தெய்வங்கள்

தெய்வங்கள்

எப்போதும் வெற்றிபெற...

மழுக்கினால் மீண்டும் கூராகு
மறுபடி சிறந்து  சீராகு
தடுக்கினாலும் விழுந்து விடா
தைரியமாய் நிமிர்ந்து நில்லு

களப்பணியில் கவலையின்றி
கருத்துடனே செய்ய மறுக்காக்
கச்சிதமாய் இலக் கதனை
கடைசிவரை முடித்திடு

தடுத்திடு மந்தத் தடைகளைத்
தகர்த்திட முயற்சி செய்து
பகிர்ந்திட்ட காரியம் முடித்து
பார்போரை வியக்கச் செய்திடு

எப்படியும் எழுந்து நின்று
எல்லோரும் வியந்திடவே நீ
எழுச்சியுடன் நிமிர்ந்து நின்றால்
எப்போதும் வெற்றியே மகிழ்ச்சியே

(கவியாழி)




Comments

  1. அப்படிச் சொல்லுங்க... இப்படி மன உறுதி வேண்டும்...!

    வாழ்த்துக்கள் ஐயா...

    ReplyDelete
  2. அருமையான தன்னம்பிக்கைக் கவிதை!

    ReplyDelete
  3. மனசுக்கு தன்னம்பிக்க தரு கவிதை, காலையிலேயே ஒரு புத்துணர்ச்சி தோன்றுகிறது !

    ReplyDelete
  4. தடுத்திடு மந்தத் தடைகளைத்
    தகர்த்திட முயற்சி செய்து
    பகிர்ந்திட்ட காரியம் முடித்து
    பார்போரை வியக்கச் செய்திடு

    வியக்கவைக்கும் கவிதை..!

    ReplyDelete
  5. நம்பிக்கை நம் நெஞ்சில் இருந்தால்
    கத்தியின் முனையில் ஏறி நின்று
    காலத்தின் நெற்றியில் போட்டு வைக்கலாம் என்கிற கலாபிரியாவின் கவிதையை நினைவுபடுத்திய உங்கள் கவிதை டானிக் !
    த .ம 2

    ReplyDelete
  6. மழுக்கினால் மீண்டும் கூராகு
    மறுபடி சிறந்து சீராகு
    தடுக்கினாலும் விழுந்து விடா
    தைரியமாய் நிமிர்ந்து நில்லு

    மன உறுதி தரும் கவிதை...!

    ReplyDelete
  7. //எல்லோரும் வியந்திடவே நீ
    எழுச்சியுடன் நிமிர்ந்து நின்றால்
    எப்போதும் வெற்றியே மகிழ்ச்சியே//

    மனதில் உறுதி வேண்டும்! வாழ்வில் வெற்றி பெற இது இல்லாமல் ஒன்றுமே பயனில்லை, நல்ல கருத்து! பாரதியாரின் வரிகளும் நினைவுக்கு வந்தது!

    பகிர்வுக்கு நன்றி!


    ReplyDelete
  8. //மழுக்கினால் மீண்டும் கூராகு
    மறுபடி சிறந்து சீராகு// அருமை!
    நல்லதொரு கவிதை ஐயா!
    த.ம.4

    ReplyDelete
  9. சிறப்பான அறிவுரைக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் சகோதரா .

    ReplyDelete
  10. தன்னம்பிக்கை வரிகள் சிறப்பு! நன்றி!

    ReplyDelete
  11. வணக்கம்
    ஐயா.

    மனதில் எழுச்சி பிறக்கும் கவி வரிகள்... பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா..

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  12. எழுச்சியுடன் எழுந்து நின்றால் வெற்றிதான்
    அருமை ஐயா

    ReplyDelete
  13. கவிதை அருமை ஐயா...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  14. மனசுக்கு உறுதி தரும் கவிதை!

    ReplyDelete
  15. அருமையாகச் சொன்னீர்கள்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. மிகவும் அருமை...
    மீண்டும் மீண்டும் கூராகுவது ரொம்ப அவசியம்...

    ReplyDelete
  17. மனதி உறுதி கொள்.....

    சிறப்பான கவிதை கவியாழி. பாராட்டுகள்.

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்