பொறுப்புள்ள தந்தையாய்....
பொறுப்புள்ள தந்தையாய் இருந்து
பிள்ளையைப் படிக்க வைத்து
மறுத்திடா செலவு செய்து
மக்களைக் காத்திடு உண்மையாய்
உணர்த்திடு உள்ள கடமை
உன்னுடைய வேலை யென்று
உள் வாங்கிப் புரிந்திடவே
உதவியாகச் சொல்லிக் கொடு
தடம் புரண்டு செல்லாமல்
தன் மானம் இழக்காமல்
இடம் பொருள் ஏவலையும்
இன்முகமாய் சொல்லி வளர்த்திடு
நன்னடத்தை நா நயம்
நல்லோரின் நல் ஆசியும்
எல்லாமும் தெரிந்திடவே
எப்போதும்உணர்த்தி விடு
மென்மையாக சொல்லிக் கொடு
மகிழ்ச்சியாக உணர்த்தி விடு
பெண்மையின் உயர் தத்துவத்தை
போற்றிப் போற்றி வாழவிடு
பிள்ளையைப் படிக்க வைத்து
மறுத்திடா செலவு செய்து
மக்களைக் காத்திடு உண்மையாய்
உணர்த்திடு உள்ள கடமை
உன்னுடைய வேலை யென்று
உள் வாங்கிப் புரிந்திடவே
உதவியாகச் சொல்லிக் கொடு
தடம் புரண்டு செல்லாமல்
தன் மானம் இழக்காமல்
இடம் பொருள் ஏவலையும்
இன்முகமாய் சொல்லி வளர்த்திடு
நன்னடத்தை நா நயம்
நல்லோரின் நல் ஆசியும்
எல்லாமும் தெரிந்திடவே
எப்போதும்உணர்த்தி விடு
மென்மையாக சொல்லிக் கொடு
மகிழ்ச்சியாக உணர்த்தி விடு
பெண்மையின் உயர் தத்துவத்தை
போற்றிப் போற்றி வாழவிடு
பொறுப்புள்ள வரிகள் ஐயா...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
தந்தையின் கடமை எதுவோ அதை மிகவும் சிறப்பாக எடுத்துரைத்த
ReplyDeleteகவிதைக்கு வாழ்த்துக்கள் சகோதரா .
DD சொன்னாப்லே பொறுப்புள்ள அமுதவர்கள் தானே இவை. பெற்றோரை உள்ளவும் நினைப்பவர் சிலரே.
ReplyDeleteபாக்யமணி
பள்ளிக்கரனை
வணக்கம்
ReplyDeleteஐயா.
ஒவ்வொரு வரிகளும் சிறப்பு... வாழ்த்துக்கள் ஐயா.
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
"நன்னடத்தை நா நயம்
ReplyDeleteநல்லோரின் நல் ஆசியும்
எல்லாமும் தெரிந்திடவே
எப்போதும் உணர்த்தி விடு" என்ற
வழிகாட்டலை வரவேற்கிறேன்.
பொறுப்பான கவிதை
ReplyDeleteபகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்
தந்தை சொல்மிக்க மந்திரமில்லை!
ReplyDeleteபொறுப்பான வரிகள் ஐயா
ReplyDeleteநன்றி
த.ம.7
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்
சிறப்பான அறிவுரை.... பாராட்டுகள்.
ReplyDelete