தெய்வங்கள்

தெய்வங்கள்

இன்னும் நீ அழகி !




இந்த வயதிலும்
இன்னும் நீ  அழகி !

இளமை மாறாத-இன்றும்
இன்பந்தரும் அருவி.

பெற்றவன் மகிழும்
சித்திரப் பெண்ணே !

இரவில் மிளிரும் -எதிரில்
தெரியும் நிலவும் நீ !

என்னை தழுவும்
இதமான தென்றலும் நீயே !

மாசியின் மகளே
மாற்றம் தரும்
பகலேஒளியே !

பார்ப்பவர் வியக்கும்
பருவம் தாண்டிய
அகலே!

கனவில் கண்டு
கண் விழித்ததும்
மறைந்து சென்றதேன் ?

மீண்டும் வருக !
மீதமும் தருக !!

Comments

  1. எவர் கீரின் அழகோ!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நட்பே.அகத்தில் நானிருப்பதால் அவள் எப்போதுமே அழகுதான்.
      நீங்க வந்ததுக்கும் ஆலோசனை தந்ததுக்கும் நன்றிங்க

      Delete
  2. ஆம் ! அவள் என்றும் இளமை மாறாத அழகி !
    அருமை !


    ReplyDelete
    Replies
    1. என்னுள்ளே எப்போதுமே அழகிதான் நட்பே,
      நீங்க வந்ததுக்கும் நன்றிங்க

      Delete
  3. ஐம்பதிலும் ஆசை வரும் என்பது இதானோ?!

    ReplyDelete
    Replies
    1. அகத்தில் நானிருப்பதால் அவள் எப்போதுமே அழகுதான்.அய்ம்பதுக்குமேலும் அழகாய்தான் இருப்பாள்
      நீங்க வந்ததுக்கும் ஆலோசனை தந்ததுக்கும் நன்றிங்க

      Delete
  4. அழகின் ரகசியம் என்னவோ?
    கேட்டுச் சொல்லுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. அகத்தைல் நான் இருப்பதால் அவளும் அழகு
      நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க

      Delete
  5. அழகின் அழகை எங்களுக்கும் பார்க்க ஆசை ... எழுத்திலேயே புகைப்படத்தை காண்பித்துவிட்டீர்களோ?

    ReplyDelete
    Replies
    1. ஆம் நட்பே என்னவள் எப்போதுமே அழகிதான்.
      நீங்க வந்ததுக்கும் ஆலோசனை தந்ததுக்கும் நன்றிங்க

      Delete
  6. எந்த வயதிலும் அழகாய் இருக்கும்
    கலை தெரிந்த தென்றல் பெண்ணே வாழி.
    கவிதையும், படமும் அழகு.

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொன்னதுபோல் என்னவள் என்றுமே அழகிதான்
      வந்ததுக்கும் ஆலோசனை தந்ததுக்கும் நன்றிங்க

      Delete
  7. ரசிக்கும் மனதிற்கு என்றும் அழகி...

    ReplyDelete
    Replies
    1. எப்போதும் அழகி என்னவள் குழலி.
      நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க

      Delete
  8. அழகானவள் உங்கள் அகத்தில் இருப்பவள்
    பழகவில்லையோ இன்னும் அவளுடன்...

    மாசியில் பிறந்தவளோ...ஓ!.. காதலர்தினத்தினிலோ!
    மாசு இலாதவள் என்கிறீர் பேசிவிடவேண்டியதுதானே....:)))

    உங்கள் கவி அருமை. ரசித்தேன். வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  9. ஆம் மாசியின் மகள் மனதிற்கினிய என் அகல்
    நன்றிங்க நீங்க வந்ததுக்கும் ஆலோசனை தந்ததுக்கும் நன்றிங்க

    ReplyDelete
  10. கவிதை சூப்பர்.
    ஒரு சந்தேகம். இந்த வயதில் என்றால் எந்த வயதில் சார்? ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. ஹிஹி....கவிதை நல்லா இருக்குதுங்களா ? கேள்விக்கும் நன்றி

      Delete
  11. வர்ணனை அழகு மாசியில் பிறந்தவள் மயக்கியதில் விந்தையில்லை.

    ReplyDelete
    Replies
    1. எனக்காக பிறந்தவள் என்னுயிரில் கலந்தவள் அழகாகத்தானே இருக்க வேண்டும்.நன்றிங்க நட்பே

      Delete
  12. கனவு நனவானால்
    வாழ்வெல்லாம் வசந்தம்தானே..?

    தொடர்க....! வாழ்க....!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே ,வசந்தம் வேண்டுவோர் இன்னும் நிறையப்பேர் இருப்பார்கள்.நன்றிங்க நண்பரே

      Delete
  13. உள்ளத்தில் அன்பிருந்தால் எந்த வயதிலும் அழகுதான்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் நண்பரே.அகஅழகு முக அழகை காட்டிடும்.நன்றி

      Delete
  14. அன்புள்ளம் கொண்ட அனைவருமே அழகுதான்
    என்பதை அழகாக புரியவைத்துள்ளீர்கள் கவியாழி ஐயா.

    ReplyDelete
    Replies
    1. அன்பும் அழகுதான் அன்புகொண்டோர் அனைவருமே அழ்கானவர்கள்தான்.நன்றி

      Delete
  15. You could definitely see your enthusiasm within the article you write.
    The arena hopes for even more passionate writers like you who aren't afraid to mention how they believe. At all times go after your heart.
    Also visit my page : Fat Loss Factor Report

    ReplyDelete
  16. whoah this blog is fantastic i really like
    reading your articles. Keep up the good work! You understand, a lot
    of persons are hunting round for this information,
    you could help them greatly.
    Here is my website - weight loss

    ReplyDelete
  17. அருமையாக உள்ளது கவியாழி அவர்களே

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்கம்மா .தொடந்து அனைத்தையும் படித்துப் பாருங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more