காதலி ! காதலா ! காதல்!
ஒருதலைக் காதல் ஜெயித்ததில்லை
உணர்வுள்ள காதல் தோற்றதில்லை
மறு பிறப்பு மீண்டும் வருவதில்லை-காதல்
மறந்து போனதாய் சரித்திரமில்லை
மனம் பார்த்து வருவதே காதல்
மிகையான பணம் பார்த்த தல்ல
குணம் மாற்றியும் வரலாம்-காதல்
கொள்கை உறுதி யோடும் வரலாம்
அவசர காதல் அழிந்ததுண்டு
அவசிய காதல் முறிந்ததுண்டு
ரகசிய காதல் ஜெயித்ததில்லை-காதல்
ரசனை மட்டுமே தகுதியில்லை
மனதை மாற்ற போராடு
மகிழ்ச்சியோடு அதை நீ நாடு
புதிதாய் செய்வோர் புனிதத்தை -அன்பாய்
புகழ்ந்து வாழ்த்தி நீ சொல்லு
பிரியும் காதல் தொடர்ந்ததில்லை
பிரிக்கின்ற காதல் அழிவதில்லை
புரிகின்றோர் காதல் முடிவதில்லை-வெற்றி
புரிந்தோர் அதையும் தடுப்பதில்லை
//புரிகின்றோர் காதல் முடிவதில்லை-வெற்றி
ReplyDeleteபுரிந்தோர் அதையும் தடுப்பதில்லை// - இதுதான் உண்மையான காதலோ!
ஆம்.நிச்சயம் நியாயமான காதலை தடுப்பதில்லை தோற்றதில்லை
Deleteகாதல் ! காதல் !
ReplyDeleteகாதல் இல்லையேல் ப்ளாக் இல்லை.
அருமையான வரிகள் !
உள்ள குமுறலை கொட்டித் தீர்க்கும் இடம்தான் பிளாக் .தவறான காதல் பேசப்படுவதில்லை
Deleteஅழகாக சொன்னீர்கள்...
ReplyDeleteநன்றிங்க நீங்க வந்ததுக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும்
Deleteஅழகிய காதல் கவிதை
ReplyDeleteநன்றிங்க.தொடர்ந்து வாங்க
Delete//பிரிக்கின்ற காதல் அழிவதில்லை.//
ReplyDeleteசரியான சொல்லாடல்.
கவிதையை இரசித்தேன்!
நன்றிங்க சார்.நீங்க வந்தது எனக்கு கருத்து தந்தது எனக்கு பெருமையே
Deleteகாதல் - என்றும் தொடரட்டும்...
ReplyDeleteநீங்களும் தொடருங்க நண்பரே
Deleteஒருதலைக் காதல் ஜெயித்ததில்லை
ReplyDeleteஉணர்வுள்ள காதல் தோற்றதில்லை....
நிதர்சனமான வார்த்தைகள்.
அருமை. நல்ல ஆக்கம்! வாழ்த்துக்கள்!
காதல் என்ற பதம் தவறாகும்போது மற்றதெல்லாமே முடிவு வேறாகிவிடுகிறது
Delete//அவசர காதல் அழிந்ததுண்டு
ReplyDeleteஅவசிய காதல் முறிந்ததுண்டு
ரகசிய காதல் ஜெயித்ததில்லை-காதல்
ரசனை மட்டுமே தகுதியில்லை//
அருமையான கவிதை வரிகள் உண்மையின் வெளிபாடு படித்ததும் சிலிர்த்து இந்த வரிகள்
நன்றிங்க நீங்க வந்ததுக்கும் தந்ததுக்கும்
Deleteகாதலின் இலக்கணம் சொல்லும் கவிதை! அருமை!
ReplyDeleteஅய்யோடா இலக்கணம் வரலாறெல்லாம் இதுவரை தெரியாது .அறிந்ததை தெரிந்ததை சொன்னேன்
Deleteஅருமையான கவிதை
ReplyDeleteநன்றிங்க குட்டன்.வந்ததுக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும்
Deleteகாதல் பற்றிய விமர்சனம் சிறப்பு.
ReplyDeleteகுத்துமதிப்பா சொன்னாலும் நல்லா சொன்னீங்க .நன்றிங்க
Deleteகாதலைப் பற்றிய கதை சொல்லி விட்டீர்கள்... அதாவது ஆரம்பம், முதல் இறுதி என்பது வரை....அருமை
ReplyDeleteஉண்மைதாங்க எனக்கு தெரிந்ததை அறிந்ததை சொன்னேன்
Deleteமனதை மாற்ற போராடு
ReplyDeleteமகிழ்ச்சியோடு அதை நீ நாடு...//
அருமையான ஆயிரம் அர்த்தமுள்ள வரிகள்..
நீங்க வந்ததுக்கும் கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றிங்க
Deleteமனதை மாற்ற போராடு
ReplyDeleteமகிழ்ச்சியோடு அதை நீ நாடு
புதிதாய் செய்வோர் புனிதத்தை -அன்பாய்
புகழ்ந்து வாழ்த்தி நீ சொல்லு
அருமையான வரிகள்..பாராட்டுக்கள்..
நன்றிகம்மா,பாராட்டுக்கும் வந்ததுக்கும் நன்றிகம்மா
Deleteகாதல் பற்றிய அழகான கவிதை.
ReplyDeleteகாதலர் தினம் அன்னைக்கே போட்டிருக்கலாமே.
நேரமின்மையால் தாமதமாகிவிட்டது.என்ன இருந்தாலும் அனுபவக் காதல்தானே
ReplyDeleteஅனுபவக் காதல்தானே! அப்படியா!!!!!? எனக்குக் தெரியாதே!
ReplyDeleteஉங்களுக்கு தெரியாமலா? இருந்தால் நிச்சயம் சொல்வேன்
Deleteஅனுபவக் காதல்தானே! அப்படியா!!!!!? எனக்குக் தெரியாதே!
ReplyDeleteஉங்களுக்கு தெரியாமலா? இருந்தால் நிச்சயம் சொல்வேன்
Deleteஅனுபவக் காதல்தானே! அப்படியா!!!!!? எனக்குக் தெரியாதே!
ReplyDeleteஉங்களுக்கு தெரியாமலா? இருந்தால் நிச்சயம் சொல்வேன்
Delete