தெய்வங்கள்

தெய்வங்கள்

அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு



அகத்தை ஆள ஆணவத்தை அடக்கு 
அகிலமும் உனைநோக்க நேர்நிறுத்து
சுகத்தை உன்னுள் நேர்த்தி செய்தால்-ஆயுளில்
யுகத்தை ஆளலாம் உன்னுள் காணலாம் !


உன்னில் ஒளிந்திருக்கும் ஒளியரிந்திடும்
உன் கணக்கு என்னவென்று  உன்னுடலில்
 வெண்ணை சேர்காதமேனி வெளிர்ந்திடும்-உண்மையாக
கண்ணுள் காட்டிடும்  கனியாக  தெரிந்திடும்!

மெய்யும்  பொய்யும் மேனியு  ளதில்லை
மெய்ஞானம் நேரில் பார்த்த தில்லை
சொல்லும்  செயலும்  சேர்ந்தே யன்றி -எளிதில்
சொல்லாத சொல்லால் பயமேதுமில்லை!

இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம்
இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம்
பொய் சொல்லோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில்
புரிந்திடும்  மெய்ஞானம் தெரிந்திடும் எளிதாக

நம்பிக்கை வாழ்வில் நல்வழி படுத்தும்
நாணயம் எப்போதும் துணை நிற்கும்
வம்பிலுப்போர்  வாழ்வு நெறிகெட்டு-துன்பமாக
சம்பவிப்பார் சாபங்களை சந்ததிக்கு சேர்ப்பார் !

கஷ்டம் கடக்கும் காலம் வந்தால்
நஷ்டமும் தீரும் நன்மை பெறும்
இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-மகிழ்ந்து
துஷ்ட மெல்லாம் தூரசென்று  விலகிடும் !

நல்லவனாய் இருப்பதால் நல் மனிதனாவாய்
நன்றியுள்ள ஜீவனுக்கும் நண்பனாவாய் அன்பனாவாய்
இல்லாதவனாய் இருந்தாலும் இன்ப வாழ்வில்-நேர்மையான
இல்லறத்தில் துன்பமில்லா நல் இறைவனாவாய் !

Comments

 1. இஷ்டமாக இனிதே உதவி செய்தால்-மகிழ்ந்து
  துஷ்ட மெல்லாம் தூரசென்று விலகிடும் !

  அழகான கவிதைப்பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
 2. நன்றிங்கம்மா ,உதவி செய்வதி உள்ள மகிழ்ச்சியே தனி ,அதற்க்கு மனம் வேண்டும்

  ReplyDelete
 3. இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம்
  இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம்//

  உண்மை உண்மை.

  ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம் .
  அழகான கவிதை.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க,தொடர்ந்து படிங்க

   Delete
 4. இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம்
  இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம்.

  கருத்துள்ள பகிர்வு.

  ReplyDelete
  Replies
  1. வந்ததுக்கும் கருத்து பகிர்ந்ததுக்கும் நன்றிங்க,
   அடிக்கடி வாங்க ஆதரவு தாங்க

   Delete
 5. //இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம்
  இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம்
  பொய் சொல்லோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில்
  புரிந்திடும் மெய்ஞானம் தெரிந்திடும் எளிதாக//

  நல்ல வரிகள் அருமை

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க,
   அடிக்கடி வாங்க ஆதரவு தாங்க

   Delete
 6. //இல்லா ராயினும் இறைவனை தேடவேண்டாம்
  இல்லாதோருக்கு உதவிட்டால் அங்கே காணலாம்
  பொய் சொல்லோரை புறந்தள்ளி பார்த்தாலே-வாழ்வில்
  புரிந்திடும் மெய்ஞானம் தெரிந்திடும் எளிதாக//- நல்ல கருத்து.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க உஷா அன்பரசு

   Delete
 7. நல்வழிகள் சொல்லியிருக்கும் கவிதைக்கு நன்றி !

  ReplyDelete
 8. நன்றிம்மா,ஏதோ என்னால முடிஞ்சது

  ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more