இன்றும் உன்னைத் தேடுது
ஏங்கி ஏங்கியே
என் இளமையை கழித்தேன்
இன்னும் வேண்டியே-அதனால்
இன்றும் நான் தவித்தேன்
கனவினால் தினமும்
தூங்க மறுத்தேன்
காதலால் உன்னை -அங்கும்
தேடியே அலைந்தேன்
சின்ன குழந்தைகள்
சிறைபிடிக்குது
செல்லமாய் கொஞ்ச-மீண்டும்
உள்ளம் ஏங்குது
ஆசை ஏனோ
அடங்க மறுக்குது
அணைக்க வேண்டியே-இன்றும்
உன்னை தேடுது
நீ வருவாயோ
நிழல் தருவாயோ
பூவுடன் வந்து-என்னை
போர் தொடுப்பாயா
என் இளமையை கழித்தேன்
இன்னும் வேண்டியே-அதனால்
இன்றும் நான் தவித்தேன்
கனவினால் தினமும்
தூங்க மறுத்தேன்
காதலால் உன்னை -அங்கும்
தேடியே அலைந்தேன்
சின்ன குழந்தைகள்
சிறைபிடிக்குது
செல்லமாய் கொஞ்ச-மீண்டும்
உள்ளம் ஏங்குது
ஆசை ஏனோ
அடங்க மறுக்குது
அணைக்க வேண்டியே-இன்றும்
உன்னை தேடுது
நீ வருவாயோ
நிழல் தருவாயோ
பூவுடன் வந்து-என்னை
போர் தொடுப்பாயா
ஆகா....!!
ReplyDeleteஆச்சரியம் உண்மைதான்.
Deleteநன்றி நட்பே நீங்க வந்ததுக்கு
அன்பான உணர்விற்கு (காதலுக்கு) வயதேது...?
ReplyDeleteவாழ்த்துக்கள்...
உண்மைதான் நண்பரே.வாழ்த்துக்கு நன்றி
Deleteபூவுடன் வந்து போர் தொடுப்பாயோ? --- நல்லாத்தான் இருக்கு....
ReplyDeleteநன்றிங்க
Delete// நீ வருவாயோ
ReplyDeleteநிழல் தருவாயோ
பூவுடன் வந்து-என்னை
போர் தொடுப்பாயா
// - ரசிக்கும் வரிகள்!
ரசிப்புக்கும் நீங்க சொன்னதுக்கும் நன்றிங்க
Deleteகல்யாணத்தில் முடியாத காதல்தான் இன்னும் இனிமையானது;ரணத்தின் வடுவை நெருடிப்பார்ப்பது போல் அதை நெருடிக்கொண்டே அந்தவலியின் சுகம்!
ReplyDeleteஅருமையான கவிதை
கனிந்த காதலல்ல முதிர்ந்த காதல்
Deleteவந்ததுக்கு நன்றிங்க
அருமை
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் நன்றி
Deleteஅருமை.. அழகான ஏக்கக் கவிதை. வாழ்த்துக்கள் சகோதரா!
ReplyDeleteகரும்பாக இனிக்கக் கவிபாடும் கவியாழி கவலைவிடும்
எறும்பாக ஓடிவந்திடுவாள் ஏந்திழை உம்மிடம் ஏங்குமும்
கனிவான கவிகேட்டுக் காதலியாள் இத்தினத்தில்
இயம்புவாள் தன்காதலையும் உவந்து!
இத்தினத்தில்
Deleteஇயம்புவாள் தன்காதலையும் உவந்து!
நல்லா சொன்னீக வாழ்த்து நன்றிங்க
நன்றிங்க சுரேஷ் .நீங்க வந்ததுக்கும் வாழ்த்தியதுக்கும்
ReplyDeleteநல்ல கவிதை.
ReplyDeleteதொடருங்கள்...
நன்றிங்கம்மா.உங்களது வேண்டுகோள் நிச்சயம் இன்னும் நல்ல கவிதைகள் தொடரும்
Delete''..நீ வருவாயோ
ReplyDeleteநிழல் தருவாயோ
பூவுடன் வந்து-என்னை
போர் தொடுப்பாயா
..''பிந்திய வலன்ரைன்ஸ் வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
நன்றிங்கம்மா,காதலர் தினத்துக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை
Deleteகாதலர் தின ஏக்கம் கவிதை புனைந்ததன் நோக்கம்!
ReplyDeleteஇப்படியும் சிலபேரின் தாக்கம் உண்மைதான் அய்யா
Deleteஏக்கத்தைத் தூதாய் எழுதி கவிபடைத்தீர்!
ReplyDeleteதாக்கங்கள் காதல் தனித்துவங்கள்! - நோக்கத்தை
ஊக்கத்துடன் சேர்ந்து ஒலிக்க எழுதெழுத
தூக்கத்தைத் தூக்கி எறி!
கவிதை அருமை கவியாழி ஐயா.
த.ம. 6
நன்றிங்கம்மா ,தூக்கத்தை எறிந்தால் ஏக்கம் மீண்டும் வருமே
ReplyDeleteசிறப்பான கவிதைக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeletenநன்றிங்கம்மா
Delete