Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, 16 February 2013

காதலி ! காதலா ! காதல்!
ஒருதலைக் காதல் ஜெயித்ததில்லை
உணர்வுள்ள காதல் தோற்றதில்லை
மறு பிறப்பு மீண்டும் வருவதில்லை-காதல்
மறந்து போனதாய் சரித்திரமில்லை

மனம் பார்த்து வருவதே காதல்
மிகையான பணம் பார்த்த தல்ல
குணம் மாற்றியும் வரலாம்-காதல்
கொள்கை உறுதி யோடும் வரலாம்

அவசர காதல் அழிந்ததுண்டு
அவசிய காதல் முறிந்ததுண்டு
ரகசிய காதல் ஜெயித்ததில்லை-காதல்
ரசனை மட்டுமே தகுதியில்லை

மனதை மாற்ற போராடு
மகிழ்ச்சியோடு அதை நீ நாடு
புதிதாய் செய்வோர் புனிதத்தை -அன்பாய்
புகழ்ந்து வாழ்த்தி  நீ சொல்லு

பிரியும் காதல் தொடர்ந்ததில்லை
பிரிக்கின்ற காதல் அழிவதில்லை
புரிகின்றோர் காதல் முடிவதில்லை-வெற்றி
புரிந்தோர் அதையும் தடுப்பதில்லை

Saturday, 26 January 2013

இதழ் வேண்டும் எனக்கு..........

இதழ் வேண்டும் எனக்கு
இதழ் வேண்டும்

இமைமூடிப் பருக
இதழ் வேண்டும்

இணையாகும் முன்னே
இதழ் வேண்டும்

இறுக்கி அணைத்தபடி
இதழ் வேண்டும்

நுனி நாக்கில் சுவைக்க
இதழ் வேண்டும்

நெடுநேரம் முடியாத
இதழ் வேண்டும்

முடியாத நேரமாய்
இதழ் வேண்டும்

முப்பொழுதும் உணவாக
இதழ் வேண்டும்

எப்போதும் சுவையாக
இதழ் வேண்டும்

எழுச்சிப் பெரும் முன்னே
இதழ் வேண்டும்

இனிக்கின்ற  கனியாக
இதழ் வேண்டும்

கட்டுடலை சூடாக்க
இதழ் வேண்டும்

கனிந்தவுடன் முழுவதுமாய்
கடைசிவரை எனக்கு  அது ? வேண்டும்.

Sunday, 20 January 2013

தற்கொலைத் தண்டனை யாருக்கு?

எண்ண கனவினில்  நாளும் வடிவமைத்து
எத்தனையோ சிந்தனையை முன் நிறுத்தி
அத்தனையும் வண்ணமாய் உருக்கொடுத்து-அன்பாய்
சித்தனாக சிலைபோல நெஞ்சில்  வளர்த்தார்கள்

சிறுஎறும்பும் சீண்டாது பார்த்திருந்து
சிறிய வயதிலே  செம்மையாக நகையணிந்து
உரிய கல்வியையும் உடன் கொடுத்து-ஊர்பேச
பருவ வயதையும் பார்த்து பூரித்திட்டார்கள்

தெருவோரம் நின்று தினமும்  ரசித்து
தினம்தோறும் உணவும் விரும்பிய தீனியும்
மனம்கோனது மகிழ்ச்சியாய் திணித்து-அன்றாடம்
அகமெல்லாம் அன்பொழுக நாளும் பார்த்தார்கள்

இளமை பருவத்திலே எத்தனையோ  கற்று
எளிமை பண்பையும் சொல்லி கொடுத்து
வளமையாக்கி வடிவமைத்து  வாழவேண்டி-நலம்கான
கிழமை தோறும விரதமும் இருந்தார்கள்

இத்தனையும் செய்தும் இழி மனதில்
பித்தனாய் மாறி  பிறள் புத்தியால்
தத்துவம்  பேசி தவறான முடிவை-மனமொடிந்து
சத்தியம் தவறி சாகமட்டும் துணிந்ததால்

புரியவில்லை எனக்கு புதிரோன்றும் அறியவில்லை
புரிந்தவரையும்  காக்க பொருளேதும் சேர்க்கவில்லை
மடையனே மன்னிக்கமுடியாத இடையனே-விடையடைய
மனம்திறந்து  சொன்னாயா மனிதனாக நின்னாயா

மதி  இழந்தோரே  மனபயம்  கொண்டேரே
விதி முடியவில்லை வீணான எண்ணத்தால்
சதியாக சமூகத்தில் கேடாக செய்திட்ட-சண்டாளனே
சாதித்தது என்ன சாக்கடை எண்ணத்தால்?

இதுபோன்ற செய்கையால் எண்ணற்ற உயிர்கள்
இழிவான  பாதைக்கு இடர் தெரியாமல்
மலிவான செய்கையால்  மனம்கெட்டு-தவறாக
மனமுடைந்து  மதிகெட்டு  விதியென்று  சாகிறார்கள்

நஷ்டம் யாருக்கு ? நம்பியோற்கும் தண்டனையா?
கஷ்டமெல்லாம்  வந்ததால்  கடமை மறந்தாயே?
பெற்ற  பிள்ளைக்கு பிரச்னை  வேண்டுமா?-கஷ்டமெல்லாம்
உற்ற துணைவிக்கும் உன்னை வளர்த்த பெற்றோருக்கா?

மனிதனாக இரு  மனிதத்தை  மகிழ்ச்சியாக்கி
மதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்
புனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே
இனிமையாக ஏற்று எல்லோரையும் போற்றுThursday, 20 December 2012

அகத்தை ஆள ஆணவத்தை அடக்குஅகத்தை ஆள ஆணவத்தை அடக்கு 
அகிலமும் உனைநோக்க நேர்நிறுத்து
சுகத்தை உன்னுள் நேர்த்தி செய்தால்-ஆயுளில்
யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் !


உன்னில் ஒளிந்திருக்கும் ஒளியரிந்திடும்
உன் கணக்கு என்னவென்று  உன்னுடலில்
 வெண்ணை சேர்காதமேனி வெளிர்ந்திடும்-உண்மையாக
கண்ணுள் காட்டிடும்  கனியாக  தெரிந்திடும்!

மெய்யும்  பொய்யும் மேனியு  ளதில்லை
மெய்ஞானம் நேரில் பார்த்த தில்லை
சொல்லும்  செயலும்  சேர்ந்தே யன்றி -எளிதில்
சொல்லாத சொல்லால் பயமேதுமில்லை!

இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம்
இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம்
பொய் சொல்லோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில்
புரிந்திடும்  மெய்ஞானம் தெரிந்திடும் எளிதாக

நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும்
நாணயம் எப்போதும் துணை நிற்கும்
வம்பிலுப்போர்  வாழ்வு நெறிகெட்டு-துன்பமாக
சம்பவிப்பார் சாபங்களை சந்ததிக்கு சேர்ப்பார் !

கஷ்டம் கடக்கும் காலம் வந்தால்
நஷ்டமும் தீரும் நன்மை பெறும்
இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-மகிழ்ந்து
துஷ்ட மெல்லாம் தூரசென்று  விலகிடும் !

நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவாய்
நன்றியுள்ள ஜீவனுக்கும் நண்பனாவாய் அன்பனாவாய்
இல்லாதவனாய் இருந்தாலும் இன்ப வாழ்வில்-நேர்மையான
இல்லறத்தில் துன்பமில்லா நல் இறைவனாவாய் !

Monday, 3 December 2012

21.12.2012 ல் உலகம் அழியுமா? அழியாது!

நெஞ்சில் ஈரமின்றி மனித நேயமின்றி
வஞ்சகமாய் கூட்டி வாழ்வை அழித்து
பிஞ்சுக்குழந்தை பெண்களை முதியோரை-கொன்ற
பஞ்சமா  பாதகன் பதவியிழந்து அழிவான்

நேர்மை  மறந்து நிம்மதி கெடுத்து
ஊரை  ஏய்த்து பணம் திண்ணும்
பேரை மாற்றும் பிறவித் திருடன்-அழிவான்
பிறரை  ஏமாற்றிய பொருளையும் இழப்பான்

அரசியல்  செய்யும் அறிவியல் திருடன்
அவசியமின்றி பொய்களை பேசி வாழ்பவன்
துறவி என்று தவறு செய்யும்-துன்பமாக்கி
உறவை கெடுப்பவன்  உரிமையிழந்து  மடிவான்

அடுத்தவன் நாட்டு பணத்துக்கு ஆசைப்பட்டு
ஆணவம்  மிகுந்து அறிவு கெட்டு
படைத்தோரை மறந்த படுபாவிகள்-சேர்த்த
பணத்தை இழந்து தவிப்பான்  உணர்வான்
                              ******

உலகம் அழியாது உண்மைகள் தோற்காதுSaturday, 17 November 2012

மனிதனா? மனிதமா?

மனதும் மனதும் சேர்ந்தால் -காதலாம்
மனமின்றி தவித்தால் மோதலாம்

விபத்தென்றால் விதியென்று சொல்வார்-மோதலால்
அபத்தமாய் வேறு சாதிஎன்பர்

ஆயிரம் தூரம் தாண்டினால் -அய்யய்யோ
அருகில் ஏனோ மௌனம்

அந்தகாலம் மாறவில்லை மனிதன்-ஆனாலும்
மாறிவிட்டான் அறிவியல் ஆனந்தமாய்

சொந்தபந்தம் யாருமில்லை  சொல்லிக்கொள்ள-நகரில்
சொந்தமில்லை பந்தமில்லை

Friday, 16 November 2012

பனிக்காலம்


கணவன்  

கார்த்திகை மாத பணி கடுமையால்-குளிரில்
கணவனை  நோக்கும் இளமையாய்

கையிலிருந்த காசை கரியாக்கியதால் -கடனோடு
செய்வதரியாமல் சினம் கொள்வார் இம்மாதம்

மனைவி

கண்விழித்துப்  பார்த்தும்க் கதிரவனை காணாது -நேரம்
காலம் கடந்து அதிர்ச்சியாய் ஏழத்தோன்றும்

இன்னும் அருகில் இணைந்து படுக்க-இன்முகம்
பண்ணும் சேட்டைகள் அதிகம் ஏங்கும்
கடவுள் பக்தர்

சாத்திரம் படித்து நேர்த்தியாய் திரு-சன்மார்க்கம்
போற்றிட சொல்லும் பெருமையாய்

ஆத்திரம் அடங்க  அகிலம் போற்ற-கோவில்
சத்திரம் செல்வர்  சாமியிடம்  சரணடைவர்

காதலர்கள்

புது துணியோடு  புறப்படும்  இளசுகள் -சினிமா
பல புதிய படம் காண்பர்  இணையாக

தனிமையில் தவிக்கும் இளம் சிட்டுகள்-தடுமாறும்
இனிமை தேடி இரவையே தவிர்க்கும்

சிறுவர்கள் 

படிக்க மறுக்கும்  பணியால் உறக்கம்-எழுந்து
பாடம் படிக்க குளிரில் நடுங்கும்

தேர்வு தொடங்கும் பயம் கொள்ளும்-தேர்வெழுத
தினமும்  உண்ண மறுக்கும் பட்டினியாய்


Tuesday, 30 October 2012

இதழன்றி என்ன தருவாய்? அன்பே! Photo: மழையில் கூட 
தீவைக்கிறது 
உன் தீண்டல்கள்..

-சம்யுக்தா

 
அருகில் வராதே அணைத்து கொள்வேன்
அனைவரின் முன்னே இணைத்துக்கொள்வேன்
அடுத்த நிமிடம் சுவைக்க தோன்றும்-எனக்கு
அதற்கும்  மேலும் தாண்டச் சொல்லும்

இனிக்கத்தானே இதழைப் பிடித்தேன்
இதை மறுத்தால் என்ன செய்வேன்
இன்று  மழையில் இந்த நேரம்-எனக்காக
இதழன்றி  என்ன தருவாய்  அன்பே

என்னை மீறி எதுவும் நடந்தால்
எனக்கும்  உனக்கும் பங்கு  உண்டு
பினக்கின்றி  பிரியமாய் தந்திடு-உரிமை
பிணைப்பை உண்டென உணர்ந்திடு

நெஞ்சிலே நெருப்பு வார்த்தாய் தீ
கொஞ்சமாய்  பற்றி வர செய்தாய்
துஞ்சமில்லை எனக்கு தூக்கமில்லை
வஞ்சியே வா வனப்பிதழைத்தா !Friday, 26 October 2012

இளமை இருப்பது சிலகாலம்


 

இளமை இருப்பது சிலகாலம்
எளிதில் வசப்படும் வரும்காலம்
கனவு கண்டிடு நிகழ்காலம்- கனிந்திடும்
வெற்றி  உன்கையில் எதிர்காலம்

வெற்றியின்  நிழலை தீண்டி விளையாடு
வேகமாய் வந்திடும் உன் பின்னாடி
ஒற்றுமை உள்ளுள் நினைத்து போற்றி-உண்மையாய்
ஒருநாளும் மறவாமல் உழைத்திடு உயர்ந்திடு

சொல்லுவர் பலர் சொன்னதை மறந்து
வெல்லுவ தேன்றே வேதமாய் எண்ணி
துள்ளி விளையாடு துவளாமல் ஓடிடு-முயன்று
அள்ளி கரை சேர்ப்பாய் அறிவோடு

பட்டங்கள் தேவை யில்லை படித்த
சட்டங்கள்  துணைகொண்டு வெல்ல
கட்டங்கள்  கடந்து  கவலையும் மறந்து-உயரத்தை
எட்டிவிடு எளிதில் வெற்றியை தொட்டுவிடுநினைவிழந்து நிம்மதி கெடும்


ஆரோக்கியம் அவசிய மில்லையென
அவர்களுக்கு தெரியவில்லை  பின்
அமைதி கெட்டு அழிவுப் பாதை ஆவது- ஆசையால்
ஆத்திரம்  கொண்டு  ஆளையும் கொல்வது

சாத்திரம் தேடார் சரித்திரம் அறியார்

போக்கிட மின்றி  பெரும்பினி சேர்ந்து
மக்களை கொல்லும் மடைமை யாகி  -பணம்
பெரும் ஆசை தரும்பின் தவறு செய்யும்

குடும்பம் கூடி பேச மறந்து குறுகி

நெடும்பகை தேடி நேசமற்று  மாறும்
நினைவிழந்து  நிம்மதி கெடும்-வாழ்க்கை
நிச்சயமற்ற தன்மையாகும் நிலைமை மாறும்

தரித்திரம் சேரும்  தயவு கெடும்

தன்னுள் சிந்திக்கா தன்மை யாகும்
பிரித்திட மனதில்  தினம் பேசும்-குழப்பமாய்
பிள்ளை உற்றார் நேசம் மறையும்

பெரியவர் பெண்டிர் பிள்ளை மறந்து

உரியதை நாடி உள்ளம் போகும்
பேராசையால் பெரும்பிணியும் சேரும்-மனித
பிழைப்பென எண்ணி பித்தாய் மாறும்

உழைக்க மறந்து உண்ண தோன்றும்

உயிரை பிடுங்கி சொத்தும் சேர்க்கும்
மலைக்க வைத்து மனதை உருக்கி-இறுதியில்
மாமிசமாக்கி உள்மனமே பிணமாகும்

Thursday, 25 October 2012

மழைக்காலம்

மழைப்பூச்சி

மழை  வரும்  
திசையை
மகிழ்வுடனே  
சொல்லும்
மடியும்முன்னே!
மறுபடியும் காண
மழைக்காலம்  தான்
காண வேண்டும்!!
துணைக்காலமும்
குறைந்து ஓடி
இளைத்துளிரில்
மறைந்துகொள்ளும்
உன்னைப்போல்
என்னுள் தங்கி விடும்!!!
 தட்டான் பூச்சி
ஓடி  ஓடி 
களைத்தாலும் 
உடனடியே  சிக்காது
 ஒளிந்திருந்து 
பார்த்தாலும்
உவப்புடனே  
பறந்துவிடும்
தேடிப்பிடிததும்
துவண்டுவிடும்
உன்னைப்போல!!! 
 நீர்த்தேரை

குதித்து  வரும்
கொண்டாடி  மகிழும்
பிடிக்கப்போனால்
பாய்ந்து  ஓடும்
கடிக்காது
கண்ணால்  பயம்
காட்டும் 
உன் ,
 கண்ணைப்போல!!!

Wednesday, 24 October 2012

திருவிழா தொடங்கியாச்சு


 


திருவிழா தொடங்கியாச்சு
தெருவெங்கும் கூட்டமாச்சு
உருமாறி  மனசெல்லாம்-அன்பான
 உண்மையாக  மாறியாச்சு

நவராத்திரி தொடங்கியதும்
நண்பர் இல்லம் பார்த்தாச்சி

நலம் கேட்டு சிரித்து-நட்பாக
நாளெல்லாம் மகிழ்ச்சியாச்சி

ஆயிரம் கஷ்டமானாலும்
அடுத்த மாசம் தீபாவளி
அடுக்கடுக்காய்  செலவுகள்-கடனும்
அருகில்வர முடிவாச்சி

சின்னவங்க பெரியவங்க
செலவு செய்ய உள்ளவங்க
சேர்ந்து பேசி முடிவாச்சி-சிக்கனமாய்
சொந்த பட்டியல் தேர்வாச்சி

வீட்டு  தலைவருக்கு
விலைவாசி கவலையாச்சி
வேண்டிய செலவு  விபரம்-மனதில்
வேகமாய் நாடி துடிச்சாச்சிவாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடுவாழ்வது ஒருமுறை வாழ்ந்துவிடு
வார்த்தைகள் பலவிதம் மறந்துவிடு
தோல்விக்கு பயமில்லை துணிந்து விடு-மீண்டும்
துயரத்தை மறந்து அவனுடன் இணைந்துவிடு

நாட்களை கடத்தி நமக்கென்ன பயன்
நாமிங்கு இணைவதால் என்ன பிழை
பூக்களை போல்  நீ வாடுவதை- புரிந்தும்
ஏக்கமாய் உள்ளதே எழுச்சியும் கொள்ளுதே

தூங்கி எழுந்ததும் துணை தேடிடும்
ஏங்கி  இழந்ததை நாடிடும் இன்பம்
தாங்கித்தான் இருப்பேனே  துணையாக-என்றும்
பாங்கி உன்னை பார்த்திடுவேன்  நலமாக

நிலவுக்குள்  நாம் நடந்தால் நிம்மதி
நேரம் செல்லும் முன்னே சொல்லடி
ஈரம் இருக்கும் வரை உன்மடி -இளமை
தூரம் அதிகமில்லை  துணிந்து நில்லடி

நிலவு தேய்ந்தாலும் மீண்டும் எழுந்திடும்
உறவு மறந்தாலும் உரிமை கிடைத்திடும்
கனவு  மீண்டும் உன்னை துரத்தி- இறுதி
காலம் முடியுமுன் ஆசையை  நிறுத்தி

உள்ளதை சொன்னால் உணந்திட மாட்டார்
சொல்லென சொல்லி  சிதைத்துடுவார்
நல்லதை சொல்லி அழைக்கின்றேன் -நட்பின்றி
இல்லறமாக கிடைக்க  நான் ஏங்குகிறேன்

Sunday, 21 October 2012

மின்சார இரவு 


மின்சாரம் இல்லாததால் மின்விசிறி
தன் சுவாசம் இல்லாமல்  இருந்தது
இடியுடன் மழை இருவரையும் சேர்த்து-சுகமாய்
இன்னிசை வேண்டியது  ஏக்கத்துடன் பார்த்தது

இருவரையும் சுவைத்த இரு கொசுக்கள்
இணைந்து பாட்டு பாடியது  இன்னலாய்
 பசிதுறந்தும் பக்கமிருந்தும் வெட்கமாய் -மனதை
வேண்டியது வீழ்த்த தூண்டியது வேண்டியது

மேடான பகுதிகளில் மெல்ல மெல்ல
சூடான  மூச்சு காற்றுடன் நகர்ந்து
மேலிதழை கவ்வி கொண்டான்-மங்கையை
மீண்டும் மீண்டும் சுவைத்தான்  மகிழ்ந்தான்

தீராத மோகத்தில் தினமும் ஏங்கி
பூவாக இருந்தவளை கசக்கி பிழிந்தான்
மேலோடு மேல் மோதி மெல்லிய-வலியுடன்
மார்போடு  அணைத்தான்  மீண்டும் செய்தான்

யாரோடு தர்க்கம் எதற்காக தயக்கம்
தேனுண்ட வண்டாய் திகட்டிய வேளையிலே
இசை வருவதுபோல் இளங்காற்று வீசியது-இன்பத்தை
 இசையோடு போற்றியது இன்பத்தேர் ஒட்டியது

நன்றி சொன்ன நம் தலைவன்  நாணத்தோடு
இன்னும் வேண்டுமா  இந்நிமிடம் போதுமா
உண்ணும போதெல்லாம் உன்வாசம் -இரவு
சொன்ன  கனவிதுவே சுவைக்கூடி கண்டதுவே

அம்மா வருவாயா ?உயிர் பிடித்து உடல் கொடுத்து
உள்ளத்தில் நல் அன்பை விதைத்து
நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை
செல்லமாய்  நன்கு  சீராட்டி வளர்த்தவளே

அப்பனை அடையாளம் காட்டி எனக்கு
அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்து
அண்ணன் தம்பி  உறவுகளும் சொல்லி-உரிமைக்கு
அக்கா தங்கை கடமைகளும் போதித்தாய்

கதைசொல்லி தூங்க வைப்பாய்
கருத்துக்களை பேசவைப்பாய் நாளும்
காண்பவர் எல்லோரின் உறவு சொல்வாய்-விழித்ததும்
கண்டவரின்  கண்படுமென பொட்டு வைப்பாய்

தான் உணவு உண்ண மறந்தாலும்
நான்  தூங்க தாலாட்டு சொன்னவளே
ஏனென்ற கேள்வி இன்றி எதிலும்-தப்பின்றி
எந்நாளும் என்னுள் அன்பை சேர்த்தவளே

கள்ளமில்லா அன்பை  கனிவுடன் தந்தவளே
கருவாக  என்னை உருவாக்கி சுமந்தவளே
பெரிதாக  அன்பும்  குடும்ப நெறியும்-குறைவின்றி
உருவாக்கி வளர்த்தவளே உலகை உணர்தியவளே
 
சொல்லோர்கள் தப்பாய் என்னை  சொன்னாலும்
எல்லோரையும் பதில்  எச்சரித்து அனுப்பிடுவாய்
செல்லமாக செய்யாதே என கண்கலங்குவாய்-யாரின்று
மெல்ல புரியவைத்து  மேனியை தட்டுவார்கள்

என்னால் எழுத முடியவில்லை உருவாய்
எதிரில் நீயே நிற்பதுபோல்எண்ணுகிறேன்
சொன்னால் வார்த்தையில் அடங்காது-இறந்த
சோகம்  என்னில் மறவாது  தீராது

பின்நாளில்  உன் அன்பை யாரும் தருவாரோ
பெறுவேனோ இல்லை பித்தனாகி விடுவேனோ
 புதுவாழ்வு கிடைக்காதோ  புரியாமல் -தவிக்கின்றேன்
தெரியாமல் இன்னும் தினமும் அழுகின்றேன்

மறுவாழ்வு கிடைக்காதோ  உனக்கு-மீண்டும்
மகனாக பிறப்பேனோ மறுபிறவியாவேனோ
என்நாளை அறிவேனா உன்னிடம் வருவதற்கு-இல்லை
எனைத்தேடி  வருவாயோ என்னுயிரை பெறுவதற்கு

கண்ணீர் என்னை கம்மச் செய்கிறது
கண்கள் சிவந்து குளமாய் மாறுவதை
 உன்னால் பார்த்துப் பொறுப்பாயா  இல்லை -என்
 உயிரை உன்னுள் எடுத்து  செல்வாயா 

Thursday, 18 October 2012

இளமையில் இன்பம் இழப்பதோ நெஞ்சம்
கல்லூரி செல்லாமல் கண்டபடி சுத்துறான்
கண்டதையும்  பார்த்து கனவிலே மிதக்கிறான்
உண்டதை மறந்து உடனுணவு  தின்கிறான்- வயிற்றில்
 உபாதை கெட்டதும் மருத்துவரை பார்க்கிறான்
 
இள வயதில் நலமின்றி தவிக்கிறான்
இமை மூடா காணொளியில் கிடக்கிறான்
துணை நாடி வலைப்பக்கம் போகிறான்-வீட்டில்
இணை வந்தபின் முடியாது போகிறான்

நலனை  நாடாமல் நேரத்தில் உண்ணாமல்
பலமணி நேரம் வேலை செய்து
பத்திரத்தில்  பணத்தை முழுதும் போடுறான்-அப்புறம்
பாதுகாத்து  பல நாட்களை கழிக்கிறான்

கஷ்டமான  நேரத்திலும் காசு சேர்க்கிறான்
கஷ்டமெல்லாம்  தீர்ந்தப் பின்னே  அதை
இஷ்ட மான இடத்தில் பதுக்கி- வயித்துக்கு
இஷ்டம்  வரும்போது சாப்பிட மறுக்கிறான்
 
பலநூறு செலவு செய்து பயந்து
பலவேறு பரிசோதனை செய்கிறான்
பலலட்சம் பணம் கொடுத்து - தொலைக்கிறான்
பயந்து நடுங்கி தினமும் சாகிறான்

ஜோடியாய் சேர்ந்து சோதனைக்கு சென்றால்
ஜொள்ளு  விடும் கூட்டம் அங்கே
வேடிக்கை பார்த்து விதமாய் சிரிக்குது-அங்கே
வாடிக்கையாக்கி தினம் பணம் பாக்குது

வாழ்க்கையை தொலைத்து விட்டு தினம்
வாடிக்கையாகி அங்கே பணம் செலவழித்து
தேடிய செல்வம் மறந்து பித்தனாகி -இறுதியில்
 ஓடிச்சென்று  உளம் மறந்து நோகிறான்

உள்ளதை  சொல்லி உதவி கேட்டால்
நல்லதை சொல்லி நல்வழி படுத்தி
வாழ்வை  வசந்தமாக்கி  வைப்பார்கள்-மேலும்
தாழ்வை நீக்கி தடம் காட்டுவார்கள்Wednesday, 17 October 2012

பெண்மையின் பேரின்பம்


      
நாள்பார்த்து நல்ல நேரம் பார்த்து
நல்லோர்கள் வாழ்த்து நல் சொல்ல
பார்த்து பேசி இருவீட்டாரும்-மகிழ்ந்து
சேர்த்து வைத்த திருமணம் சிறப்பாக

தாலி கட்டியதும் தவம் ஆரம்பம்
தனியறையில் நாளும்  ஏற்படும் பூகம்பம்
தாகமென கடக்கும் முப்பதுநாளும்_ ஆசை
தாகமது மட்டும் தணியும் முடியும்!

கருவுற்றதும் கனவுகள் ஆரம்பம் அதை
கருத்தாய் கவனித்து சினம் கொள்ளாமல்
சிறிதளவும் அசைக்காமல் உருவேற்ற- உள்ளத்தில்
சீரான முகமாக்கி ரணத்தையே உணவாக்குவாள்!

அன்பையும் நற்பன்பையும் நாளும் சொல்லி
அன்னையின் தவிப்பை அன்றே சொல்லிடுவாள்
வயிட்றை தடவி வழியெல்லாம் பார்த்த- அறிவை
பயிற்றுடுவாள் மகிழ்வாள் மனமெல்லாம் பூரிப்பாள்!


பிறக்குமுன்னே பிள்ளை  செய்யும் சேட்டையை
பிறரிடம் சொல்வாள் நாளும் சிரிப்பாள்
பித்தாய் இருப்பாள் பிறப்பை கேட்பாள்- பூவே
இத்தனை நாளாய் இதற்குத்தானே என்பாள்!

நல்லோரின் நல் ஆசியுடன் பெயரை
எல்லோர் நினைவில் சொல்லி வைத்து
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்தி-குழந்தைக்கு
எல்லோரும் கூடி தாயை-சேயை வாழ்த்துவார்கள்

இனிமை உலகத்தை ரசிப்போம் 
 

அவள்:மேலோட்டமாய் பார்க்காதே
             மேனியை திருடாதே-எதிர்பார்த்து
             மேலும் கீழும் பார்த்து
             மெதுவாய் தொடாதே

அவன்:மெல்லிய காற்றும்
             மிதமான சூழ்நிலையும்-தொட்டு
             துள்ளிவிளையாட  தோணுது
             தயக்கமாய்  இருக்குது
             
அவள்:அப்படி பார்க்காதே
             அருகில் வராதே -இருந்தாலும்
             அள்ளி அணைக்கத்தான்
             ஆசையை தூண்டுது

அவன்:இன்னும் ஏனோ
              இணக்கம் தானோ-இப்போது
              இனிமை  நமக்கு
              நல்ல சமயம்தானே
அவள்:சொல்லி பார்த்தேன்
             மனதை மெல்ல -மென்மையாய்
             வெள்ளமென  அதை
             உருக்கிவிட்டாய்
அவன்:துள்ளி விளையாடியபின்
             இல்லம் செல்வோம்-துவளாமல்
             இணைந்து செய்வோம்
             புனைதலில்  பேரின்பம்

இருவரும்:எண்ணத்தில் இணைந்தோம்
                    வண்ணமாய் கலந்து-வாலிப
                    விருந்தை பகிந்திட்டோம்
                    உண்மையாய் இருப்போம்
                    உணர்ச்சியை மதிப்போம்
                   உலகத்தை ரசிப்போம்

Tuesday, 16 October 2012

எப்போதும் வேண்டும் !!

நேசம் வேண்டும்
நேர்மையாக வேண்டும்
நெஞ்சுருகி  நாடவேண்டும்
 நீ நியாயமாக இருக்க வேண்டும்

கொஞ்சவும் வேண்டும்
குறைகளை  அறிய வேண்டும்
குற்றமெனில் கூற வேண்டும்
கூடவே நீ  துணையாக வேண்டும்

சுகமாக  வேண்டும்
சுற்றத்தில் நீ வேண்டும்
கற்றுதர நல்லவை வேண்டும்
கடும் சொல்லால் திட்ட வேண்டும்

நற்றமிழ் வேண்டும்
நாளும் துணை வேண்டும்
நல்லோர்கள் ஆசி வேண்டும்
நாள்தோறும்  அது கிடைக்க வேண்டும்


எப்போதும் வேண்டும்
என்னுடனே நட்பு வேண்டும்
எல்லாமுமாய் இருக்க வேண்டும்
எனக்கு,உன்னுயிரில் இணைய வேண்டும்!

Saturday, 13 October 2012

அம்மா.....வருவாயா? (மீண்டும் )அன்பை .....தருவாயா?

http://tamilmanam.net/உயிர் பிடித்து உடல் கொடுத்து
உள்ளத்தில் நல் அன்பை விதைத்து
நல்பிள்ளையாய் நாளும் வளர்த்து-என்னை
செல்லமாய்  நன்கு  சீராட்டி வளர்த்தவளே

அப்பனை அடையாளம் காட்டி எனக்கு
அன்பையும் பண்பையும் ஊட்டி வளர்த்து
அண்ணன் தம்பி  உறவுகளும் சொல்லி-உரிமைக்கு
அக்கா தங்கை கடமைகளும் போதித்தாய்

கதைசொல்லி தூங்க வைப்பாய்
கருத்துக்களை பேசவைப்பாய் நாளும்
காண்பவர் எல்லோரின் உறவு சொல்வாய்-விழித்ததும்
கண்டவரின்  கண்படுமென பொட்டு வைப்பாய்

தான் உணவு உண்ண மறந்தாலும்
நான்  தூங்க தாலாட்டு சொன்னவளே
ஏனென்ற கேள்வி இன்றி எதிலும்-தப்பின்றி
எந்நாளும் என்னுள் அன்பை சேர்த்தவளே

கள்ளமில்லா அன்பை  கனிவுடன் தந்தவளே
கருவாக  என்னை உருவாக்கி சுமந்தவளே
பெரிதாக  அன்பும்  குடும்ப நெறியும்-குறைவின்றி
உருவாக்கி வளர்த்தவளே உலகை உணர்தியவளே
 
சொல்லோர்கள் தப்பாய் என்னை  சொன்னாலும்
எல்லோரையும் பதில்  எச்சரித்து அனுப்பிடுவாய்
செல்லமாக செய்யாதே என கண்கலங்குவாய்-யாரின்று
மெல்ல புரியவைத்து  மேனியை தட்டுவார்கள்

என்னால் எழுத முடியவில்லை உருவாய்
எதிரில் நீயே நிற்பதுபோல்எண்ணுகிறேன்
சொன்னால் வார்த்தையில் அடங்காது-இறந்த
சோகம்  என்னில் மறவாது  தீராது

பின்நாளில்  உன் அன்பை யாரும் தருவாரோ
பெறுவேனோ இல்லை பித்தனாகி விடுவேனோ
 புதுவாழ்வு கிடைக்காதோ  புரியாமல் -தவிக்கின்றேன்
தெரியாமல் இன்னும் தினமும் அழுகின்றேன்

மறுவாழ்வு கிடைக்காதோ  உனக்கு-மீண்டும்
மகனாக பிறப்பேனோ மறுபிறவியாவேனோ
என்நாளை அறிவேனா உன்னிடம் வருவதற்கு-இல்லை
எனைத்தேடி  வருவாயோ என்னுயிரை பெறுவதற்கு

கண்ணீர் என்னை கம்மச் செய்கிறது
கண்கள் சிவந்து குளமாய் மாறுவதை
 உன்னால் பார்த்துப் பொறுப்பாயா  இல்லை -என்
 உயிரை உன்னுள் எடுத்து  செல்வாயா