தெய்வங்கள்

தெய்வங்கள்

சித்தனும் பித்தனும் நீயே

நீ
என்ன சித்தனா?
நிலை
மறந்த பித்தனா?
எனை
வணங்கும் பக்தனா?
அன்பனா?
அறியோனா?

உடையில்லை
உள்ளத்தில்
பிழையில்லை
வீடில்லை
வெறும் தரையில்
பற்றில்லை
பகட்டில்லை

பேசவில்லை
நேசமில்லை
பாசமில்லை
பசியுமில்லை
எதிரியில்லை
இழப்புமில்லை

பார்ப்போரின்
கண்களுக்கு பைத்தியக்காரன்
பார்த்துவிட்டேன் நீ
பாராளும் வேந்தன்
பிரச்சனைஇல்லா ஈசன்

Comments

ரசித்தவர்கள்

252,159

பதிவுகள் இதுவரை

Show more