தெய்வங்கள்

தெய்வங்கள்

உறவென்று சொல்ல வெட்கமடா...



சொல்லாமல் கேட்காமல் சுயமாக
முன்வந்து கொடுக்கா உறவும்
சோம்பலாய் இருக்கையில் அறிவைச்
சொல்லாத அப்பாவும்  அம்மாவும்

இல்லாத போதும்  இயைந்து
எடுத்துச் சொல்லா உடன்பிறப்பும்
இருப்பதைக் கொடுத்துத் துணையாய்
இன்முகம் காட்டா நட்பும்

பொல்லாத நேரத்தில் புரியாத
போலியாய்த் தேவையென நடித்தே
தள்ளாத காரணம் சொல்லி
தாங்க வைக்கும் உறவும்

நிலைமை தெரிந்தும் வருந்தாமல்
நேரமும் பழிக்கும் மனைவி
வயதைக் கடந்தும் வேலையின்றி
வருந்தாத வாரிசின் அலட்சியமும்

 உறவென்று சொல்ல வெட்கமடா
உலகில் இதுவும் உண்மையடா
பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா
பிறப்பே தவறாய் எண்ணுதடா



@@@@@ கவியாழி  @@@@@@







Comments

  1. உறவென்று சொல்ல வெட்கமடா
    உலகில் இதுவும் உண்மையடா
    பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா
    பிறப்பே தவறாய் எண்ணுதடா//

    உங்கள் பெயர் காரணப்பெயர்
    என்பதற்கு இந்தக் கவிதை அத்தாட்சி
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. என்னாச்சு .ஒரே முகாரி ராகமா இருக்கே ?
    த.ம 3

    ReplyDelete
  3. அப்படிச் சொல்லுங்க ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_19.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  5. சொல்லாமல் கேட்காமல் சுயமாக
    முன்வந்து கொடுக்கா உறவும்
    சோம்பலாய் இருக்கையில் அறிவைச்
    சொல்லாத அப்பாவும் அம்மாவும்

    உறவென்று சொல்ல வெட்கமடா
    உலகில் இதுவும் உண்மையடா
    பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா
    பிறப்பே தவறாய் எண்ணுதடா!!

    அற்புதமான கவிதைப் ப்திவு!! "கவியாழி" சரியான பெயர்தான்!!! காரனப் பெயர்!!

    ReplyDelete
  6. வலைச்சர அறிமுகத்திற்கும் சிறப்பான கவிதைப் பகிர்வுக்கும்
    வாழ்த்துக்கள் சகோதரா .

    ReplyDelete
  7. வலைச்சர அறிமுகத்தில் இன்று நீங்கள்!.. வாழ்த்துக்கள் சகோ!

    ஓடி அலர்ந்து உணர்வுகள் தேய்ந்திடத்
    தேடித் சொரிவார் சினம்!

    உங்கள் ஆதங்கக் கவிதை உண்மை சகோ!...

    சொன்னாலும் வெட்கமடா
    சொல்லாவிட்டால் துக்கமடா... பாடலும் நினைவில் வருகிறது!

    ReplyDelete
  8. வணக்கம்
    ஐயா
    கவிதை வரிகள் அருமை இன்று வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  9. வணக்கம்
    த.ம7வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  10. சொன்னாலும் வெட்கமடா! சொல்லாவிட்டால் துக்கமடா என்று எடுத்துச் சொல்லி விட்டீர்கள்!

    ReplyDelete
  11. /பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா
    பிறப்பே தவறாய் எண்ணுதடா
    //

    நெறைய நிறைய பேருக்கு இந்த கவலை இருக்கு

    ReplyDelete
  12. நல்ல கவிதை... வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  13. வணக்கம் சகோதரரே
    நல்லதொரு கவிதையைப் பகிர்ந்தமைக்கும் வலைச்சர அறிமுகத்திற்கும் அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்..

    ReplyDelete
  14. வலைச்சர பாராட்டிற்கு வாழ்த்துக்கள் ஐயா.

    ReplyDelete
  15. வரவர புலம்பல் அதிகமாகி விட்டதே!!!!!!!!?

    ReplyDelete
  16. // உறவென்று சொல்ல வெட்கமடா
    உலகில் இதுவும் உண்மையடா
    பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா
    பிறப்பே தவறாய் எண்ணுதடா
    //

    உண்மை....... சிறப்பான கவிதை கவியாழி. பாராட்டுகள்.

    ReplyDelete
  17. திடீரென்று உறவின்மீது ஏனிந்தப் கோபம்.?
    கவிதை நன்று

    ReplyDelete
  18. நிஜ வரிகள்..நன்றி!
    revmuthal.com

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more