அதிகாலைப் பனிபொழிவால்.....
அதிகாலைப் பனிபொழிவால்
ஆனந்தம் எப்போதும் இருக்கட்டும்
அதன்பின்னே மழைத்துளியும்
அடிக்கடியும் தூரட்டும்
மிதமாக மழை பெய்தும்
மீண்டும் மகிழ்ச்சி இருக்கட்டும்
பதமாக சிணுங்கலோடு தொடக்கம்
பக்குவமாய் உணர்ந்து ரசிக்கட்டும்
இடையிடையே கதைச் சொல்லி
இதமாக தழுவ வேண்டும்
இடியுடன் மழை பொழிந்தால்
இறுக்கி அணைக்க வேண்டும்
மெலிதான மெல்லிசையை
மெய்மறந்து கேட்கவேண்டும்
மேனியெங்கும் சிட்டெறும்பாய்
மெதுவாக கவ்வ வேண்டும்
உடலெங்கும் கொடிபோல
தழுவ வேண்டும் காதல்
உணர்சிகளை எழுச்சியுடன்
ஒற்றுமையாய் தீண்டவேண்டும்
அடடா... இதமான வரிகள்... எங்கேயோ போயிட்டீங்க...!
ReplyDeleteவாழ்த்துக்கள்...
மெலிதான மெல்லிசையை
ReplyDeleteமெய்மறந்து கேட்கவேண்டும்
>>
ஆஹா! என் கட்சில சேரவும் ஒரு ஆளி இருக்கு. எப்பவும் பாட்டு ஓடிக்கிட்டே இருக்கும் நான் மட்டும் வீட்டில் இருக்கும்பொழுதுகளில்...,
அருமையான வருடும் வரிகள் அதுவும் கடைசி வரிகள் நச் இனிமை!
ReplyDeleteவாழ்த்துக்கள!
நல்ல ரசனையான வரிகள்...
ReplyDeleteநலம் தானே ? இல்லத்தில் அனைவரும்நலமா ?
படிக்கும்போதே ஆனந்தம் தொற்றிக்கொள்கிறது.
ReplyDeleteஅருமையான வரிகள்! பனி காலம் தவறி பெய்ந்து நோய் உண்டாக்குவதுதான் கொடுமை! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeletetamilmanam 8
ReplyDeleteஅனேகமா உங்களிடம் ஒரு கவிதை மெஷின் இருக்க வேண்டும்..
ReplyDeleteஅதிகாலைப் பனிபொழிவு நல்ல சுகத்தை தந்துள்ளது. பாராட்டுகள்.
ReplyDeleteதங்கள் கற்பனையை வரவேற்கிறேன்!
ReplyDeleteஅதிகாலைப்,பனிப்பொழிவின்
ReplyDeleteசுகத்தில் மகிழ்ந்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
tha.ma 9
ReplyDeleteஇதமான வரிகள்...! வாழ்த்துக்கள் ஐயா...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
நல்ல ரசனை!
ReplyDeleteத.ம. +1