தெய்வங்கள்

தெய்வங்கள்

21.12.2012 ல் உலகம் அழியுமா? அழியாது!

நெஞ்சில் ஈரமின்றி மனித நேயமின்றி
வஞ்சகமாய் கூட்டி வாழ்வை அழித்து
பிஞ்சுக்குழந்தை பெண்களை முதியோரை-கொன்ற
பஞ்சமா  பாதகன் பதவியிழந்து அழிவான்

நேர்மை  மறந்து நிம்மதி கெடுத்து
ஊரை  ஏய்த்து பணம் திண்ணும்
பேரை மாற்றும் பிறவித் திருடன்-அழிவான்
பிறரை  ஏமாற்றிய பொருளையும் இழப்பான்

அரசியல்  செய்யும் அறிவியல் திருடன்
அவசியமின்றி பொய்களை பேசி வாழ்பவன்
துறவி என்று தவறு செய்யும்-துன்பமாக்கி
உறவை கெடுப்பவன்  உரிமையிழந்து  மடிவான்

அடுத்தவன் நாட்டு பணத்துக்கு ஆசைப்பட்டு
ஆணவம்  மிகுந்து அறிவு கெட்டு
படைத்தோரை மறந்த படுபாவிகள்-சேர்த்த
பணத்தை இழந்து தவிப்பான்  உணர்வான்
                              ******

உலகம் அழியாது உண்மைகள் தோற்காது



Comments

  1. படைத்தோரை மறந்த படுபாவிகள்-சேர்த்த
    பணத்தை இழந்து தவிப்பான் உணர்வான்
    //////////

    உண்மை ஐயா
    ரசித்தேன்

    ReplyDelete
  2. உலகம் அழியாது உண்மைகள் தோற்காது

    நம்பிக்கை நிறைந்த பகிர்வுகள்..
    வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..

    ReplyDelete
    Replies
    1. நன்றி,நம்பிக்கைதான் வாழ்க்கை

      Delete
  3. அழிவதை அழகாக கூறி,அழியாததை வாசகர்களுக்கு விட்டுவிட்டீர்கள். அருமை.

    ReplyDelete
    Replies
    1. உண்மை ,நடக்காததை பற்றி ஏன் கவலைப்படவேண்டும்.வருகைக்கு

      நன்றி

      Delete
  4. அழியவேண்டிய உலகில் இன்னும் பல உள!ஆனால் தற்போது உலகம அழியாது! உண்மை

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஐயா.இன்னும் எத்தனையோ அழிவுகள் நடந்தாலும் உலகம் என்ற மக்களும்,மாக்களும் கோள் அழியாதேன்பது உண்மைதான்

      Delete
  5. அசத்தலான வரிகள்பா.... சத்தியமான உண்மைகள்..... நின்றுச்சுடுகின்றன... சுழற்றி சுழற்றி அடிக்கின்றன.... கேள்விக்கணைகளால் தாக்குகின்றன.... நல்லவை நிலைக்கும்... நல்லவை அல்லாதது அழியும் என்று ஆணித்தரமான சொற்கள் அருமைப்பா...

    உலகம் அழியாது.... நேர்மை சிதையாது..... அன்பு நன்றிகள்பா...

    ReplyDelete
  6. உணமையான வரிகள்,உலகமும் அழியாது உண்மைகளும் அழிக்க முடியாது,வருகைக்கு நன்றி

    ReplyDelete
  7. உலகம் அழியுதோ இல்லையோ அது வேற. அந்த பயத்துல அநேகமானவர்களின் ஆணவம், கர்வம், செருக்கு, வேறும் எல்லாம் அழிந்துள்ளதை கண்கூடாக காண்கிறேன்.

    எனது இன்றைய பதிவு
    http://onemanspoems.blogspot.com/2012/12/blog-post_3.html

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் அது நடக்கும் ,வருகைக்கு நன்றி

      Delete
    2. வாக்களிதீர்களா?

      Delete
  8. உலக அழிவு
    எமது சிந்தனையில் இருந்தாலும்
    இயற்கையின்
    கட்டுப்பாட்டில் தான்
    நாம் வாழ்கிறோம் .....
    முடிவு எடுக்கும் திறன் இயற்கையிடம்....
    எடுக்கும்
    முடிவிற்காய்
    காத்திருப்போம்.....!
    நல்ல முடிவாக எடுக்கட்டும்.....!

    ReplyDelete
  9. நிச்சயம் காத்திருக்கத்தான் வேண்டும்,வருகைக்கு நன்றி
    நண்பரே

    ReplyDelete
  10. வாழும் உலகில் அழியவேண்டியவைகளைப்
    பட்டியலிட்ட விதம் அருமை
    வித்தியாசமாக யோசிக்கிறீர்கள்
    மனம் கவர்ந்த கவிதை
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா ,உங்களைப்போன்றரின் வாழ்த்து இன்னும் அதிகமாய் எழுத ஊக்குவிக்கும்

      Delete
  11. ஆஹா! அருமை இப்படிபட்டவர்கள்தான் அழிவார்கள்.
    சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. நல்லோரைதாங்கும் நம் பூமி

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more