Thursday, 3 January 2013

தனக்கு மிஞ்சியது பின் தானமும் தர்மமும்

தனக்கு மிஞ்சியது பின் தானமும் தர்மமும்

         தர்மம் பண்றேன் பேர்வழி என்று தனது தேவைக்கில்லாமல்  அடுத்தவருக்கு கொடுப்பது  என்பது ஏமாளித்தனம் என்று நான் சொல்லுவேன்.முதலில் தனது தேவைகளும்,தனது குடும்பத்தினர் தேவைகளையும் அறிந்து பூர்த்தி செய்துவிட்டு அதன்பின் அடுத்தவரை பற்றி யோசிப்பதுதான் உண்மையும் சிறந்ததுமாகும்.அதற்காக கொடுக்க கூடாது என்று சொல்லவில்லை .

        முதலில் தனக்கு தேவையானதை அதாவது தன் குடுபத்திற்கும் சாப்பாட்டு செலவு,பிள்ளைகளின் கல்விக்கான செலவு வீட்டு வாடகை, மற்றும் பிற தேவையான அத்தியாவசியமான செலவுகள் போக சேமிப்பும் முதலீடுட்டுக்கும் ஒதுக்கியது போக செய்வதுதான் இன்றைய சூழ்நிலையில் புத்திசாலிதனமென சொல்லுவேன். 

       தகுதிக்கு மீறி தானமோ தர்மமோ செய்தால் அதன்பின்  தானம் செய்யும் நிலையை இழப்பான் பின் அவனுக்கே உதவி செய்ய ஆளில்லாமல் அடுத்தவரை எதிர்பார்த்து இருப்பான்  அப்படி பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சும் அதனால் வேதனையும் மன உளைச்சலுமே இருக்கும்

      அதற்குப்பின் அவனே ஏன் செய்தோம் என்ற நிலையில் என்னிடம் இருக்கும்போது எவ்வளோவோ யார் யாருக்கோ கொடுத்தேன் இன்று என்னிலையரிந்து யாரும் உதவிட முன் வரவில்லையே என்ற ஆதங்கம் கோபமாகி  எல்லோரையும் சபிக்கும் நிலை ஏற்படும் .

      ஆகவே தனமும் தர்மமும் அவசியமாக இருந்தாலும் தன் சூழ்நிலை செலவுகளை கருத்தில் கொண்டு மீதமுள்ளதை கட்டாயம் சிறிதளவாவது தானமும் தர்மும் செய்திட வேண்டும். இதில் பணமாக கொடுப்பதைவிட பொருளாகவோ உணவாகவோ கொடுப்பதே சிறந்தது என்பது எனது கருத்து..
 
       இன்றைய நாட்களில்  உள்ள நடைமுறையில் அவ்வாறு தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது காரணம் ஏமாமற்றுப்பேர்வழிகள் அதிகமாகி விட்டதாலோ என்ற ஐயப்பாடும் உள்ளது.
சுயநலமிக்க வாழ்க்கைக்கு  இதுதான் காரணமோ?


22 comments:

 1. தனக்கு மிஞ்சி தானம் செய்பவர் மிகச் சிலரே/ இக்காலத்தில் அவர்களை காணப்படுவது அரிது.அனால் இப்போதும் சிலர் சத்தம் இன்றி தர்மங்கள் செய்து வருகின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. உண்மையே இப்போது சத்தமின்றி கொஞ்சபேரும் விளம்பரத்துக்காக நிறையபேரும் செய்கிறார்கள்

   Delete
 2. ஒத்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார்,முதலில் பெத்தவங்களையும் ,சகோதரிகளையும் பார்துகிட்டாலே புண்ணியந்தான்
   வந்ததுக்கு நன்றி

   Delete
 3. தனக்கு மிஞ்சியது என்னும்போது தன் அளவு எது என்பதும் கேள்விதான். எத்தனை கிடைத்தாலும் மனித மனம் திருப்தியடையாது. இன்னும் இன்னும் பொருள் சேர்த்து வசதியாக வாழத்தான் நினைக்கும். எனவே தனக்கு மிஞ்சிய (சேமிப்பு)திலேயே கொஞ்சத்தை உதவுவதற்காக ஒதுக்கி வைத்தலே நலம் என்பது என் கருத்து. தான தர்மங்கள் என்பது உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்வது. ஏதாவது ஒரு ரூபத்தில் பின்னாட்களில் உதவுமென்பதும் என் நம்பிக்கை ஐயா. அழகாக கருத்தைச் சொல்லியிருக்கீறீர்கள். நன்று.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் நண்பரே நீங்கள் சொல்வதும் பொருத்தமாக இருக்கும் ஆனால் பின்னாளில் நாம் உதவி செய்தவர் மூலமாகவும் அவரே முன்வந்தும் உதவ முடியும்

   Delete
 4. தகுதிக்கு மீறி தானமோ தர்மமோ செய்தால் அதன்பின் தானம் செய்யும் நிலையை இழப்பான் பின் அவனுக்கே உதவி செய்ய ஆளில்லாமல் அடுத்தவரை எதிர்பார்த்து இருப்பான் அப்படி பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சும் அதனால் வேதனையும் மன உளைச்சலுமே இருக்கும்

  அருமையான பதிவு .. பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க உண்மையில் இந்த பழமொழி கடந்த காலத்தில் சொல்லப்பட்டது ,தற்போதைய நடைமுறை வேறு

   Delete
 5. தனக்கு மிஞ்சித்தான் தானமும் தருமமும் செய்யவேண்டும் என்றால் யாருக்கும் மனசு வருவது சந்தேகமே. நம்ம தேவைகளே ஏகப்பட்டது இருக்கிறதே. அதுக்கே போத மாட்டெங்குதே. அப்படியும் ஒரு 10- ரூபா மிஞ்சினாலும் கூட தான்ம் பண்ண மனசு வரவேண்டுமே.?

  ReplyDelete
  Replies
  1. இந்தக்காலத்தில் நீங்க சொல்வதும் சரிதான்

   Delete
 6. ஆமாங்க வருகிற வருமானத்தில் அவரவர் குடும்பத்த பார்க்கவே முடியள இதில் தானம் வேறா என பலர் கேட்பது உங்க காதுக்கு விழவில்லை போலும் ஜான் ஏறினா முழம் சறுக்கும் இது தான் இன்றைய விலைவாசி மனம் உதவிட நினைத்தாலும் மடி காலியாக இருந்தால் என்ன செய்ய இயலும்.

  ReplyDelete
  Replies
  1. முதலில் குடும்பம் அடுத்து உறவினர்,அடுத்து நண்பர்கள் இதுதானே இன்றைய நடைமுறை ,எனக்கு இன்னொரு தலைப்பு கொடுத்தமைக்கு நன்றி

   Delete
 7. //காரணம் ஏமாற்றுப்பேர்வழிகள் அதிகமாகி விட்டதாலோ என்ற ஐயப்பாடும் உள்ளது.//
  நீங்கள் கூறுவதுதான் சரி.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா,என்ன செய்வது இப்படியும் சிலபேர் இருக்கத்தான் செய்கிறார்கள்

   Delete
 8. இப்போதைய சூழலுக்கு ஏற்ற கருத்து! நன்றி!

  ReplyDelete
 9. வரவு செலவின் மிச்சம் அல்ல சேமிப்பு
  சேமிப்பை முதல் செலவாய் வைத்தலே சரி என்பதுபோல்
  தானத்தை முதலில் வைப்பதே சரி
  மிஞ்சி செய்வோம் என்பதற்குள்
  மனம் மாறவும் சந்தர்ப்பமிருக்கிறது அல்லவா
  சிந்திக்கத் தூண்டும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. வந்ததுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

   Delete
 10. Replies
  1. நன்றி மீண்டும் வருக மீதமும் தருக

   Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்