பேராசைப் பெரும் நஷ்டம்
" பேராசைப் பெரும் நஷ்டம்"
அதிகமா ஆசைப்படுவதை பேராசை என்று சொல்வார்கள். இதைப்பற்றி நிறைய நீதி கதைகளும் கட்டுரைகளும் உதாரனங்களும் உண்டு.
அளவுக்கதிகமாக ஆசைபடுவதும் பொருள் சேர்த்து வைப்பதும் தவறு. இங்கு தவறான வழியில் பணம் சேர்த்த அரசியல்வாதிப் பற்றியே குறிப்பிடுகிறேன்
எல்லா மதமும் இதைப்பற்றி தவறாகவே சுட்டிக்காட்டுகிறது இருந்தாலும் நம்மில் எத்தனைபேர் கடைபிடிக்கிறார்கள் மிக சொற்பமான சிலரே.பலபேர் இதைப்பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை .பணம் சேர்ப்பதிலேயே மேலும் மேலும் குறியாய் அக்கறையாய் இருப்பார்கள்
இவ்வாறானவர்கள் நேர்வழியில் சேர்த்திருக்க மாட்டார்கள் தவறான வழியே தடமாக எண்ணி லஞ்சம், கலப்படம், பதுக்கல், வட்டி வசூலித்தல் , வழிப்பறிக் கொள்ளை, ஏமாற்றிப் பணம் பறித்தல் போன்ற தவறான வழியிலேயே சேர்த்திருப்பார்கள் இதையே தொழிலாகவும் செய்வார்கள்.
அவசியமற்ற செலவுகளும் ஆர்பாட்டம் கேளிக்கையுடன் சமூக அக்கறை உள்ளவர்களாய் பொதுமக்களிடம் காட்டிக்கொள்வார்கள்.ஏழைகளிடம் பிடுங்கியதை ஏழைகளுக்கு தர்மம் செய்வதுபோல் நடிப்பார்கள்.அதற்காக விளம்பரபடுத்தி மகிழ்வார்கள்
இவர்களின் வருவாய்க்கு சரியான கணக்கிருக்காது. அரசுக்கும் முறையான கணக்கை காட்டி வரிசெலுத்த மாட்டார்கள் காரணம் இது நேர்வழியில் உழைத்து சம்பாதிக்கவில்லையே அதனால் முறையட்ற கணக்காக வைத்திருந்து முறையின்றி செலவழிப்பார்கள்.
கடவுளின் பெயரால் விழா எடுப்பதாய் சொல்லி பணம் வசூலித்து நாட்டியம் ,கச்சேரி,வானவேடிக்கை மேளதாளம் போன்ற மக்களை மகிழ்ச்சியூட்டும் நிகழ்சிகளை நடத்தி மக்களின் மனதை திசைதிருப்பி நல்லவர்களாக காட்டிக்கொள்வார்கள்.
அரசியலில் நுழைந்து அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு தேர்தலிலே ஒரு கட்சியின் வேட்பாளராக நிற்பார்கள் .மாற்று வழியில் சேமித்ததை தேர்தலில் செலவு செய்து எப்படியும் ஜெயித்திடலாம் என்றெண்ணி எல்லாவற்றையும் கடன் வாங்கியும் நகை சொத்து அடமானம் வைத்து செலவு செய்வார்கள்.
மக்களுக்கு தெரியாதா இம்மாதிரியான வேட்பாளரின் யோக்கியதை கொடுத்ததை வாங்கிக் கொண்டு நேர்மையாக நியாயமாக வாக்களித்து .முறையற்றோரின் வாழ்வுக்கு முற்றுப் புள்ளி வைப்பார்கள் .
இறுதியில் எல்லாவற்றையும் இழந்து வந்த வழியை பார்த்து மீண்டும் ஏழையாக வாழ்க்கையை தொடர்வார்கள் தவறாக சேர்த்தப் பணம் தானாகவே நஷ்டமாய் ஓடிவிடும்.முறையாக சேர்த்தப் பணம் முப்பொழுதும் நம்மைக் காப்பாற்றும்.எனவே பேராசைப் பட்டு பெரும் துன்பம் சேர்க்க வேண்டாம்
உண்மை
ReplyDeleteஅயல்நாட்டுக்குபோயி அங்கேயே தங்கிறதாலே யாருக்கு என்ன என்ன இழப்பு என்பதை புரிஞ்சிக்கணும்.
Deleteநீங்க வந்ததுக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றிங்க
.முறையாக சேர்த்தப் பணம் முப்பொழுதும் நம்மைக் காப்பாற்றும்.எனவே பேராசைப் பட்டு பெரும் துன்பம் சேர்க்க வேண்டாம்
ReplyDeleteஅருமையான பகிர்வுகள்..பாராட்டுக்கள்.
நாட்டுலே அப்படித்தானே நடக்குது.எல்லோரும் உணரனும்
Deleteரொம்ப சரியா சொல்லியிருக்கீங்க சார்... த.ம. 2...
ReplyDeleteநன்றிங்க தம்பி.அந்தமானில் இருந்தாலும் தொடர்ந்து வாங்க.
Deleteமுற்றிலும் உண்மை சார்!
ReplyDeleteநன்றிங்க....வந்ததுக்கும் கருத்துத்தந்ததுக்கும்
Deleteஅத்தனையும் உண்மை சகோதரரே... நேர்வழி என்பது வெறும் வார்த்தகளில் மட்டுமே இருக்கிற கசப்பான உண்மை...:(
ReplyDeleteஇதை பெரும்பாலனோர் உண்மை என்று அறிந்திருந்தாலும் அதைபற்றி கவலைப்பட்டதாக தெரியவில்லை
ReplyDeleteஅவரவர் மனம் உணர வேண்டியது... உணரும் ஒரு நாள்...
ReplyDeleteநிச்சயம் நண்பரே உணரத்தான் வேண்டும் இறுதி காலத்திலாவது
Deleteமுறையாக சேர்த்தப் பணம் முப்பொழுதும் நம்மைக் காப்பாற்றும்.எனவே பேராசைப் பட்டு பெரும் துன்பம் சேர்க்க வேண்டாம் //
ReplyDeleteநன்றாக சொன்னீர்கள்.
போகும்போது என்னத்தை எடுத்து செல்கிறோம் .எவ்வளவு பணம் சேர்த்தாலும் எடுத்து செல்ல முடியாதே
Deleteஎனக்கும் இதைப் பற்றிய சந்தேகங்கள் உண்டு ...இந்த அரசியல்வாதிகள் யாருக்காக சேர்க்கிறார்கள்... தன் வாரிசுக்காக என்றால் வாரிசும் வந்து அவர் பங்குக்கு சேர்க்கிறார்... அப்புறம் அவ்வளவும் சேர்த்து என்ன செய்யப்போகிறார்கள்... ஏன் அவர்களுக்கு இது போதும் எனும் எல்லை வரவில்லை. தான் அனுபவிக்க என்றால் அவர்களின் அனுபவிப்பு எல்லையையும் மீறிச் சேர்க்கும் காரணம் என்ன?
ReplyDeleteஆறடி நிலமும் இப்போது இல்லை.அடுப்பு மட்டுமே உள்ளது அதிலும் ஒரு தம்ளர் சாம்பல் மட்டுமே தருகிறார்கள்
Deleteபேராசை பெருநஷ்டம்தான்! பதிவிற்கு நன்றி!
ReplyDeleteஉண்மைதான் பெராசைபடக்கூடாது
Deleteசரியாச் சொன்னீங்க கவிஞரே!
ReplyDeleteஅரசியல்வாதிகள் மட்டுமா....?
ReplyDeleteஎன்னைப் பொருத்தவரையில்
பேராசைப் படலாம்.
ஆனால்... அதை நியாயமான முறையில்
அடைய முற்பட வேண்டும்.
பதிவு அருமை கவியாழி ஐயா.
ஆசைப்படலாம் ஆனால் பேராசைப்படக்கூடாது
Deleteபேராசை பெரு நஷ்டம் என்பதை அழகாக பதிவு செய்துள்ளீர்கள்
ReplyDeleteநன்றிங்கம்மா.
Deleteநல்லாவே சொன்னீங்க!
ReplyDeleteநன்றிங்க ஜனா
Deleteபோதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து!
ReplyDeleteஉண்மைதாங்க அய்யா
Deleteஇறுதியில் எல்லாவற்றையும் இழந்து வந்த வழியை பார்த்து மீண்டும் ஏழையாக வாழ்க்கையை தொடர்வார்கள் தவறாக சேர்த்தப் பணம் தானாகவே நஷ்டமாய் ஓடிவிடும்.
ReplyDelete>>
இதெல்லாம் எந்த கலத்துல?? பணம் சேர்ந்துட்டா எல்லாத்தையும் பார்த்துக்கலம், உடல்நலம், கவுரவம், படிப்புன்னு எல்லாத்தையும் விலை கொடுத்து வாங்கும் காலமிது
அப்படியானால் மனதை நல்ல மக்களை வாங்க முடியுமா? சிக்கனமாய் செலவு செய்ய முடியுமா?
Delete