நம்பிக்கை வார்த்தைகளை கூறுங்கள்.......
பிரச்சனை என்னவென்று கேளுங்கள்
பிள்ளையுடன் நண்பனாக பழகுங்கள்
நல்லவற்றை நாலுமுறை பேசுங்கள்-அன்பாய்
நம்பிக்கை வார்த்தைகளை கூறுங்கள்
உள்ளபடி வாழ்வுதனை வாழ்வதற்கு
உண்மையாக தகுந்த வழிகாட்டுங்கள்
சொல்லுவதை சரியாக சொல்லுங்கள்-பிறர்
சொல்லும்படி நீங்களுமே வாழுங்கள்
கஷ்டத்தை மட்டுமே சொல்லாமல்
கடன் வாங்கி வந்தவழி கூறுங்கள்
இல்லையென்று எப்போதும் -சொல்லாமல்
இருப்பதை எடுத்துரைத்து காட்டுங்கள்
நல்லவற்றை நாடவேண்டி எப்போதும்
நயமாக நல்லொழுக்கம் புகட்டுங்கள்
நாலுபேர் மத்தியிலே உயர்வாக -வாழ்க்கை
நம்பிக்கை வார்த்தைகளை விதையுங்கள்
நல்லவற்றை நாடவேண்டி எப்போதும்
ReplyDeleteநயமாக நல்லொழுக்கம் புகட்டுங்கள்
நாலுபேர் மத்தியிலே உயர்வாக -வாழ்க்கை
நம்பிக்கை வார்த்தைகளை விதையுங்கள்
முத்தான நம்பிக்கை
நல்கும் நல்வரிகள் ..
நல்வாழ்த்துகள்.. பாராட்டுக்கள்..
நன்றிங்கம்மா.உங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்
Deleteநம்பிக்கையூட்டும் வரிகள்.
ReplyDeleteஉண்மைதான் நண்பரே
Deleteஅப்பாக்களுக்காண அறிவுரை அருமையாக இருக்கிறது.
ReplyDeleteஅப்பாவுக்கு மட்டுமல்ல குடும்பத்தினர் அனைவருக்குமே
Deleteமிகவும் சிறந்த கருத்துரைகள் பாராட்டுகள் ....
ReplyDeleteநன்றிங்க நீங்க வந்தமைக்கும் பாராட்டியமைக்கும்
Deleteதலைமுறை இடைவெளி நீண்டு கிடக்கிறது இங்கே ...
ReplyDeleteநாம் சொன்னாலும் பிள்ளைகளா இருந்தாலும் கேட்டுக்கொள்வதில்லை ...
மாறனும் .. மாற்றம் வேண்டும்
நாமும் மாறனும் நம்மைப்போல் மாத்தணும்
Deleteநம்மால் முடிந்தது நம்பிக்கை தரும் சொற்கள்;அதையாவது செய்யலாமே!
ReplyDeleteநன்று கவிஞரே
உண்மைதான் நண்பரே நம்மாலான நல் வார்த்தைகளை சொல்லவேண்டும்
Delete//கஷ்டத்தை மட்டுமே சொல்லாமல்
ReplyDeleteகடன் வாங்கி வந்தவழி கூறுங்கள்
இல்லையென்று எப்போதும் -சொல்லாமல்
இருப்பதை எடுத்துரைத்து காட்டுங்கள்//
அருமையாய் சொல்லிருக்கீங்க கண்டிபாய் கடைபிடிக்கவேண்டியது
நாம் எப்படி வளர்த்தோம் எந்த சூழ்நிலையில் வளர்த்தோம் என்று சொல்லி வந்தால் வாழ்கையின் தத்துவம் புரியும்
Deleteநல்ல நம்பிக்கை வரிகள்! நன்றி!
ReplyDeleteஉண்மை.
Deleteஇப்போ இதுதான் தேவையென நினைக்கிறேன்
பச்சைப் பசேல் என்ற உங்கள் பக்கம் இன்றுதான் நுழைந்தேன்.நம்பிக்கை ஊட்டும் வரிகள் தொடகின்றேன்.வாழ்த்துகள்
ReplyDeleteநீங்கள் வந்ததுக்கு மிக்க நன்றி தொடர்ந்து படியுங்கள் மற்றவற்றையும் பாருங்கள்
Delete