விபச்சாரியின் ஆசை !
அறிந்தவர் அறியாதோர் அடிக்கடி வந்தாலும்
அடிமையாக என்னை ஆட்கொண்டுப் படுத்தாலும்
விரும்பியா நானிங்கு வந்தேன்-விபச்சாரியாய்
வேதனையை அடுத்தடுத்து பலரோடு பகிர்ந்தேன்
நான்கு நாளும் ஓய்வில்லை அதற்க்கு
நரக வாழ்கைக்கு மீண்டும் பிறகு
நாடக காதலும் நாகூசும் பேச்சும்-விஷமாகி
நாள்தோறும் உடலோடு தொழிலாகி விட்டாச்சு
கூச்சமும் வருவதில்லை குறையாக தோற்றதில்லை
நீச்சமாய் முடிவதில்லை நிழலாக தொட்டதில்லை
பேச்சுமே எப்போதும் எல்லோரும் சொல்வதுண்டு-இந்த
பேதையின் மனம்நாடிப் பிழையாக வந்ததில்லை
உழைபிங்கே எனக்கு ஓய்வாக படுத்தாலும்
உள்ளபடி இருவரும் ஒன்றிணைந்து அணைத்தாலும்
சொல்ல மனம் கூசுது சுட்டபடி- இதயத்தில்
சுள்ளேரும்பு கடிக்குது சுடராக எரியுது
வந்தார்க்கு இன்பம் வந்ததெனக்கில்லை
வசந்தமாய் எந்நாளும் மகிழ்வோடு இல்லை
தினந்தோறும் விரும்பியே நான் படுக்கவில்லை-அதனால்
தீ மட்டும் எந்நாளும் எனைச்சுடுட்டதில்லை
வேண்டும் எனக்கும் வேதனையின்றி வாழ்வு
விடியும் பொழுதும் விரும்பி அணைக்கவும்
தாண்டிய கனவுகள் நிகழவும் தொடங்கவும்-தாய்மை
தாகத்தை தணிக்கும் தன்னிகரில்லா துணைவன்.
மிக அழகாகப் படம் பிடித்துக்காட்டிவிட்டீர்கள். அவளுக்கும் மனம் உண்டு, ஆசை உண்டு, ஏக்கம் உண்டு.
ReplyDelete//வேண்டும் எனக்கும் வேதனையின்றி வாழ்வு//
வலி மிகுந்த வரிகள் சகோதரரே! அருமை! வாழ்த்துக்கள்!
நன்றிங்க ! அடுத்தவர் அறியும் அக்கறை எல்லோருக்குமே வேண்டும்.சற்று மாறுபட்ட சிந்தனையில் எனக்கு இப்படி தோன்றியது. உண்மைதானே அவளுக்கும் ஆசை உண்டுதானே
Deleteஎதோ ஒன்றால் பாதை தடுமாறி வீழ்ந்துவிட்ட இவர்களுக்கும் மனம் என்று ஒன்றுள்ளது என்ற வலி மிகுந்த உணர்வுகள் கவிதை!
ReplyDeleteஉண்மைதான் யாரும் விபச்சாரியாய் வாழ விரும்புவதில்லை. சந்தர்ப்ப சூழ்நிலையே தொழிலாக்கி விடுகிறது. வந்ததுக்கும் கருத்தைப் பகிர்ந்ததுக்கும் நன்றி
Deleteவேண்டும் எனக்கும் வேதனையின்றி வாழ்வு
ReplyDeleteவிடியும் பொழுதும் விரும்பி அணைக்கவும்
தாண்டிய கனவுகள் நிகழவும் தொடங்கவும்-தாய்மை
தாகத்தை தணிக்கும் தன்னிகரில்லா துணைவன்.//
தன்னிகரில்லா துணைவன் கிடைத்து துயர் நீக்கட்டும்.
மனது கனக்க வைத்த கவிதை.
ஆம் இப்படி நிறையப்பேர் இருப்பார்கள் என நினைக்கிறேன்
ReplyDeleteநன்றிங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்
vethanai...
ReplyDeleteநண்பரே யாருக்கு வேதனை எண்டு சொல்லவில்லையே?
Deleteஇன்று
ReplyDeleteANDROID MOBILE வைத்து இருக்கும் அனைவருக்கும் ...
வாழ்த்துக்களோ? நன்றிங்க அய்யா
Deleteஅருமையான கவிதை
ReplyDeleteநன்றிங்க நண்பரே.
Deleteஅருமையான கவிதை! வலிகளும் வேதனைகளும் சுமந்து வெளியில் உல்லாசமாக இருப்பதாக காட்டிக்கொள்ளும் இவர்களுக்கும் மனசு உண்டு என்பதை பலர் புரிந்து கொள்ள உதவும்! நன்றி!
ReplyDeleteஉண்மையை உணர்ந்தமைக்கு நன்றி.எல்லோருக்கும் மனமுண்டு வாழ்கையை அனுபவிக்க விருப்பமுண்டு
Deleteவேண்டும் எனக்கும் வேதனையின்றி வாழ்வு
விடியும் பொழுதும் விரும்பி அணைக்கவும்
தாண்டிய கனவுகள் நிகழவும் தொடங்கவும்-தாய்மை
தாகத்தை தணிக்கும் தன்னிகரில்லா துணைவன்.
அவளும் பெண்தானே! கருத்து அருமை!
அவளுக்கும் ஆசை உண்டு அதை விரும்பி வாழ்க்கை கொடுக்க யார் முன் வருவார்.நீங்கள் தளத்துக்கு வந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றி அய்யா.
Deleteஅவளும் பெண்தானே!
ReplyDeleteஅருமை
உண்மைதான் அவளுக்கும் ஆசை உண்டு என்பதை அறிந்து வாழ்க்கை தர யார் முன்வருவார்
Deleteநியாயமான ஆசைதான்.
ReplyDeleteஏற்றுக்கொள்ளகூடிய ஆசைதானே எல்லோருக்கும் வாழவேண்டும் என்ற ஆசை உரிமைதானே
Deleteகவிதை அருமையாக உள்ளது கவியாழி ஐயா.
ReplyDeleteநன்றிங்க அம்மா .அவர்தம் வாழ்க்கை வாழ எல்லோருக்கும் விருப்பம் உண்டல்லவா?
Deleteஇப்படி எத்தனை வேதனைகள்.
ReplyDeleteநாம் என்னதான் செய்ய முடியும்.
நேர்மையான உலகிருந்தால் அனைத்தும் நீதியாக நடக்கும்.
நோவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்.
இதை எடுத்துக் கூறிய தங்களிற்கு வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நீங்கள் சொல்வது உண்மைதான். வேதனையை புரிவார் யாரோ?
Deleteஎதும் சொல்றதுக்கில்லை.., படிச்சதும் மனசு கணமாயிட்டுது.., அது மட்டும்தான் சொல்ல முடியும்
ReplyDeleteசந்தர்ப்ப சூழ்நிலை என்ன செய்வது .பாவம் என்பதைத் தவிர என்ன செய்ய முடியும்?
Deleteவிபசாரியின் வேதனையை
ReplyDeleteமனத்தின் ஆதங்கத்தை
மனதைத் தொடும்
அழகான கவிதையாகத் தந்தீர்கள்
நன்றி
எளிதாக சொல்ல முடியவில்லை .நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க சார்
Deleteஐயோ பாவம்... என அனுதாபி்க்கிறது மனது!
ReplyDeleteபாவம்தான் என்ன செய்ய எனக்கும் மனது வலிக்கிறது
Deleteசிறப்பான கவிதை.
ReplyDeleteவருகைக்கு நன்றி
Deleteஇந்த நிலை ஒளிந்து அவர்களின் வாழ்வில் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்.
ReplyDeleteநிச்சயம் ஒழியும் நேர்மையாக மனிதாபமான எல்லோரும் சிந்தித்தால்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுகம் தெரியகூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே அந்தப் படத்தை பகிர்ந்தேன்.உங்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.இந்தப் படத்தை கூகிள் பகுதியில் தான் எடுத்தேன்.எனக்கு வேறேதும் நோக்கமில்லை.
Deleteஎனது முந்தைய கமென்ட் உங்களுக்கு மட்டுமெ. உங்க இன்பாக்ஸுக்கு வந்திருக்கும்னு தெரியும், அதனால அழிச்சிட்டேன்.... இந்த ஃபோட்டோவை இந்த பதிவுல இருந்து எடுத்தீங்கன்னா புண்ணியமா போகும். :(
ReplyDeleteதவறுக்கு மன்னிக்கவும்.முகம் தெரியகூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே அந்தப் படத்தை பகிர்ந்தேன்.உங்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்
Deleteதயவு செய்து புகைப்படத்தை நீக்கவும்.
ReplyDeleteநீக்கிவிட்டேன் மன்னிக்கவும்
Deleteஅண்ணே புகைப்படத்தை நீக்கி தங்கள் கவிதையை வளர்ப்பீராக!
ReplyDeleteஉங்களது ஆதங்கம் புரிகிறது நீக்கி விட்டேன்
Deleteதயை கூர்ந்து புகைப்படத்தை நீக்கவும்
ReplyDeleteநீக்கிவிட்டேன் நண்பரே
DeletePlease remove the photo from this post
ReplyDeleteமுகம் தெரியகூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே அந்தப் படத்தை பகிர்ந்தேன்.உங்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்
Delete//
ReplyDeleteKolam
Tamil culture.. She gets up early morning, sweeps off the place, sprinkles water mixed with cow dung, and then the rangoli.. the site of rangoli outside every home is so pleasant!! I m a proud Tamizhan! :D
//
இது தான் அவர் பகிர்ந்த படத்தில் கொடுக்கப்பட்ட விளக்கம். http://www.flickr.com/photos/ukays_shots/4020195714/
அடுத்து இது போல உங்கள் வீட்டில் யாரையாவது புகைப்படம் எடுத்து, இது மாதிரியான தலைப்பில் பெயரை வைத்து வேறு யாராவது கவிதை எழுதிக் கொண்டாடினால் நீங்கள் இரசிப்பீர்களா நண்பரே ?
முகம் தெரியகூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே அந்தப் படத்தை பகிர்ந்தேன்.உங்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.இந்தப் படத்தை கூகிள் பகுதியில் தான் எடுத்தேன்.எனக்கு வேறேதும் நோக்கமில்லை.
Delete
ReplyDelete//
YoUKay_Karthik (41 months ago | reply)
LoL!! Thats my mom da.. :P
//
அந்தப் படத்தை வெளியிட்டவரின் தாயாரின் படம் அது.
முகம் தெரியகூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையிலேயே அந்தப் படத்தை பகிர்ந்தேன்.உங்களின் மனம் புண்பட்டிருந்தால் அதற்காக வருந்துகிறேன்.இந்தப் படத்தை கூகிள் பகுதியில் தான் எடுத்தேன்.எனக்கு வேறேதும் நோக்கமில்லை.
Deleteவணக்கம்
ReplyDeleteஅருமையான கவிதை ஒவ்வொரு வரியிலும் ஒவ்வொரு உணர்வுகள் பிறக்கிறது
வலிகள் நிறைந்த வரிகள் அருமையாக உள்ளது கவிதை வாழ்த்துக்கள் கவியாழி (அண்ணா)
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-