தெய்வங்கள்

தெய்வங்கள்

அரசாங்க ஊழியன்

அரசாங்க ஊழியன் அரைகஞ்சி குடிச்சாலும்
அன்றாடம் வருமானவரி கட்டாமல்  இருந்தால்
சிரமபட்டாவது கட்டிவிட வேண்டும்-இல்லையெனில்
சீக்கிரமே கட்டாமல் செத்துவிட வேண்டும்


நடுத்தர மக்களுக்கு நாய் பொழப்பு
நாகரீகமென நகையும் நல்லுடையும்
நல்லகல்விக்கு நாயக அலையவேண்டும்-ஆனாலும்
நாதியத்து வேலைக்கு போகவேண்டும்

அகத்தில் கவலையும் முகத்தில் பவுடரும்
அடுக்கில் சாப்பாடு அளவோடு இருக்கவேண்டும்
அடுத்தவனுக்கு வசதியாய் காட்டவேண்டும்-மீண்டும்
அடுத்தவேளை சோறில்லாமல் கிடக்கவேண்டும்

பளபளக்கும் நகைனட்டு போடவேண்டும்
பித்தளைக்கு தங்கபூச்சு போடவேண்டும்
வாகனமும் கடனாக வாங்க வேண்டும்-வட்டியுடன்
வசவும் கேட்டு தலைகுனிய வேண்டும்

பெண்டுபிள்ளை குடியிருக்க வீடு வேண்டும்
பெண்டாட்டி புகழ் ஓங்க வாழவேண்டும்
கையூட்டு பெறாது இருக்க வேண்டும்-நேர்மையான
கடன்காரன் என்று புகழ் பாட  வேண்டும்


இப்படியே இருந்தாலும் இருப்பதை கொண்டு
தப்பேதும் செய்யாமல் சிக்கனமாய் இருந்தாலும்
கற்பனையாய் பேசுவார் கண்டபடி ஏசுவார்- முடிவில்
நற்பயனை வேண்டி நாதியத்து  செத்திடவேண்டும்

Comments

  1. இதுதான், இருக்கிறதிலேயே ரொம்ப பிடித்தது.

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்களைப்போலவே அரசாங்க ஊழியன் அனுபவித்து எழுதியது.மற்றவைகளையும் அதே கோணத்தில் படித்தால் அதுவும் நன்றாகத்தான் இருக்கும்.கவிஞனுக்கு வயதில்லை,மொழி இல்லை .எல்லா கவிதைகளுமே எண்ணத்தில் உதித்தவை தான்

      Delete
  2. அருமை. படிக்கும் பொழுதே மனம் வார்த்தைகளை ரசிக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பியே உள்ளதை உணர்ந்து சொல்லியுள்ளேன்

      Delete
  3. Replies
    1. உண்மை,நானும் ஊர் மத்திய அரசு ,அரசு ஊழியனின் கஷ்டம் தெரியும்

      Delete

Post a Comment

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்...

ரசித்தவர்கள்

பதிவுகள் இதுவரை

Show more