இணைந்து வா இறுதி காலத்திலாவது
அன்னைத் தமிழ் நாட்டிலே அன்பாய்
அப்பன் பிள்ளைகள் உறவிழந்து தினம்
துஞ்சுகின்ற நாளை எண்ணித் துயர்-இறுதியில்
தொண்டையைக் கம்ம செய்து தொடருதே
நடை பயில திறன் மறந்து
நடப்பதற்கு துணை யழைத்து
வளர்த்திட்ட பிள்ளையும் மறந்து-வாழ்வில்
கிடைத்திட்ட நட்புகளும் இறந்தும்
பஞ்சமில்லை பணம் பொருளுக்கும்
எஞ்சி நின்ற சொத்து மிழந்தும்
தஞ்சமென கிடைத்திட்ட இல்லமே-எனக்கு
மஞ்சமென நான் கிடந்து மடிவேன்
எந்தன் நண்பர்கள் எல்லோரும் சென்றும்
பந்தமுடன் பாசம் கேட்கும் எனக்கு
தரும் கடைசி பாலும் கொடுக்க -தவறும்
பிள்ளைகளால் இந்தநிலை ஏன் இறைவா
ஏழுகடல் தாண்டி என்ன பயன் ?
ஏழுலகம் போற்றி என்ன பலன் ?
படைத்தோரை மறந்த பாவிகளே-உனக்கும்
கிடைக்காதோ நாளை இந்த நிலை
சொந்தமும் சுற்றமும் பெற்றோரு மின்றி
இந்தநிலை பலர் இழித்தும் வாழ்வா?
பந்தம் பாசம் பண்பாட்டுடன் நேசமும்-தமிழ்
எந்தம் பண்பென விரைந்து வா
அன்னை தந்தையின் அன்பு வார்த்தையில்
அழகு தமிழின் நல்ல கருத்துக்களை
உன் பிள்ளைகள் மகிழ்ந்து கேட்க - எங்களோடு
இணைந்து வா இறுதி காலத்திலாவது
பாசத்திற்கு பரிதவிக்கும் முதியோர்களின்
ReplyDeleteமன நிலையை அருமையாகச் சொல்லிப் போகும்
கவிதை அருமையிலும் அருமை
நன்றிங்க சார் , இன்றைய தலைமுறையினர் எல்லோரும் சிந்திக்க வைக்க முயல்கிறேன்
Deletetha.ma 1
ReplyDeleteஅன்னை தந்தையின் அன்பு வார்த்தையில்
ReplyDeleteஅழகு தமிழின் நல்ல கருத்துக்களை
உன் பிள்ளைகள் மகிழ்ந்து கேட்க - எங்களோடு
இணைந்து வா இறுதி காலத்திலாவது
ஏக்கத்தை எழுதிய வரிகள்...
இருவருக்குமான உரிமையும் அன்பும் கிடைக்கவேண்டி.
Deleteநன்றிங்க மீண்டும் வாங்க
கழிவிரக்கம் நிரம்பிய கவிதை! இருந்த காலத்தில் வராத பிள்ளைகள் இனி இறக்கின்ற காலத்திலாவது இணைந்து வரட்டும்.
ReplyDeleteநன்றி,நீங்கள் வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்
Deleteமுதியோர்களுக்காய்ப் பாடிய அருமையான கவிதை. சொல்லழகும் பொருளழகும் இணைந்து ரசிக்க வைத்தன. நன்று.
ReplyDeleteசரியாய் சொன்னீங்க முதியோரை மதிக்கணும் உங்களைப்போல
Deleteநன்றி நண்பரே
முதியோர் வாழ்க!( நானும் முதியவன்)
ReplyDeleteநானும் முதியவனாவேன் நாளை எனக்கும் இதுபோலத்தான்
Deleteநன்றி ஐயா ,வந்ததுக்கு கருத்து தந்ததுக்கு
ஏழுகடல் தாண்டி என்ன பயன் ?
ReplyDeleteஏழுலகம் போற்றி என்ன பலன் ?
படைத்தோரை மறந்த பாவிகளே-உனக்கும்
கிடைக்காதோ நாளை இந்த நிலை.
இன்றைய சூழலை படம் பிடித்து காட்டும் வரிகள்.
நன்றி நங்கையே மீண்டும் வாங்க ஆதரவு தாங்க
Deleteகவிதை படித்ததும் மனசெல்லாம் கலங்கிப்போயிடுச்சி. ரொம்ப நல்லா இருந்திச்சி. நன்றி& வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றிங்க இதுபோல அனைவரும் உணரனும் ,முதியோருக்கு ஆதரவு பெருகனும்.
Deleteவந்ததுக்கும் வாழ்த்தியதுக்கும் நன்றி
முதியோரின் நிலையை தெள்ளத்தெளிவாக எடுத்து சொல்லி விட்டீர்கள். இளைய தலைமுறை யோசிக்கட்டும்!
Deleteநிச்சயம் இருவருக்கும் பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் பயன்தான்
Deleteமுதியோரை மதிக்கணும் கூடவே வைத்து கொள்ளவேண்டும்
நன்றிங்க வந்ததுக்கும் கருத்து தந்ததுக்கும்
சொந்தமும் சுற்றமும் பெற்றோரு மின்றி
ReplyDeleteஇந்தநிலை பலர் இழித்தும் வாழ்வா?
பந்தம் பாசம் பண்பாட்டுடன் நேசமும்-தமிழ்
எந்தம் பண்பென விரைந்து வா // அருமையான வரிகள்! நல்லதொரு உணர்வு பூர்வமான படைப்பு! நன்றி!
உங்களின் உணர்வுக்கு நன்றி
Delete''..அன்னை தந்தையின் அன்பு வார்த்தையில்
ReplyDeleteஅழகு தமிழின் நல்ல கருத்துக்களை
உன் பிள்ளைகள் மகிழ்ந்து கேட்க - எங்களோடு
இணைந்து வா இறுதி காலத்திலாவது..''
மிக நன்று. இனியவாழ்த்து.
Vetha.Elangathilakam.
எல்லா முதியோருக்குமான ஏக்கமாக நான் கருதுகிறேன்
Deleteவந்தமைக்கும் கருத்து தந்தமைக்கும் நன்றி
வயது போகுதென்று நினைக்க கொஞ்சம் பயமாத்தான் இருக்கு.ஆனாலும் இன்றைய பெற்றோர் பிள்ளைகளை நம்பாமல் தன்னம்பிக்கையோடு இருப்பதாகவே தெரிகிறது !
ReplyDeleteசரியான வாதமில்லை பெற்றோரின் மனது எப்படி தெரியும்? தன்னம்பிக்கை வேறு நம்பிக்கைவேறு ,மனதும் வேறு?
Deleteஎல்லா பெற்றோரும் பிள்ளைகளின் ஆதரவோடு இருக்கத்தான் ஆசைபடுவார்கள்