தெய்வங்கள்

தெய்வங்கள்

பிறப்பே தவறாய் எண்ணுதடா...



சொல்லாமல் கேட்காமல் சுயமாக
முன்வந்து கொடுக்கா உறவும்
சோம்பலாய் இருக்கையில் அறிவைச்
சொல்லாத அப்பாவும்  அம்மாவும்

இல்லாத அறிவை இயைந்து
எடுத்துச் சொல்லா உடன்பிறப்பும்
இருப்பதைக் கொடுத்துத் துணையாய்
இன்முகம் காட்டா நட்பும்

பொல்லாத நேரத்தில் புரியாமல்
போலியாய்த் தேவையென நடித்து
தள்ளாத காரணம் சொல்லி
தாங்க வைக்கும் உறவும்

நிலைமை தெரிந்தும் வருந்தாமல்
நேரமும் பழிக்கும் மனைவி
வயதைக் கடந்தும் வேலையின்றி
வருந்தாத வாரிசின் அலட்சியமும்

 உறவென்று சொல்ல வெட்கமடா
உலகில் இதுவும் உண்மையடா
பிள்ளைகள் இருந்தும் தொல்லையடா
பிறப்பே தவறாய் எண்ணுதடா



@@@@@ கவியாழி  @@@@@@







Comments

  1. வணக்கம்
    ஐயா.

    உண்மையான வரிகள்..... நன்றாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. இப்படி எல்லாம் இருந்தால் வாழ்வு சிரமம் தான்...

    ReplyDelete
  3. அனைத்தும் சத்தியமான வரிகள் அண்ணே...!

    ReplyDelete
  4. பிறந்தது தவறல்ல நண்பரே! சில சூழ்நிலைகளில் தாங்கமுடியாத துயரம் வரத்தான் செய்யும். அதைப் பொறுத்துக்கொண்டு வெளிவர முயற்சி செய்யவேண்டும். அதன்பிறகு தான் மனிதப் பிறவியின் மகத்துவம் புரியும். தெரியாமலா ஒருவர் சொன்னார், 'மனித்தப் பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே' என்று? (த.மா.3)

    ReplyDelete
  5. சித்தராக எண்ணமா!

    ReplyDelete
  6. கவிதை அருமை!
    வாழ்வு என்றால் மேடு பள்ளங்கள் இருக்கத்தானே செய்யும் அன்பரே! போற்றுவார் போற்றட்டும், தூற்றுவார் தூற்றட்டும் என கடந்து வரத்தான் வேண்டும்!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  7. சித்தர்களின் போக்கில் சிந்தனை
    சராசரிகள் நமக்கு எதற்கு ?
    கருத்து எப்படியோ
    கவிதை அருமை

    ReplyDelete
  8. எதிர்மறையாக கருத்துக்கள் அதிகம் உள்ளன. இருப்பினும் அவை தற்காலத்தில் உண்மைதான்.

    ReplyDelete
  9. தங்கள் சூழ்நிலை விளக்கத்தை வரவேற்கிறேன்.


    தங்கள் தள முகவரியை வலைப் பதிவர்களின் தமிழ் பக்கங்கள் (http://thamizha.2ya.com) தளத்தில் இணைத்து உதவுங்கள்.

    ReplyDelete
  10. அருமையான கவிதை. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்