தெய்வங்கள்

தெய்வங்கள்

பள்ளிச் செல்லும் பிள்ளைகளே


பள்ளி செல்லும் பிள்ளைகளே
பாடம் படிக்கப் போறீங்களா
நல்ல செய்தி அறிவுரைகள்
நாளும் கற்கப் போறீங்களா

சொல்லக் கேட்ட செய்திகளை
சொல்லி வைத்த உண்மைகளை
மெல்ல மெல்ல உள்மனதில்
மிகவும் நன்றாய் சேர்த்திடுங்கள்

தாத்தா பாட்டி சொல்வதிலே
தமிழில் சொன்ன கதைகளிலே
படித்தால் தானே புரிந்திடும்
பள்ளியில் இதையும் படிப்பீரே

உலகம் முழுவதும் உங்களுக்காய்
உரிய முறையில் எழுதியதை
பலதும் கற்றுப் பயனடைவீர்
பாரினில் சிறப்பாய் இருந்திடுவீர்

இதையே அனைத்து ஆசிரியரும்
எடுத்துச் சொல்லி மாணவர்க்கும்
கதையில் உள்ள உண்மைகளை
கற்றுத் தெளிய  வைத்திடுவீர்

உள்ளம் மகிழப் படித்திடுங்கள்
உண்மை நிலையும் அறிந்திடுங்கள்
உலகம் சிறக்க வாழ்ந்திடவே
உயர்ந்த களமே அமைப்பீரே



Comments

  1. குழந்தைகளுக்கான நல்ல அறிவுரைகள் சொல்லும் பாடல். நன்று

    ReplyDelete
  2. உலகம் முழுவதும் உங்களுக்காய்
    உரிய முறையில் எழுதியதை
    பலதும் கற்றுப் பயனடைவீர்
    பாரினில் சிறப்பாய் இருந்திடுவீர்

    பாங்கான பாடல் ..பாராட்டுக்கள்.!

    ReplyDelete
  3. # உள்மனதில்
    மிகவும் நன்றாய் சேர்த்திடுங்கள்#
    ஐந்திலேயே சேர்வதுதான் ஐம்பதிலும் தொடரும் என்று சொல்லாமல் சொன்னதற்கு பாராட்டுகள் !

    ReplyDelete
  4. சிறப்பான ஆலோசனைகள் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  5. அற்புதமான சந்தக் கவிதை
    மா மா காயில் மயங்கிவிட்டேன்
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. வணக்கம்
    ஐயா.
    சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் ஐயா.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  7. வணக்கம்
    ஐயா.

    த.ம 6வது வாக்கு

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  8. அருமையான பாடல் ஐயா நன்றி
    த.ம.8

    ReplyDelete
  9. அருமையான பாடல். வாழ்த்துகள் கவியாழி.

    ReplyDelete
  10. உலகம் முழுவதும் உங்களுக்காய்
    உரிய முறையில் எழுதியதை
    பலதும் கற்றுப் பயனடைவீர்
    பாரினில் சிறப்பாய் இருந்திடுவீர்//
    அருமையான் கவிதை குழந்தைகளுக்கு.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. வண்ணக் கவிதைகள் போல்
    எண்ணமெல்லாம் இனித்திட
    பிறக்கப் போகும் புத்தாண்டே
    புவியினில் இன்பம் தந்து விடு என
    வாழ்த்தி வணங்குகிறேன் சகோதரா .

    ReplyDelete
  12. பாட்டு வடிவத்தில் குழந்தைகளுக்கு நல்ல அறிவுரைகள்! குழந்தைகளுக்கான பாடப் புத்தகத்தில் இப்பாடலைச் சேர்க்கலாம்!

    ReplyDelete
  13. //உள்ளம் மகிழப் படித்திடுங்கள்
    உண்மை நிலையும் அறிந்திடுங்கள்
    உலகம் சிறக்க வாழ்ந்திடவே
    உயர்ந்த களமே அமைப்பீரே//

    பாங்கான கவிதை வரிகள் குழந்தைகளுக்கு படைத்தது அற்புதம்! கவியாழி அவர்களே!!
    பாப்பா பாட்டு என்று தொகுப்பொன்று போடலாமே!!

    ReplyDelete
  14. "சொல்லக் கேட்ட செய்திகளை
    சொல்லி வைத்த உண்மைகளை
    மெல்ல மெல்ல உள்மனதில்
    மிகவும் நன்றாய் சேர்த்திடுங்கள்" என்பது
    பள்ளிச் சிறார்களுக்கான
    சிறந்த வழிகாட்டல்!

    ReplyDelete
  15. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் எனது இதயங்கனிந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். வாழ்க வளமுடன்

    ReplyDelete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more