தெய்வங்கள்

தெய்வங்கள்

அவனுக்கும் நன்றி சொல்வேன்......




அவனுக்கும் நன்றி சொல்வேன்
ஆகையால் அவனென் அடிமை
காலமெல்லாம் சுறுசுறுப்பாய்
காணுகின்ற புது மலராய்
காத்திருந்து தீண்டும்போது.....

எத்தனை பக்கங்கள்
எழுதிப் பார்த்து உறங்கினாலும்
அத்தனையும் ரசிக்கிறேன்
அன்புடனும் மகிழ்கிறேன்
அதனால் சொல்கிறேன் அவனுக்கு ..

சிலந்திபோல வலை
சிங்காரமாய் பொட்டு
எதிரியென எண்ணாமல்
எல்லா உணவும் சாப்பிட்டு
என் வயிறும் நிறைகிறது.......

மனதின் ஒருபக்கம்
மௌனமான  வலியும்
மருத்துப் போனதால்
பணம் மட்டுமே தேவை
அதையும் கேட்கிறேன் அவனுக்காய்......?>



Comments

  1. சொல்லிய நன்றி அருமை !

    தொடர வாழ்த்துகள்...

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றி

      Delete
  2. நன்றி சொல்வது சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. நீங்க வந்து சொல்வதும் மகிழ்ச்சி மீண்டும் வாங்க ஆதரவு தாங்க

      Delete
  3. Replies
    1. உங்கள் வருகை கண்டு மகிழ்ந்தேன் நன்றி

      Delete
  4. ம்..வலிகள்தான் வாழ்க்கையாய் இருக்கிறது.
    வித்தியாசமான சிந்தனை. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. வலியை புரிந்தால்தான் மருந்திட முடியும் .வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றி

      Delete
  5. // மனதின் ஒருபக்கம்
    மௌனமான வலியும்
    மருத்துப் போனதால்
    பணம் மட்டுமே தேவை
    அதையும் கேட்கிறேன் அவனுக்காய்......?>//

    - நல்ல வரிகள்.

    ReplyDelete
    Replies
    1. அவளின் வலியை புரிந்து கொண்டால் மட்டுமே அவளுக்கு நிம்மதி

      Delete
  6. நல்ல கவிதை .
    வலிகள் தான் வாழ்க்கை.
    வலிக்கிறது.

    ராஜி

    ReplyDelete
    Replies
    1. வலி இல்லாத வாழ்க்கை ஏது?

      Delete
  7. சிலந்திபோல வலை
    சிங்காரமாய் பொட்டு

    வாழ்க்கையின் வலிகள் புரிந்த கவிதையின் விதை ..!

    ReplyDelete
  8. //எத்தனை பக்கங்கள்
    எழுதிப் பார்த்து உறங்கினாலும்
    அத்தனையும் ரசிக்கிறேன்
    அன்புடனும் மகிழ்கிறேன்
    அதனால் சொல்கிறேன் அவனுக்கு ..//

    அருமையான வரிகள் (அனைத்தும் நன்றாக உள்ளன)

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more