எங்கே நிம்மதி !
ஏழெட்டு வீடிறுக்கு
ஏசி காரும்
நிறைந்திருக்கு
கூவிட்ட குரலுக்கு
கூட்டமாக நிறைய
வேலையாளிருக்கு
வங்கியிலே பணமிருக்கு
வாங்கி வைத்த
நிலமிருக்கு பொருளிருக்கு
நடைபோக தெம்பிருக்கு
நலம்கேட்க
நட்பிங்கே மட்டுமிருக்கு
இத்தனை இருந்தும்
இறைவனை நினைத்தும்
தப்பிருக்கே
ஆம்
பெற்றவரை விட்டுவிட்டு
பொறுப்பை மறந்தேனே
தவறு செய்தேனே
நிறைந்த சொந்தமெங்கே
நண்பர்களேங்கே
தமிழே நீயும் எங்கே
இத்தனையும் மறந்து
இங்கே தனியாய் வாழ்வதா
இனிய சொந்தம் மறப்பதா
உண்பதும் உணவா
உறவிழந்து மகிழ்வா
எங்கே நிம்மதி
பணம் பொருள்
போதுமெனக்கு
நேசமும் நிம்மதியும் வேண்டும்
சொந்த நாடே சுகமென்று
வந்தவழி செல்கிறேன்
வாழுமிடம் செல்கின்றேன்
பணம் பொருள்
ReplyDeleteபோதுமெனக்கு
நேசமும் நிம்மதியும் வேண்டும்//
அருமையான கவிதை.
சொந்த, பந்தங்களை பார்க்க அவர்களுடன் நேசமாய் இருக்க நிம்மதி தானாய் வரும் தான்.
சொந்த நாட்டுக்கு வந்தாலே நிம்மதியும் மென்மையும் கிடைக்கும்.நன்றிங்க
ReplyDelete//சொந்த நாடே சுகமென்று
ReplyDeleteவந்தவழி செல்கிறேன்
வாழுமிடம் செல்கின்றேன்//
வரிகள் மூன்று ஆனாலும்
வழி எது என்பதை
வலி உடன் உணர்த்துகிறது.
கவிதைகள் தொடரட்டும்.
எவ்வளவு பணமிருந்தும் என்ன பயன் சொந்தமும் நட்பும் போல சந்தோசமான வாழ்க்கை கிடைக்குமா?
Deleteதேடியும் வாராது, வந்தாலும் நிலைக்காது! நண்ப!
ReplyDeleteஆம் அய்யா நட்பும் சொந்தமும் எங்கே கிடைக்கும் இந்த ஊரில் தானே?
Delete# சொந்த நாடே சுகமென்று
ReplyDeleteவந்தவழி செல்கிறேன்
வாழுமிடம் செல்கின்றேன்##
சென்றவர்கள் அனைவருமே திரும்பி வரும் ஆசையில் தான் ஆனால் இங்கிருக்கும் கடமைகளும், இன்னமும் சேர்த்துக் கொண்ட எதிர்பார்ப்புகளும் அவர்களை தடுக்கிறது பாவம் சூழ்நிலைக் கைதிகள்.
ஓரளவு பணம் இருந்தா போதும் சொந்தமும் நண்டபர்களுக்கினையாகுமா
Deleteவாழ்க்கை இது தானே !
ReplyDeleteவாழ்க்கையை வாழவேண்டுமென சொல்கிறேன்
Deleteபணம் பொருள்
ReplyDeleteபோதுமெனக்கு
நேசமும் நிம்மதியும் வேண்டும்
சொந்த நாடே சுகமென்று
வந்தவழி செல்கிறேன்
வாழுமிடம் செல்கின்றேன்
போதுமென்ற மனமே மிகப்பெரியது.
போதேம்நேட்ற மனம் வேண்டும் பிரிந்த சொந்தம் சேர வேண்டும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்
Delete//உண்பதும் உணவா
ReplyDeleteஉறவிழந்து மகிழ்வா...
சொந்த நாடே சுகமென்று
வந்தவழி செல்கிறேன்//
புலம்பெயர்ந்த அத்தனை மனத்திலும் இருக்கின்ற வலியை அருமையாகக் கூறினீர்கள்!
அருமை! பாராட்டுக்கள்!
”சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப்போல வருமா”...
உண்மை.பணத்திற்காக வெளியில் சென்றவர்கள் திரும்பி வரணும் நிம்மதி பெறனும்
Deleteசொந்த நாடே சுகம் என்று திரும்புகின்றேன்! உண்மையான வரிகள்! எத்தனைதான் பணம் வெளிநாட்டில் சேர்த்தாலும் சொந்தநாடு போலாகுமா?! நன்றி!
ReplyDeleteவரணும் பணத்தை தாண்டி சொந்தங்களைத்தேடி வரணும்
Deleteசொர்க்கமேயானாலும் அது நம்மூரு போலாகுமா?
ReplyDeleteஆம் உண்மை அதனால்தான் இங்கேயே வரச்சொல்கிறேன்
Deleteகிடைக்கிறது கிடைக்காம இருக்காது; கிடைக்காம இருக்கிறது கிடைக்காது. :-)
ReplyDeleteவழக்கம்போலவே வருத்தெடுக்கிரீன்களே
ReplyDeleteபணம் வரும் வரை அதைத் தேடுவோம், வந்த பின் நிம்மதி தேடுவோம்,--ஆனாலும் பணத்தை விட மாட்டோம்,இல்லாதவருக்கு கொடுக்க மாட்டோம்,
ReplyDeleteநிம்மதி....எதில் கிடைக்கும்?
உண்மைதான் பணம் அதிகமானால் நிம்மதிதான் கெடும்
Deleteகவிதைக்கு மட்டும் அழகு...
ReplyDeleteநன்றிங்கம்மா நீங்க வந்ததுக்கும் கருத்து பகிர்ந்ததுக்கும் நன்றிங்கம்மா.
Deleteஉங்களுடைய கவிதை நிஜத்தை அழகாக வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
ReplyDeleteநன்றிங்க உண்மையில் எல்லோரும் யோசிச்சா பணம் என்பது வெறும் காகிதம் தான்
Deletetha.ma 6
ReplyDeleteநம் இருதயத்தில் பாவத்தின் ஆளுகை இருக்கும்வரையில் சமாதானமும், சந்தோஷமும், நிம்மதியும் கிடைக்கவே கிடைக்காது.
ReplyDeleteபாவத்தின் வேர் அறுக்கப்படவேண்டும், சமாதானத்தைக்கொடுக்கும் இயேசுவை நம் இருதயத்தில் வரவேற்க்கவேண்டும்.
இயேசுவிடம் நம் பாவங்கள் அனைத்தையும், ஒப்புக்கொண்டு அவரோடு அனுதினமும் நடந்தால் மட்டுமே நமக்கு மனநிம்மதியும், சந்தோஷமும், சமாதானமும் கிடைக்கும்.
Regards,
gopalelango.blogspot.com