பகட்டு வாழ்கையால் பயனேது ?
ஆயிரம் பலதும் சேர்த்தாலும்
ஆயுளும் அதிகம் இருந்தாலும்
ஆலயம் தோறும் பணமாக
ஆண்டவன் மகிழக் கொடுத்தாலும்
ஊரும் பெரும் செல்வாக்கும்
உயர்ந்த பொருளை கொண்டாலும்
உற்றார் அருகில் இல்லாத
உயர்ந்த வாழ்க்கை பலனுன்டா
பேரைச் சொல்லி அழைத்திடவும்
பேதைமை இன்றி பழகிடவும்
நாளும் அருகில் மகிழ்வுடனே
நல்ல நண்பர்கள் வேண்டுமடா
வாடா போடா என்றழைக்க
வாழ்ந்த கதைகளை தெரிவிக்க
ஆத்தா அப்பனும் அருகிலின்றி
ஆனந்த வாழ்வு கிடைத்திடுமா
சுற்றமும் சொந்தமும் துணையின்றி
சொர்க்கமே உனக்கு கிடைத்தாலும்
பற்றும் பாசமும் கிடைக்காத
பகட்டு வாழ்க்கையால் பயனேது
(கவியாழி)
ஆயுளும் அதிகம் இருந்தாலும்
ஆலயம் தோறும் பணமாக
ஆண்டவன் மகிழக் கொடுத்தாலும்
ஊரும் பெரும் செல்வாக்கும்
உயர்ந்த பொருளை கொண்டாலும்
உற்றார் அருகில் இல்லாத
உயர்ந்த வாழ்க்கை பலனுன்டா
பேரைச் சொல்லி அழைத்திடவும்
பேதைமை இன்றி பழகிடவும்
நாளும் அருகில் மகிழ்வுடனே
நல்ல நண்பர்கள் வேண்டுமடா
வாடா போடா என்றழைக்க
வாழ்ந்த கதைகளை தெரிவிக்க
ஆத்தா அப்பனும் அருகிலின்றி
ஆனந்த வாழ்வு கிடைத்திடுமா
சுற்றமும் சொந்தமும் துணையின்றி
சொர்க்கமே உனக்கு கிடைத்தாலும்
பற்றும் பாசமும் கிடைக்காத
பகட்டு வாழ்க்கையால் பயனேது
(கவியாழி)
ஊரும் பெரும் செல்வாக்கும்
ReplyDeleteஉயர்ந்த பொருளை கொண்டாலும்
உற்றார் அருகில் இல்லாத
உயர்ந்த வாழ்க்கை பலனுன்டா//
இந்த கவிதை எங்களைப்போன்ற நாடோடிகளுக்கே கிடைத்த சோகம் !
அற்புதம்
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
அதானே... நட்பு இல்லாமல் வாழ்வில் சிறப்பேது...?
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா...
கடைசியில் அழகாக முடித்திருக்கிறீர்கள் ஐயா
ReplyDeleteஅழகான சிந்தனை வாழ்த்துக்கள்
வாடா போடா என்றழைக்க
ReplyDeleteவாழ்ந்த கதைகளை தெரிவிக்க
ஆத்தா அப்பனும் அருகிலின்றி
ஆனந்த வாழ்வு கிடைத்திடுமா
சுற்றமும் சொந்தமும் துணையின்றி
சொர்க்கமே உனக்கு கிடைத்தாலும்
பற்றும் பாசமும் கிடைக்காத
பகட்டு வாழ்க்கையால் பயனேது//
நன்றாக சொன்னீர்கள்.
அருமையான கவிதை.
வாழ்த்துக்கள்.
சுற்றமும், நட்பும் இருந்தால் தான் வாழ்க்கை சிறக்கும்.
அருமையான இக்காலத்திற்கேற்ற கருத்துஉள்ளக் கவிதை! பகட்டு வாழ்க்கைக்கு, அதுவும் social status கருதி அளவுக்கு அதிகமாகப் பகட்டு வாழ்க்கைக்குச் செலவழிக்கத் தயங்காத மக்கள் அன்புள்ள சுற்றத்தாரை ஏனோ கண்டு கொளவதில்லை!
ReplyDeleteஅருமையான பகிர்வு!
வாழ்த்துக்கள்!
பகட்டு வாழ்க்கைக்கு மயங்கக்கூடாது
ReplyDeleteஊரும் பெரும் செல்வாக்கும்
ReplyDeleteஉயர்ந்த பொருளை கொண்டாலும்
உற்றார் அருகில் இல்லாத
உயர்ந்த வாழ்க்கை பலனுன்டா//
நன்றாக சொன்னீர்கள் நன்றி வாழ்த்துக்கள் ....!
மிகச்சிறப்பான கருத்தை வளரும் தலைமுறைக்கு சரியான நேரத்தில் சொன்னீர்கள்.
ReplyDeleteமிகவும் நல்லதொரு கேள்வியை பகட்டு வாழ்வில் மோகம் கொண்டவர்கள் முன்வைத்திருக்கிறீர்கள். பாராட்டுகள் ஐயா.
ReplyDeleteநன்றாய் சொன்னீர்கள்! பகட்டு எல்லாம் உடற்கட்டு போன்றதே! நாள் ஆக ஆக குறைந்து போகும்! அருமை!
ReplyDeleteபயனற்ற பகட்டு வாழ்க்கையைத் தோலுரித்துக் காட்டியமைக்கு நன்றி.
ReplyDeleteஇப்போதெல்லாம் வாழ்க்கையைச் சற்று ஆழமாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறீர்கள். அதிலேயே மூழ்கிவிடவேண்டாம். சோகங்கள் மாறும். சொந்தங்கள் உருவாகும். நட்புகள் மெருகேறும். கலங்காதீர்கள்!
ReplyDeleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteவாழ்க்கையை உண்மையை மிக அழகாக சொல்லி விட்டீர்கள். எவ்வளவு உயர்ந்தாலும் விழுந்தவுடன் தூக்கி விட்ட பெற்றோர்களின் கைகளை மறக்காமல் கவியாய் தந்துள்ள தங்களது தங்க மனம் கண்டு நெகிழ்கிறேன். தங்களைப் போன்றோரால் தான் உலகம் இன்னும் நிலை பெறுகிறது என்றே சொல்வேன். பகிர்வுக்கு நன்றி சகோதரர்..
பற்றும் பாசமும் இல்லாத வாழ்வு ஒரு வாழ்வா.. அருமை..
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-4-part2.html) சென்று பார்க்கவும்... நன்றி...
த.ம.10
ReplyDeleteஉண்மை உண்மை..உற்றாரும் நம்பரும் இல்லா வாழ்க்கை வெற்று வாழ்க்கை...
இந்தக் கருவில் என் கவிதை ஒன்று:
http://thaenmaduratamil.blogspot.com/2014/01/arusuvai-unavum.html
//சுற்றமும் சொந்தமும் துணையின்றி
ReplyDeleteசொர்க்கமே உனக்கு கிடைத்தாலும்
பற்றும் பாசமும் கிடைக்காத
பகட்டு வாழ்க்கையால் பயனேது//
நல்ல கேள்வி.
த.ம. +1
"வாடா போடா என்றழைக்க
ReplyDeleteவாழ்ந்த கதைகளை தெரிவிக்க
ஆத்தா அப்பனும் அருகிலின்றி
ஆனந்த வாழ்வு கிடைத்திடுமா?" என்ற வரிகள்
எனக்குப் பிடித்திருக்கிறதே!