Monday, 30 December 2013

ஆண்களின் மாரடைப்புக்குக் காரணம் பெண்களா?

மாரடைப்பு நோய் என்பது பெண்களை விட  ஆண்களை அதிக அளவில் தாக்குகிறது. அதிகமாக   என்பது சதவிகிதம் ஆண்கள் இவ்வாறான மாரடைப்பு நோய்க்கு உள்ளாகிறார்கள்.சரியான உடற்பயிற்சி உடலுழைப்பு,உணவு கட்டுப்பாடு இல்லாமை ,அதிக அலைச்சல்,பணத்தேவைக்கான நெருக்கடி போன்ற காரணிகளே பெண்களைவிட ஆண்களுக்கு அதிக அளவில் மன அழுத்தம்  உண்டாகி மாரடைப்பு ஏற்படுகிறது.

மேலும் நம் உடலின் கழிவானது சிறுநீர்,மலம்,வேர்வை,மாதவிடாய்,விந்து வெளியேறுதல் போன்ற  இயற்கை நிகழ்வுகளால் நமது உடலில் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு  நல்ல ரத்தம் இருதயத்திற்குக் கிடைக்கிறது.நாற்பது வயதில் தான் அதிக உழைப்புக்கும் அலைச்சலுக்கும் குடும்பத்தின் எதிர்கால நலன் கருதி வீடு வாகனம் மற்றபிற பொருட்களையும் பிள்ளைகளின் உயர்கல்வி அவர்களின் எதிர்கால நலன் குறித்த கவலைகள் போன்ற காரணங்களே மனவழுத்தம்,உறக்கமின்மை ,வீட்டில் பிரச்சனைகள் எனப் பல வழிகளிலும் மனிதனின் மனதை முடக்கச் செய்யும் காரணிகளாய் இருக்கிறது

உடலில் ஹார்மோன் உற்பத்தி குறையும்போதும் நமக்குச் சில அறிகுறிகளைக் காட்டும் அப்போதே நாம்  மருத்துவரை அணுகி நமது இதயத்தின் இயக்கம், செயல்பாடு,ரத்தத்தின் அடர்த்தி,எலும்பு தேய்மானம்,அங்கங்களின் செயல்பாடு,மற்ற போன்றவற்றை மருத்துவரின் தகுந்த ஆலோசனையின்பேரில்  பரிசோதனை செய்து நமது உடலைப் பேணி காக்கவேண்டும்

 மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரைகளைத் தொடர்ந்து சாப்பிடுவதாலும் உடற்பயிற்சி,நடை பயிற்சி  தியானம், யோகா போன்ற  அவசியமான பயிற்சிகளுடன் கீரை,காய்கறிகள் உணவில் சேர்த்துக் கொள்வதாலும்  நமது உடல் வலிமையைச் சரிசெய்து கொள்ளமுடியும். மேலும் தொடர்ந்த எட்டு மணிநேர நல்ல உறக்கமும் இருக்க வேண்டும்.

ஆண்-பெண் உடலுறவு என்பது மிகவும் முக்கியமான அவசியமான மருத்துவரின் ஆலோசனையுமான ஒன்று பெரும்பாலான ஆண்களும் பெண்களும் பிள்ளைகள் பிறந்து வாலிப வயதை எட்டியதும் உடலுறவு என்பது அவசியமில்லாத ,தவிர்க்கவேண்டியாதாய், தவறான செயலாய் நினைப்பது  தவறென்று  மருத்துவர்கள் சொல்வது உண்மையானதே.

திடீரென  உணவுக்கட்டுப்பாடு,மன உளைச்சல் ,உடற்பயிற்சி இல்லாமை  சரியான நேரத்தில் உணவு உண்ணாமை,வாய்க்கு ருசியான கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளை உண்பது  மது,சிகரெட் போன்ற காரங்களாலாலும் தூக்கமின்மை,அசதி போன்றவற்றால் உடல் பலவீனமாகி  உடலுறவின்போது விருப்பமின்மை ,எழுச்சி இல்லாமல் இயலாமை ஏற்பட்டு  வேண்டாத விஷயமாகி அதிகக் கொழுப்பு ரத்தத்தில் சேர்ந்து இதுவும் மாரடைப்புக்கு வழிசெய்கிறது.

இதய நோயைத் தவிர்க்கப் பல காரங்கள் இருந்தாலும் பெண்களால் இதற்குத் தீர்வு காணமுடியும்.ஆண்கள் சோர்வுற்றிருக்கும்போது ஆறுதலான அவசியமான ஆலோசனை சொல்லி மருத்துவ உதவிக்கு அழைத்துச செல்ல வேண்டும்.உடற்பயிற்சியை வலியுறுத்தி நல்ல ஆரோக்கியமான உணவுகள்,பழம் ,உலர்ந்த கொட்டைகள்(முந்திரி,திராட்சை,பாதாம்) கொடுக்க முன்வரவேண்டும். இவ்வாறான வழிகளில் மாரடைப்பு நோயினால் மரணம் ஏற்படுவத் தவிர்த்து ஆரோக்கியமாய் நீண்ட நாட்கள் வாழமுடியும்.

எல்லாக் குடும்பத்திலும் ஆண்களின்  பங்கு தவிர்க்க முடியாதப் பங்களிப்பு அவசியமாகும்.நமது நாட்டின் கலாச்சாரம் பண்பாடு தவிர்த்துக் குடும்பத்தின் மேன்மை பிள்ளைகளின் கல்வி,குடும்பத்தை வழிநடத்திச் செல்லும் பொறுப்பு பெண்களைவிட எல்லா ஆண்களுக்கும் உண்டு அதனால்தான்  எல்லா நல்ல கெட்ட காரியங்களில் கூட ஆண்களைப் பிரதானமாக வைத்தே செய்யப்படுகிறது. எனவே பெண்களே ஆண்களின் நலனில் எப்போதையும் விட  நோயுற்றபின் அதிக அக்கறையுடன் கவனித்து மகிழ்வாய் வாழுங்கள்

(இது எனது சொந்தக் கருத்து.)


18 comments:

 1. வணக்கம்
  ஐயா
  பதிவு சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள்

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 2. நல்ல கருத்துக்கள் ஐயா...

  வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. ஆஹா இப்பிடி வேற ஆங்கிள் இருக்கா ? வித்தியாசமான பதிவு அண்ணே....!

  ReplyDelete
 4. நிறைய நடை மற்றும் வீடு கூட்டுதல் (a wholesome exercise )போன்ற செயல்களில் ஈடுபட்டால் மாரடைப்பு சான்ஸ் கம்மி என நான் நினைக்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் .ஆனால் பெண்களைவிட ஆண்களுக்கு வீட்டிலும் சரி வெளியிலும் சரி அதிக வேலைகள் இருக்கும்போது நீங்கள் சொன்னதை தொடர்ந்து செய்ய முடியவில்லையே

   Delete
 5. நல்லாரோக்கியக் குறிப்புகள்.
  இனிய வாழ்த்து.
  வேதா.இலங்காதிலகம்.

  ReplyDelete
 6. நல்லதொரு பதிவு!

  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 7. உங்கள் சொந்தக் கருத்தின் மூலம் ...ஒவ்வொரு ஆணின் மரணத்தின் பின்னாலும் எமன் ..இல்லை ..இல்லை ..வுமன் இருக்கிறாள் என்பது தெரிகிறது
  +1 !

  ReplyDelete
 8. புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா

  ReplyDelete
 9. "இது என் சொந்தக் கருத்து" என்று போட்டிருக்கிறீர்களே, இதுவரை எழுதியதெல்லாம் யாருடைய கருத்து? எங்களைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டீர்களே ஐயா (2) ஆண்களுக்கு, மனைவியானவள் பாதாம் பருப்பு முதலியன தரவேண்டும் என்கிறீர்கள். சரி. அதேபோல் மனைவிக்கும் கணவன் ஊட்டச்சத்து மிக்க பண்டங்களை (இரவில்!) கொடுக்கவேண்டும் என்பதை ஏன் எழுதவில்லை? பெண்கள் உங்கள் மீது ஆத்திரப்படக்கூடும்!

  ReplyDelete
 10. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 11. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

  நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

  ReplyDelete
 12. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. நல்ல கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்.
  இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 14. ஆண்களின் சார்பான கருத்து
  பெண்களின் கருத்து நிச்சயம்
  வேறாக இருக்கலாம்
  பயனுள்ள பகிர்வு

  தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
  இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்