்துக்கள்...!
ReplyDeleteவணக்கம்
ReplyDeleteதிரு.செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
திரு.செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
ஐயர் அவர்களை அலைபேசி வழி அழைத்து மகிழ்வைத் தெரிவித்துவிட்டேன் ஐயா
ReplyDeleteத.ம.10
திரு இராய. செல்லப்பா அவர்களுக்கு பாராட்டு!
ReplyDeleteஇன்னும் பல! எண்ணே இல! என , படைக்க வாழ்த்து
"இமயத்தலைவன்" திரு.செல்லப்பா அவர்கள் கலைமகள் நடத்திய சிறுகதைப்போட்டியில் 'சாந்தி நிலவ வேண்டும்' என்ற சிறுகதைக்கு
ReplyDeleteபரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துகள்..பாராட்டுக்கள்..!!
ReplyDeleteஏற்கனவே இரண்டு கவிதை நூல்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்.தற்போதும் ஒரு "தாத்தா தோட்டத்து வெள்ளரிக்காய் " என்ற கதைத் தொகுப்பையும் வெளியிடவுள்ளார்.மேலும் அகிலஇந்திய வானொலி மற்றும் தொலைக்காட்சியிலும் தனது படைப்புகளை ஒலி & ஒளி பதிவிட்டிருக்கிறார்.
""அமரர் பிரபாராஜன் அறக்கட்டளை சார்பாக 'கலைமகள்' நடத்திய சிறுகதைப்போட்டியில் 'சாந்தி நிலவ வேண்டும்' என்ற சிறுகதைக்கு இரண்டாம் பரிசு (ரூ.5000) கிடைத்துள்ளது. இதற்கான விழா வரும் 29-12-2013 ஞாயிறு மாலை சென்னையில் TAG Centre இல் நடைபெற உள்ளது. கலைமகள் ஆசிரியர் திரு கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் அவர்கள் பரிசினை வழங்குகிறார்கள்""//
திரு செல்லப்பா அவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் மென்மேலும் சிறப்புப் பெற்றுத் தமிழுக்கும் தன் நாட்டிற்கும் பெருமை சேர்த்திட கலைவாணியருள் கிட்டட்டும் .மிக்க நன்றி சகோதரரே பகிர்வுக்கு .
மனம் மிக்க மகிழ்வு கொள்கிறது
ReplyDeleteபதிவாக்கி இந்த மகிழ்வான செய்தியை
அனைவரும் அறியத் தந்தமைக்கு
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்
ராயச்செல்லாப்ப அவர்களின் படைப்பு மனம் குறையாமலும்,இன்னமும் நிறைய எழுதவும் வாழ்த்துக்கள்/
ReplyDeleteதிரு இராய செல்லப்பா (கவியாழியையும்) அவர்களை சந்திக்கும் வாய்ப்பு பதிவர் திருவிழாவின் போது எனக்கு கிடைத்தது. நிறை குடம் தளும்பாது என்பதற்கு உதாரணமாக அவரை கூறலாம். இத்தனை சிறப்புகளை பெற்றிருந்தும், பழகுவதற்கு மிகவும் எளிமையானவர், பண்பானவர். விழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்
ReplyDeleteமிகவும் மகிழ்ச்சியான செய்தி. திரு இராய செல்லப்பா அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
ReplyDelete