Sunday, 6 January 2013

தற்கொலைத் தண்டனை யாருக்கு?

எண்ண கனவினில்  நாளும் வடிவமைத்து
எத்தனையோ சிந்தனையை முன் நிறுத்தி
அத்தனையும் வண்ணமாய் உருக்கொடுத்து-அன்பாய்
சித்தனாக சிலைபோல நெஞ்சில்  வளர்த்தார்கள்

சிறுஎறும்பும் சீண்டாது பார்த்திருந்து
சிறிய வயதிலே  செம்மையாக நகையணிந்து
உரிய கல்வியையும் உடன் கொடுத்து-ஊர்பேச
பருவ வயதையும் பார்த்து பூரித்திட்டார்கள்

தெருவோரம் நின்று தினமும்  ரசித்து
தினம்தோறும் உணவும் விரும்பிய தீனியும்
மனம்கோனது மகிழ்ச்சியாய் திணித்து-அன்றாடம்
அகமெல்லாம் அன்பொழுக நாளும் பார்த்தார்கள்

இளமை பருவத்திலே எத்தனையோ  கற்று
எளிமை பண்பையும் சொல்லி கொடுத்து
வளமையாக்கி வடிவமைத்து  வாழவேண்டி-நலம்கான
கிழமை தோறும விரதமும் இருந்தார்கள்

இத்தனையும் செய்தும் இழி மனதில்
பித்தனாய் மாறி  பிறள் புத்தியால்
தத்துவம்  பேசி தவறான முடிவை-மனமொடிந்து
சத்தியம் தவறி சாகமட்டும் துணிந்ததால்

புரியவில்லை எனக்கு புதிரோன்றும் அறியவில்லை
புரிந்தவரையும்  காக்க பொருளேதும் சேர்க்கவில்லை
மடையனே மன்னிக்கமுடியாத இடையனே-விடையடைய
மனம்திறந்து  சொன்னாயா மனிதனாக நின்னாயா

மதி  இழந்தோரே  மனபயம்  கொண்டேரே
விதி முடியவில்லை வீணான எண்ணத்தால்
சதியாக சமூகத்தில் கேடாக செய்திட்ட-சண்டாளனே
சாதித்தது என்ன சாக்கடை எண்ணத்தால்?

இதுபோன்ற செய்கையால் எண்ணற்ற உயிர்கள்
இழிவான  பாதைக்கு இடர் தெரியாமல்
மலிவான செய்கையால்  மனம்கெட்டு-தவறாக
மனமுடைந்து  மதிகெட்டு  விதியென்று  சாகிறார்கள்

நஷ்டம் யாருக்கு ? நம்பியோற்கும் தண்டனையா?
கஷ்டமெல்லாம்  வந்ததால்  கடமை மறந்தாயே?
பெற்ற  பிள்ளைக்கு பிரச்னை  வேண்டுமா?-கஷ்டமெல்லாம்
உற்ற துணைவிக்கும் உன்னை வளர்த்த பெற்றோருக்கா?

மனிதனாக இரு  மனிதத்தை  மகிழ்ச்சியாக்கி
மதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்
புனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே
இனிமையாக ஏற்று எல்லோரையும் போற்று26 comments:

 1. Replies
  1. கூகிள் ட்ரான்ஸ்லிடேரஷன் ஆல் வந்த பிழையாக இருக்கும்

   Delete
  2. தவறு திருத்திவிட்டாகிவிட்டது நன்றி

   Delete
  3. நன்றி,திருத்தப்பட்டுவிட்டது

   Delete

 2. உங்கள் மின்அஞ்சல் முகவரியை
  எழுதவும்

  kambane2007@yahoo.fr

  ReplyDelete
  Replies
  1. kandasan@gmail.com
   சுட்டிக்காட்டியமைக்கு நன்றி ,தவறை திருத்தி விட்டேன்

   Delete
 3. மனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி
  மதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்
  புனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே
  இனிமையாக ஏற்று எல்லோரையும் போற்று

  ரசித்த வரிகள்.கவிதை ரொம்ப நல்லா இருக்குங்க.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ,தொடர்ந்து படிங்க

   Delete
 4. நஷ்டம் யாருக்கு ? நம்பியோற்கும் தண்டனையா?
  கஷ்டமெல்லாம் வந்ததால் கடமை மறந்தாயே?
  பெற்ற பிள்ளைக்கு பிரச்னை வேண்டுமா?-கஷ்டமெல்லாம்
  உற்ற துணைவிக்கும் உன்னை வளர்த்த பெற்றோருக்கா?

  சிந்திக்கும் விதமாக் கேட்டீர்கள் கவிஞரே.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க ,அவசரமாய் செய்யும் செயலால் அவதிப்படுவோர் சுற்றங்களே என்பதை உணர்த்த வேண்டி எழுதினேன்

   Delete
 5. மனிதனாக இரு மனிதத்தை மகிழ்ச்சியாக்கி
  மதியோடும் மதிப்போடும் மன தைரியத்தோடும்
  புனிதனாக வாழ்ந்து பார் புகழோடு வாழ்த்துவார்-அகிலமே
  இனிமையாக ஏற்று எல்லோரையும் போற்று

  சிந்தனை தந்த கவிதைக்குப் பாராட்டுக்கள்..

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க மிக்க மகிழ்ச்சி இதை படித்து பாராட்டுவதைவிட இதனால் பாதிக்கப்பட்டவருக்கு தெரிவித்தாலே போதும்

   Delete
 6. நஷ்டம் யாருக்கு என்பதனை நயம்படவே விளக்கமான கவிதையாக்கி தந்த கவிஞருக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்க சார் ,நிறைய தண்டனையை அனுபவிப்பது யார் என்று நினைத்தாலே நிறையப்பேர் அவசர முடிவை தவிர்ப்பார்கள்

   Delete
 7. நல்ல சிந்தனைக் கவிதை.

  ReplyDelete
 8. நன்றிங்கம்மா.தொடர்ந்து படிங்க

  ReplyDelete
 9. கவிதை அருமை கவியாழி ஐயா.

  ReplyDelete
  Replies
  1. நன்றிங்கம்மா.தொடர்ந்து படிங்க

   Delete


 10. தற்கொலை என்பது கோழைகள் செயல்!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா.ஆம் உண்மைதான் ஐயா கோழைகளின் செயல்

   Delete
 11. நல்ல சிந்தனை .

  ReplyDelete
  Replies
  1. ஆம்.நாட்டுக்கும் மனதால் நசிந்த மக்களுக்கும் தேவையான அறிவுரை

   Delete
 12. மனிதனாக இரு
  >>
  இதை விட, அறிவுரை சொல்ல வேறு வார்த்தைகள் தேவையே இல்லை. கவிதை வெகு அழகு. ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி ! நாங்க இப்படியும் சொல்லுவோம்ல !

   Delete
 13. //வாழ்ந்து பார் //
  மனதில் உறுதி வேண்டும்.
  நன்று

  ReplyDelete
  Replies
  1. படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் வாழ்வதற்கே அன்றி வீழ்வதர்க்கல்ல

   Delete

தங்களின் கருத்துக்கள் பயனுள்ளதாய் இருக்கும்