தெய்வங்கள்

தெய்வங்கள்

இளைப்பாற மடி வேண்டும்





உன்னை பார்க்க வேண்டும்
உன்னுடன் பழக வேண்டும்
மடிமீது படுக்க வேண்டும்
மனக்கவலை விலகவேண்டும்

இதமாக நீ வருடவேண்டும்
இளைப்பாறி நான் மகிழ வேண்டும்
தலைகோதி தழுவ வேண்டும்
தலை சாய்ந்து படுக்க வேண்டும்

எல்லா கவலையும் மறக்க  வேண்டும்
என்னுடனே நீ சேர வேண்டும்
தடையில்லா இன்பம் வேண்டும்
தழுவி தழுவி சுவைக்கவேண்டும்

இதழ் முத்தமும  வேண்டும்
இடையிடையே பேசவேண்டும்
முக்கனிசாறுதடன்  பருக வேண்டும்
முதலாய்  இருப்பதாக நினைக்க வேண்டும்

புதிதாக நீ நினைக்க வேண்டும்
பூவுலகில் மெய்மறந்து பறக்க வேண்டும்
எந்நாளும்  இருக்க வேண்டும்
எப்போதும் மகிழ்ச்சி வெண்டும்

Comments

ரசித்தவர்கள்

252,162

பதிவுகள் இதுவரை

Show more