பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே.....
குற்றம் மட்டும் சொல்லாதீர்
குறையைச் சுட்டி நகைக்காதீர்
சுற்றம் நட்பும் சேர்ந்தேனும்
சொல்லி மாற்ற தவறாதீர்
நக்கல் செய்து பேசுவதும்
நல்லதைச் சொல்ல மறுப்பதுமே
சிக்கல் கொண்டு இருக்கையிலே
சொல்வதை முனைந்து சொல்வீரே
அச்சம் தவிர்க்கச் சொல்லுங்கள்
ஆளுமை கற்க உதவுங்கள்
மாணவ பருவ வாழ்கையுமே
மகிழ்ந்தே இருக்க வைப்பீரே
அக்கம் பக்கம் பழகுவதை
அருகில் உள்ள நண்பர்களை
சுற்றம் உறவும் இருப்பதையுமே
சொல்லி புரிய வைத்திடுங்கள்
நிச்சயம் முடிந்தால் கல்விக்கு
நேரமும் பணமும் செலவழித்து
பக்கத் துணையாய் இருப்பீரே
பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே
குறையைச் சுட்டி நகைக்காதீர்
சுற்றம் நட்பும் சேர்ந்தேனும்
சொல்லி மாற்ற தவறாதீர்
நக்கல் செய்து பேசுவதும்
நல்லதைச் சொல்ல மறுப்பதுமே
சிக்கல் கொண்டு இருக்கையிலே
சொல்வதை முனைந்து சொல்வீரே
அச்சம் தவிர்க்கச் சொல்லுங்கள்
ஆளுமை கற்க உதவுங்கள்
மாணவ பருவ வாழ்கையுமே
மகிழ்ந்தே இருக்க வைப்பீரே
அக்கம் பக்கம் பழகுவதை
அருகில் உள்ள நண்பர்களை
சுற்றம் உறவும் இருப்பதையுமே
சொல்லி புரிய வைத்திடுங்கள்
நிச்சயம் முடிந்தால் கல்விக்கு
நேரமும் பணமும் செலவழித்து
பக்கத் துணையாய் இருப்பீரே
பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே
அருமையான கவிதை ஐயா. பகிர்ந்தமைக்கு நன்றிகள்.
ReplyDeleteசொல்லவேண்டியதை
ReplyDeleteஅருமையாகச் சொன்னீர்கள்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 1
ReplyDeleteமிகவும் முக்கியமான விசயத்தை அருமையாக சொல்லி உள்ளீர்கள் ஐயா... வாழ்த்துக்கள்...
ReplyDeleteநல்லதொரு கருத்தைச் சொல்லும் கவிதை, அருமை!
ReplyDeleteத.ம.5
அருமையான கவிதை!
ReplyDeleteநிச்சயம் முடிந்தால் கல்விக்கு
ReplyDeleteநேரமும் பணமும் செலவழித்து
பக்கத் துணையாய் இருப்பீரே
பெண்ணுக்கு கல்வியைக் கொடுப்பீரே//
அருமையான வரிகள்! பாரதியை நினைவூட்டும் வரிகள்!
வாழ்த்துக்கள்!
உயர்வான எண்ணம். வாழ்த்துக்கள்
ReplyDeleteபெண்கள் நாட்டின் கண்கள் என்று என்னக்கு நாம் உணர்கிறோமோ அன்றே பெண்கள் கல்வி சிறக்கும் இல்லையா அண்ணே ?
ReplyDeleteஅருமை கவிஞரே...
ReplyDeleteவாழ்த்துக்கள்
அகப்பை ஏந்திய பெண்கள்
ReplyDeleteஎழுதுகோல் ஏந்துகிறார்களே!
பெண்கள் கற்றவர் ஆயினர்
பெண்ணுக்குக் கல்வியைக் கொடுப்பவர்
இருப்பதனாலேயே - ஆயினும்
இன்னும் மேலோங்க வேண்டுமே!
தங்கள் கருத்தை வரவேற்கிறேன்
நல்ல எண்ணம் நண்பரே..... வாழ்த்துகள்.
ReplyDelete