தெய்வங்கள்

தெய்வங்கள்

பிள்ளையாரப்பா! புத்திசொல்லப்பா!!



வினையேதும் செய்யாமல்
விதியென்று சொல்லாமல்


துணை நிற்க வேண்டாமல்
துறவறமும் பூண்டாமல்

பண்ணெடுத்து பாடாமல்
பகிர்வின்றி வாழாமல்

மனிதனை நினைக்காமல்
மதப்பற்று கொள்ளாமல்

இருப்போர்கள் இல்லாதோர்க்கு
இமியலவே நினைதிட்டால்

விதையேதும் போடாமல்
விளைச்சலையும்  தேடாமல்

மனதோடு மனிதமும்
மற்றவர்க்கு உதவியும்

இல்லாத ஏழைக்கு
எழுத்தறிவும் தந்திட்டால்

பொல்லாங்கு சொல்லமாட்டார்
புறந்தள்ளி பேசமாட்டார்

கனபோளிதில் செய்திட்டால்
கணபதியே அருள்புரிவான்

எல்லோருக்கும் இனிய
பிள்ளையார் தின வாழ்த்துக்கள்

இராம.கண்ணதாசன்
சென்னை

Comments

ரசித்தவர்கள்

252,162

பதிவுகள் இதுவரை

Show more