தெய்வங்கள்

தெய்வங்கள்

எதிரியை வீழ்த்த எத்தனை யுக்திகள்


செடியிலே வலை பின்னி சிங்கராமாய்!
செய்து முடிக்கிறாய் ஒய்யாரமாய் நடக்கிறாய்!
நொடியிலே உணவை நுழைந்ததும் சுவைக்கிறாய்!
நெய்த வலையை நேர்த்தியாய் செய்கிறாய்!

எதிரியை வீழ்த்த எத்தனை யுத்திகள்
எப்படியும் கிடைக்கும் என்ற நம்பிக்கை!
எத்தனை நிமிடம் இதை செய்ய- கஷ்டமான
ஏனிந்த கோட்பாடு எத்தனை துணிச்சல்!

அமிலம் சுரந்து அத்தனையும் முடித்து
அழகாய் வலை அரவறம் தெரியாமல்
 ஆனந்த தொட்டிலில் அதிசிய பிறவி-எதிரியை
 ஆட்கொள்ளும் ஆளுமை சக்தி நீ!

பலசாலியல்ல பயமுறுத்தும் கண்களால்
சில நொடியாவது சிந்திக்க வைக்கிறாய்!
சிக்கனமாய் இடத்தை சூழ்ந்து கொள்கிறாய்!
தக்கணமே எதிரியை தனிமையில் விடுகிறாய்!

உயிருக்காகவா உனக்காகவா உரிமைக்காகவா?
உண்மையில் எதற்காக வாழ்கிறாய் நீ?
என்ன செய்து சாதிக்க நினைக்கிறாய்!
எத்தனை நாள் உயிர் வாழ்ந்திட இருக்கிறாய்!

முடியும் என்பதை முன்னிறுத்தி சொல்கிறாய்!
முயற்சி செய்ய முன்னோட்டம் தருகிறாய்!
புதிய  வாழ்கையை  புரிய வைக்கிறாய்-புதிராய்?
பிள்ளைகள் வாழ காத்து நிற்கிறாய் !!!


 

Comments

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more