தெய்வங்கள்

தெய்வங்கள்

"மனிதமே" இறந்ததோ?




மனிதமே இறந்ததோ
மனசாட்சி அழிந்ததோ

எங்கெங்கு காணினும்
எண்ணற்ற கொலைகள்

எல்லோரும் தூற்றும்
கற்பழிப்புப் பிழைகள்

வசதி வேண்டியே
வழிப்பறிக் கொள்ளை

வார்த்தை மாறியே
வாழ்க்கைப் பயணம்

பிழை செய்வதே
பெருமையாய் போற்றுதல்

ஊழலில் சேர்த்ததை
ஒளிவின்றி செலவழித்தல்

கள்ளச் சந்தையில்
காசு பணம் சேர்த்தல்

கலப்படத்தை நேர்த்தியாய்
கைதொழிலாய் செய்தல்

இயற்கையே மரித்ததால்
இயலாமை தொடருதோ

எங்கே போனது
மனித நேயம்

எப்படி வாழும்
நீதியும் நியாயமும்

சற்றே யோசிப்பீர்
சந்ததிக்கு வாழ்வளிப்பீர்







Comments

  1. மனித நேயம் எப்போதோ இறந்து விட்டது... மீண்டும் பிறக்க தனிமனித ஒழுக்கம் வளர வேண்டும்...

    ReplyDelete
    Replies
    1. எடுத்துச் சொல்லி ஒழுக்கத்தை வளர்க்கும் நிலை உள்ளது.
      நன்றிங்க சார் வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும் நன்றிங்க

      Delete
  2. அருமை!சொற்களில் எளிமை!

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க அய்யா .வந்ததுக்கும் கருத்து பகிர்ந்ததுக்கும் நன்றிங்கயா

      Delete
  3. வார்த்தை மாறியே
    வாழ்க்கைப் பயணம்..

    வேண்டாமே ..!
    சற்றே யோசிப்பீர்
    சந்ததிக்கு வாழ்வளிப்பீர்..

    சிந்தனை அருமை ...

    ReplyDelete
    Replies
    1. இன்றைய உலகில் இன்னும் கொஞ்ச காலமாவது இருக்கட்டும் மனித நேயம்

      Delete
  4. குமுறலை வெளிப்படுத்தி விட்டீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. இங்க யாரும் அடிக்க மாட்டாங்க அந்த தைரியம்தான்.
      வருகைக்கு நன்றி நண்பரே

      Delete
  5. என்னவோ போங்க! புலம்பியே வாழ்க்கை போயிடுது

    ReplyDelete
    Replies
    1. இல்லாட்டி இதயமே வெடிசிடுமே அதனால பொலம்பி தீர்க்கிறேன்

      Delete
  6. ஆற்றாமையை கொட்டி விட்டீர்கள் கவிதையாக. நன்று!

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ஒருத்தராவது உணர்ந்து எடுத்து சொன்னால் போதுமே

      Delete
  7. மனிதம் அழிந்தது அழிந்தது தான் போலிருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியில்லை அதற்கும் வைத்தியம் செய்ய வேண்டும் .மனிதம் அழியாது உயிர்கொடுக்க வேண்டும்

      Delete
  8. எங்கே போனது
    மனித நேயம்

    எப்படி வாழும்
    நீதியும் நியாயமும்

    சற்றே யோசிப்பீர்
    சந்ததிக்கு வாழ்வளிப்பீர்//

    சந்ததிகள் வாழ நல்லதை சொல்லும் நல்ல கவிதை.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே இப்போ வாழுற வாழ்க்கை நமது சந்ததியினருக்கும் கிடைக்க வேண்டுமே

      Delete
  9. //ஊழலில் சேர்த்ததை
    ஒளிவின்றி செலவழித்தல்

    கலப்படத்தை நேர்த்தியாய்
    கைதொழிலாய் செய்தல்//

    அருமை அருமை உண்மையின் விளிம்பிலே நெற்றி அடி

    ReplyDelete
    Replies
    1. எல்லோருமே இதை சொல்லவேண்டும்.நன்றிங்க

      Delete
  10. புலம்புவதை விட வேறென்ன செய்ய இயலும்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் புலம்பினாலும் பைத்தியக்காரன் என்றும் சொல்வார்கள்

      Delete
  11. ''..எங்கே போனது
    மனித நேயம்

    எப்படி வாழும்
    நீதியும் நியாயமும்..''
    good questions....
    nal vaalththu..
    Vetha.Elangathilakam

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க ,உண்மைதானுங்க

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more