இதழன்றி என்ன தருவாய்? அன்பே!
அருகில் வராதே அணைத்து கொள்வேன்
அனைவரின் முன்னே இணைத்துக்கொள்வேன்
அடுத்த நிமிடம் சுவைக்க தோன்றும்-எனக்கு
அதற்கும் மேலும் தாண்டச் சொல்லும்
இனிக்கத்தானே இதழைப் பிடித்தேன்
இதை மறுத்தால் என்ன செய்வேன்
இன்று மழையில் இந்த நேரம்-எனக்காக
இதழன்றி என்ன தருவாய் அன்பே
என்னை மீறி எதுவும் நடந்தால்
எனக்கும் உனக்கும் பங்கு உண்டு
பினக்கின்றி பிரியமாய் தந்திடு-உரிமை
பிணைப்பை உண்டென உணர்ந்திடு
நெஞ்சிலே நெருப்பு வார்த்தாய் தீ
கொஞ்சமாய் பற்றி வர செய்தாய்
துஞ்சமில்லை எனக்கு தூக்கமில்லை
வஞ்சியே வா வனப்பிதழைத்தா !
ம்ம்ம் ..அருமை
ReplyDeleteநன்றி நட்பே
Deleteநல்லாயிருக்கு... ஆனாலும் ஒரு சந்தேகம்
ReplyDeleteதோற்றும் - தோன்றும் ; என்னை - என்ன; பினக்கின்றி - பிணக்கின்றி;
அப்படீன்னு அச்சாயிருக்கணுமோ...?
நன்றி நண்பரே -அவசரத்தில் அப்படியே பதிவு செய்து விட்டேன் இனி சரிசெய்துகொள்கிறேன்
ReplyDeleteஅழகோ....அழகு
ReplyDeleteநன்றி நட்பே
Delete